#tamilbabychakra
அப்பா! நான் அப்பாவைத் நினைத்து அழாத நாளில்லையே!
"அப்பா! உங்களது பிரிவு என்னை எவ்வளவு காயப்படுத்துகிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும், நான் இன்னும் உங்களை நினைத்து கொண்டேதான் இருக்கிறேன், அது எவ்வளவு வேதனையாக இருந்தாலும், நான் உங்களை இன்னும் அதிகமாகவே நேசிக்கிறேன்". எவ்வளவு வாரங்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் கடந்தாலும், ஒரு தந்தையை இழந்த வலி வாழ்நாள் முழுவதும் தனது மகனை அல்லது மகளை விட்டு போவதே இல்லை.
இறப்பு மற்றும் இறுதி சடங்குகள் நம் வாழ்க்கையின் கசப்பான பகுதி. யாரும் அதை மறுக்க முடியாது. இப்போதும் நான் அவரை நினைத்துகொள்ளும் ஒவ்வொரு முறையும் என் இதயம் அழுகிறது. இதுதான் நான் துக்கப்படக்கூடிய ஒரே வழி, அவர் கடந்துவிட்டார் என்ற உண்மையை என் புத்தி ஏற்றுக்கொண்டாலும் என் மனம் இன்னும் ஏற்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, எங்களை நிபந்தனையற்ற முறையில் நேசித்த உங்களை இழந்து தவிக்கிறேன் அப்பா. என் கண்ணில் கண்ணீரை கண்டாலே உதிரம் சிந்தும் உங்கள் நெஞ்சம், ஆனால் இன்றோ நான் விடும் கண்ணீரை துடைக்க உங்கள் கைகள் வராது என்ற போதிலும் உங்களுக்காகவே காத்துக்க கொண்டிருக்கிறேன். அரவணைக்கும் உங்கள் மார்பில் ஓரு முறை நான் சாய்வேனோ, இவை அனைத்தும் உங்களுக்கு கேட்கதோ என்று தினமும் இங்கே எங்குகிறேன். அப்பா என்று யார் அழைத்தாலும் என் விழியில் நீங்கள் வருகிறீர்கள்.
அவர் எப்போதும் எல்லாவற்றையும் எங்களுக்காகவே செய்தார். இப்போதும் கூட அவர் மரணம் எங்களுக்கு இத்தகைய இருளை தரும் என்பதை அறிந்திருந்தால் அவர் உள்ளம் தாங்காது போகும்.
முப்பது ஆண்டுகள் கடந்திருக்கிறது, துக்கம் என்னை இப்போது அச்சுறுத்தவில்லை, காலம் போக என் இதயம் பிரிவை ஏற்றுக்கொண்டது. என் வருத்தத்தைச் சரிசெய்ய நான் முயற்சிக்கவில்லை ஏனெனில் அதனுடன் வாழ கற்றுக்கொண்டேன், அந்த நினைவுகள் மறையவில்லை. என் தாந்தையின் நினைவுகளை சுமந்து கொண்டு வாழத்தான் வேண்டும் என்ற பக்குவம் அறிந்தேன்.
அவர் இன்னும் என் நிழல் போல என்னை பின்பற்றுகிறார், அவர் குரல் என் இதயத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, அவற்றை என்னுடைய இரகசிய இதய அறையில் இறுக்கமாக வைத்திருக்கிறேன், அவை என் வாழ்வின் போக்கிஷமாகும். துக்கம் என்பது உண்மையான அன்பிற்கு கொடுக்கப்படும் கொடூரமான பரிசு. துக்கம் முடிந்துவிடாது, அது அவ்வவ்பொழுது வந்து செல்கிறது. என் தந்தை என் கதாநாயகனாக இருந்தார், அவர் எப்போதும் என் கதாநாயகனாகவே இருப்பார்.
எங்கள் இதயங்களிலும், எண்ணங்களிலும் நீங்கள் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறீர்கள் அப்பா, நீங்கள் இல்லாமல் வாழ நாங்கள் கற்றுக் கொண்டாலும், உங்களை மிகவும் நேசிக்க கற்றுக்கொண்டோம், அப்பா.
அப்பா!
உன் கை பிடித்து நடத்தேனே
உன் சவ ஊர்வலத்தில் வருவதற்கா!
உன் மார்பினில் சுமந்தாயே
உன் இழப்பினை காண்பதற்கா!
உன் உதிரம் கசியுமே
இன்று எங்கேயோ நீ இருக்க
என் நெஞ்செல்லாம்
தீ பிடிக்க,
எப்போது காண்பேனோ உன்முகம்
நீதானே என் வாழ்கையின் அறிமுகம். இப்படிக்கு
உன் அன்பு மகள்
ரேவதி ராஜாமணி


Revauthi rajamani

Rebecca Prakash Dr. Mrinalini
priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Priya Hari Haran Gayathri Hemalatha Arunkumar raji திவ்யாஹரி ஹர்ஷித் Veera Ramya Sowmiya Prabu swetha subaaa Ramya Veerasingam Gopeka Sowbarnik varnika sundar raji ANCY FELIXRebecca PrakashSathya Kalaiselvenvarnika sundar
Rebecca PrakashRebecca PrakashKhushboo Chouhan

Saloni Shah

#BBCreatorsClub

Revauthi rajamani

#RAISINGSTARS
#BBCreatorsClub
#PREGNANCY
#BREASTFEEDING
#DIET
#TODDLERDEVELOPMENT
.#FathersDay #EqualParent #BabyChakraDad .
Baby Chakra

Sathya Kalaiselven

சூப்பர்! Dad the super heros 😊

JAI KUMAR (sanjai kumar)

உண்மை varigel

Recommended Articles

Get the BabyChakra app
Ask an expert or a peer mom and find nearby childcare services on the go!
Phone
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/110567