மேஷம்:

தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். தாராள பணப்புழக்கம் இருக்கும். வாகனத்தில் மிதமான வேகம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். சிறந்த நாளாகவே திகழும்.

ரிஷபம்:

உற்சாகமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர் பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். தந்தை வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.

மிதுனம்:

எண்ணங்கள் ஈடேறும் நாள். எடுத்த செயலில் வெற்றி கிட்டும். வியாபாரப் போட்டிகள் அகலும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். புதிய ஒப்பந்தங்கள் தொழில் ரீதியாக வந்துசேரும்.

கடகம்:

மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். தேவையான பணம் கையில் இருக்கும். இளைய சகோதரர் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். தந்தை வழியில் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் தொடர் ஆதாயமும் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரி யின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

சிம்மம்:

மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். ஆனாலும், புதிய முயற்சிகளை இன்றைக்குத் தவிர்ப்பது நல்லது. திடீர் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். சலுகைகள் இழுபறிக்குப் பிறகு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் செலவுகளும் அதிகரிக்கும்.

கன்னி:

வரவு திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். நண்பர்களின் உதவியோடு தொழிலில் அதிக முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். பிள்ளை களால் உதிரி வருமானங்கள் வந்துசேரும்.

துலாம்:

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் முயற்சி களுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். தந்தை வழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்துடன் வெளியிடங் களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும்.

விருச்சிகம்:

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகள் ஆதரவோடு நல்ல காரியம் ஒன்று நடைபெறும்.

தனுசு:

பிரயோகித்த சொற்களால் பிரச்சினைகள் ஏற்படும் நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. விரயங்களைத் தவிர்க்க விழிப்புணர்ச்சி தேவை.

மகரம்:

எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

கும்பம்:

போட்டியாகச் செயல்பட்டவர்கள் விலகும் நாள். நினைத்தகாரியம் நிறைவேறும் நிம்மதிக்காக ஆலயங்களை நோக்கிச் செல் வீர்கள். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். நட்பால் நன்மை ஏற்படும்.

மீனம்:

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களையும், வெளியிடங்களில் சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். மாலையில் நண்பர்களைச் சந்தித்து மகிழும் சந்தர்ப்பம் ஏற்படும். அவர்களால் ஆதாயம் கிடைப்ப தற்கான வாய்ப்பு ஏற்படும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபா ரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

#horoscope #dailyhoroscope


இனிய காலை வணக்கம்.


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/132579