கலவை பருப்பு ஹல்வா

தேவையானவை:

பயத்தம் பருப்பு - 1 கப்

உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

பச்சரிசி - 4 டேபிள்ஸ்பூன்

வெல்லம் பொடித்தது - 2 கப்

நெய் - 1/4 கப்

தண்ணீர் - 6 கப்

செய்முறை:

வெறும் வாணலியில் பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு, அரிசி ஆகியவற்றை தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். சற்று ஆறியதும், மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, சலித்துக் கொள்ளவும். மேற்கண்ட அளவிற்கு 2 கப் மாவு கிடைக்கும். இது கலவை மாவு எனப்படும்.

ஒரு வாணலியில் பாதி அளவு நெய்யை விட்டு, அதில் கலவை மாவு பொடியைச் சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும். இன்னொரு அடுப்பில் வெல்லத்தையும், தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும், இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.

வறுத்த மாவில், வெல்ல நீரை விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கை விடாமல் கிளறவும். மாவு கெட்டியாகி, பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது, மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கிளறி, இறக்கி, நெய் தடவிய ஒரு டிரே அல்லது தட்டில் கொட்டி ஆற விடவும். பிறகு கத்தியில் நெய் தடவி சதுர சதுரமாக வெட்டி எடுக்கவும்.

#tamilinfographics



Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/142376