தேவையானவை:
ஆட்டுறைச்சி எலும்பு – 250கிராம்
தக்காளி – 1
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி/ புதினா – வாசனைக்கு சிறுது
உப்பு – தேவைக்கு
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
பட்டர் – ஒரு மே.கரண்டி
வறுத்து அரைக்க:
சிகப்பு மிளகாய் – 3
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் -2 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
தனியா – 1டீஸ்பூன்
கடலைபருப்பு – 1/2 டீஸ்பூன்
பல்லாரி வெங்காயம் – 1/2
இஞ்சி – ஒரு சிறு துண்டு
பூண்டு – 6பல்
செய்முறை:
கடாயில் மேலே வறுக்க கொடுத்த பொருட்களை கருக விடாமல் வறுத்து, ஆறிய பிறகு சிறுது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்து எடுக்கவும்.
மட்டன் எலும்பு துண்டுகளை அலசி குக்கரில் மஞ்சள்தூள் , பட்டர் ஒரு கப் தண்ணீர் சேர்த்து 4- 5 வீசில் மட்டன் எலும்பு வேகும் வரை வேக வைக்கவும்.
நன்றாக விசில் அடங்கிய பிறகு குக்கரை திறந்து தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி , புதினா, தேவைக்கு உப்பு மற்றும் அரைத்து எடுத்த கலவையினை சேர்த்து நன்றாக கலந்து மீண்டும் அடுப்பினை ஆன் செய்து தேவைக்கு 2-3 கப் தண்ணீர் சேர்த்து குறைந்த தணலில் 10-15 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான மட்டன் எலும்பு மிளகு சூப் ரெடி
குறிப்பு: குழந்தைகளுக்கு சூப் செய்வதால் காரம் குறைத்துக்கொள்ளவும்.
படம்: கூகுள்
#tamilinfographics #babynutrition
Recommended Articles
BabyChakra User
Ahhhh ipa venum