செய்முறை:
துளிர் முருங்கைக் கீரை - 1 கப்(உருவியது),
உ. பருப்பு - 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - 10,
புளி - சிறிதளவு,
வெங்காயம்- 1 (அரிந்தது),
உப்பு- தேவையான அளவு,
பூண்டு- 4 பல்,
கடுகு - அரை ஸ்பூன்,
எண்ணெய் - அரை ஸ்பூன்.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்ததும், உ. பருப்பு, காய்ந்த மிளகாய் வறுத்து, அத்துடன் பூண்டு, வெங்காயம், முருங்கைக் கீரை சேர்த்து வதக்கி உப்பு, புளி சேர்க்கவும். சூடு குறைந்ததும் மிக்சியில் இக் கலவையை கரகரப்பாய் அரைக்கவும். சுவையான முருங்கைக் கீரை துவையல் தயார். இது சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட உகந்தது. இரும்பு சத்தும், சுவையும் நிறைந்தது.
படம்: கூகுள்
#tamilinfographics #babynutrition
Recommended Articles
BabyChakra User
Idhu pudusu