தேவையானவை:
ரவை – 1 கப் (100 கிராம்)
மைதா – 1 கப் (100 கிராம்)
அரிசிமாவு – ½ கப் (50 கிராம்)
மிளகு – 10
சீரகம் – ½ டீஸ்பூன்
பெருங்காயம் – ¼ டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
செய்முறை:
மைதா, ரவை, அரிசிமாவு இவை மூன்றையும் ஒரு கப் எடுத்துக்கொள்ளவும். இதில் இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
அதில் பெருங்காயம், உப்பு, மிளகு, சீரகம் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு கருவேப்பிலை,கொத்தமல்லி இலை போட்டு நன்றாக கலக்கவும், ½ மணி நேரம் ஊற வைக்கவும்.
தோசைக்கல்லில் கலவை செய்துள்ள மாவை பரவலாக ஊற்ற வேண்டும், கரண்டி வைத்து தேய்க்கக்கூடாது.
பிறகு சுற்றி எண்ணெய்யை ஊற்றி வேக வைக்கவும், பிறகு தட்டைப் போட்டு மூடவும். பின்பு பாதியாக மடித்துக் கொள்ளவும்.
நன்றாக மொரு மொரு என்று வரும் வரை வேக வைக்கவும்.
பிறகு ரவா தோசை வீட்டிலேயே தயார் ஆகிவிட்டது.
இதற்கு சட்னி, சாம்பார் வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
படம்: கூகுள்
#babynutrition
Recommended Articles