தேவையானவை:
இடியாப்பமாவு – 1கப் (200கிராம்)
முட்டை – 4 (அ) 3
முந்திரி – 5 துண்டுகள்
கடலைபருப்பு – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
சீரகம், மிளகு பொடி – ½ டீஸ்பூன்
கொத்தமல்லி, கருவேப்பபிலை – சிறிதளவு
வெங்காயம் – 50 கிராம் (அ) 2
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 50 கிராம்
செய்முறை:
இடியாப்பமாவை எடுத்துக்கொள்ளவும். அதில் சிறிது தூள் உப்பை சேர்க்கவும்.
பின்பு சூடான தண்ணீர் வைத்து மாவை கட்டியான பதத்தல் (சப்பாத்தி மாவு) போல பிசைந்து கொள்ளவும்.
இப்பொழுது மாவை உழக்கில் வைத்து இட்லி தட்டில் சுற்ற வேண்டும்.
அதை 6 – 8 நிமிடம் வேக வைக்க வேண்டும். இப்பொழுது இடியாப்பம் தயாராகி விட்டது. இதை ஒரு தட்டில் உலர வைக்கவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி அதில் கடலைப்பருப்பு, பச்சை மிளகாய் மற்றும் முந்திரி பருப்புயை சிறு சிறு துண்டுகளாக வெட்டிய வெங்காயத்தையும் போட்டு வதக்கவும்.
பிறகு 3 அல்லது 4 முட்டையை உடைத்து அதை காடாயில் போட்டு கிண்டவும்.
அதில் உப்பு, மிளகு, சீரகப்பொடியை ½ டீஸ்பூன் தூவ வேண்டும்.
முட்டையை வதங்கிய உடன் உலர வைத்துள்ள இடியாப்பத்தை கடாயில் போட்டு கிளரவும்.
அதில் கொத்தமல்லி, கருவேப்பிலை போட்டு இறக்கி விட வேண்டும். சூப்பராக முட்டை ஃப்ரைடு இடியாப்பம் சுவையாக இருக்கும்.
படம்: கூகுள்
#babynutrition
Recommended Articles