தேவையானவை:
பீன்ஸ் – 50கிராம்
காரட் – 50கிராம்
பட்டாணி – 50கிராம்
உருளைக்கிழங்கு – 50கிராம்
வெங்காயம் – 2, தக்காளி – 1
சோம்பு – ½ டீஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
கசகசா – ½ டீஸ்பூன், பூண்டு – 5
பட்டை, கிராம்பு, அன்னாச்சிப் பூ
மிளகாய் பொடி – 2 டீஸ்பூன்
கடலை மாவு – 1 டீஸ்பூன்
தேங்காய் & உப்பு
கடுகு, உழுந்து – ½ டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பீன்ஸ், காரட்,உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி போன்றவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பிறகு தேங்காய், சோம்பு, கசகசா, பூண்டு இவைகளை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உழுந்து போட்டு தாளித்து, அதனுடன் பிரியாணி சாமான் (பட்டை, கிராம்பு, அன்னாச்சிப் பூ) மற்றும் வெங்காயம் போட்டு வதக்கியவுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் பீன்ஸ், காரட், பட்டாணி, உருளைக்கிழங்கு போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
பிறகு அரைத்த தேங்காயை ஊற்றவும், தேவையான மிளகாய் பொடி , உப்பு சேர்த்து கிண்டவும்.
தண்ணிர் ஊற்றி வேக விட வேண்டும். அதில் கடலை மாவை தண்ணிரில் கரைத்து ஊற்றவும்.
குக்கரில் 3 விசில் வந்தவுடன் இறக்கி விடவும். இப்பொழுது சுவையான வெஜிடேபிள் குருமா ரெடி.
இதை சப்பாத்தி, பூரி, பிடித்தமான உணவு. உடல் நலத்திற்கு மிக நல்லது. பச்சை காய்கறி என்பதால் எளிதில் ஜீரணமாகும்.
படம்: கூகுள்
#babynutrition
Recommended Articles