#tamilbabychakra
#bbccreatorclub
#raisingstars
பீட்ரூட் புலாவ்
தேவையானவை சாதம் - ஒன்றரை கப், பீட்ரூட் துருவல் - 1 கப், வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கியது), இஞ்சி- பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 2, பட்டை - ஒரு சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, முந்திரி - 10, உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு.
செய்முறை கடாயில் எண்ணெய் விட்டு... பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும். இதுவும் நன்கு வதங்கிய பிறகு, பீட்ரூட் துருவல், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். எல்லாம் ஒன்றாக சேர்ந்து கலந்ததும்... சாதம் சேர்த்துக் கிளறி, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
Source விகடன்
Recommended Articles
BabyChakra User
Yummy