#tamilbabychakra
#bbccreatorclub
#raisingstars
ஆரஞ்சு புலாவ்
தேவையானவை பாசுமதி அரிசி - ஒன்றரை கப், கமலா ஆரஞ்சு ஜூஸ் - 2 கப், வெங்காயம் - ஒன்று (நறுக்கியது), பச்சை மிளகாய்-இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை, கிராம்பு - தலா 1, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, நெய் - தேவையான அளவு.
செய்முறை குக்கரில் நெய் விட்டு பட்டை, கிராம்பு தாளித்து... வெங்காயம் சேர்க்கவும். இதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, ஆரஞ்சு ஜூஸ் சேர்த்துக் கலந்து, அரிசி, உப்பு சேர்த்து குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும், அடுப்பை 'சிம்'மில் 10 நிமிடம் வைத்து இறக்கவும்.. ஆறியதும் புதினா, கொத்தமல்லிமல்லி தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால் ஆரஞ்சு ஜூஸ் ஒன்றரை கப், தேங்காய்ப் பால் அரை கப் சேர்த்தும் செய்யலாம்.
ஜூஸ் பிழிந்ததும் அதில் ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டால், கசப்பு ஏறாது.
Source விகடன்
Recommended Articles
BabyChakra User
Adengapa