#ExtraordiNAARI

#tamilbabychakra

#womensday

#superhero #mom #happywomansday

பெண்ணினத்தில் நம்பிக்கை உண்டா?

பெண் வீட்டின் கண்கள். ஒரு பெண் நினைத்தால் வீட்டையும் நாட்டையும் சிறப்பாக மாற்ற முடியும்.

முக்கியமான பெண்கள் எனது வாழ்க்கையில்

1. எனது அம்முச்சி ( அம்மா ஓட அம்மா) - Bravewoman

என்னோட அம்முச்சி கல்யாணமான கொஞ்ச வருடத்திலே தனியாக அவங்க ரெண்டு குழந்தைய கணவன் ஒத்தாச இல்லாம வளத்தினாங்க. ரொம்ப தைரியம் வாய்ந்த பெண். எனது அம்மாவ அப்புறம் என்னைய நல்லா வளத்தினாங்க. வேலை எல்லாம் ரொம்ப பொறுமையா திறமையா செய்வாங்க. என் அம்மாவுக்கு அப்பா இல்லாத கஷ்டத்த கொடுக்கல.

இப்ப என் அம்முச்சி எங்க கூட இல்ல. ஒரு பெரிய இழப்பு எங்க குடும்பத்திற்கு.

பொறுமை, திறமை, அமைதி இவங்ககிட்ட இருந்து கத்துக்கணும். அவங்க வாழ்க்கையில நடந்ததை எனக்கு சொல்லிக்கொடுத்தாங்க.

2. எனது அம்மா - Superwoman

காதல் திருமணம். அதனால வந்த பேச்சு, கஷ்டம் அனைத்தையும் சமாளுச்சு எங்க ரெண்டு பேரையும்( நான், எனது அக்கா) நன்றாக வளத்தினாங்க. அம்மா, அப்பாவுக்கு தொழில்ல, வாழ்க்கையில பயங்கர சப்போர்ட். உடம்பு மேல அவ்ளோ அக்கறையுடன் இருக்க சொல்லி கொடுத்தாங்க.

தனக்கு எதுவும் செய்ய மாட்டாங்க. எங்களுக்குனா சொல்லவே வேண்டாம். இப்பவும் எங்களுக்கு உதவி செய்ய ரெடியா இருகாங்க.

பாசம், முடிவெடுக்கும் திறன், சுகாதார நலன், மரியாதை இவங்ககிட்ட இருந்து கத்துக்கணும். கத்துக்கிட்டேன்.

3. எனது அக்கா - Wonderwoman

அக்கா இருந்தா தான் வீடே கல கலனு அடி தடியா இருக்கும். என்ன சண்டை வந்தாலும் பேசிடுவா, துணில ஆரம்பிச்சு சாப்பிடற பொருள் வரை எனக்கு கொடுத்துட்டு தான் அவ எடுப்பா. முதல் Friend, முதல் opinion, guide முதலில் என் அக்கா தான்.

பொறுமை, பாசம், விட்டு கொடுக்கும் பண்பு, உடலுக்கு முக்கிய துவம், (எனது) பேஷன் டிசைனர் அக்கா கிட்ட இருந்து கத்துக்கணும்.

4. எனது அத்தை - Specialwoman

யார் கிட்ட இருந்தும் எதுவும் ஆச பட மாட்டாங்க. அவங்க குழ‌ந்தைகளை ( எனது கணவரையும், அவர் தம்பியையும்) நல்லா வளத்தினாங்க. ரொம்ப சிக்கனமாக, ஆடம்பர செலவு செய்யாம குடும்பத்தை சிறந்த முறையில வாழ்க்கை நடத்தினாங்க.

நல்ல குணம், எதற்கும் ஆசை படாத மனம், பொறுமை இவங்ககிட்ட இருந்து கத்துக்கணும்.

பெண்மை ஒரு தவம்

பெண்கள் உலகிற்கு கிடைத்த வரம்!


Wow... Arumai

Enaku neenga vechirkara title laam rombha pidichirku

Priya
Neengalum share panunga please
priya dharshini

pattu
Participate panunga

Super oh super Sathya. Sema.

Sathya is a Brilliant women

Sree kanna participate please

i don't know Tamil


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/91717