நல்ல பழக்கத்தை குழந்தையா இருக்கும் போதே சொல்லி தரனும்
எதையும் திணிக்க வேண்டாம். பாட்டில் பால் மறக்க நினைத்தாலும் சரி, தொட்டில் பழக்கத்தை மறக்க நினைத்தாலும் சரி, குழந்தையின் சாப்பாட்டு பழக்கத்தை மாற்ற நினைத்தாலும் சரி, கை சூப்புவது மறக்க நினைத்தாலும் சரி குழந்தை முதல் பிறந்த நாள் கழித்து முயற்சி செய்யனும். எந்த பழக்கமானாலும் 1 வாரம் தான் கொஞ்சம் கஷ்டம். பிறகு கொஞ்சம் கொஞ்சமா மாரும். புத்தகம் படிப்பது, சிறு நீர் / மலம் கழிக்க கற்று கொடுப்பது, மரியதை கற்று கொடுப்பது அனைத்தும் முக்கியம் இதை மிஸ் பண்ணாதீங்க!
நல்ல விஷயத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். நம்மள பார்த்து தான் நம்ம சிறியவர்கள் செய்வாங்க. எல்லார்கிட்டேயும் நல்ல அன்பா பண்பா நடந்துக்க சொல்லி தரனும். நான் எல்லாத்து கிட்டயும் நல்லா பேசுவேன், உதவி கேட்டா தவராம செய்வேன், பாராட்டுவேன் ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் சரி, விருந்தோம்பல் பண்பாட்டை சரியா செய்வேன். இந்த பழக்கம் கண்டிப்பா என் குழந்தைக்கு இருக்கனம்னு நினைக்கிறேன்.
Revauthi Rajamani
Like
Reply
04 Sep 2019