மேம்பாட்டு மைல்கற்கள்: 49-54 மாதங்கள்
Personalizing BabyChakra just for you!
This may take a moment!

மேம்பாட்டு மைல்கற்கள்: 49-54 மாதங்கள்

cover-image
மேம்பாட்டு மைல்கற்கள்: 49-54 மாதங்கள்

வேடிக்கையை விரும்பும் ஒரு நான்கு வயது குழந்தை நீங்கள் கற்பனை செய்வதைவிட வேகமாக முதிர்ச்சியடைந்து விடுகிறாது.

வாழ்க்கையின் முதல் மூன்று ஆண்டுகளில், உங்கள் குழந்தை பல நடவடிக்கைகள் மூலம் ஒட்டுமொத்த மற்றும் நல்ல செயல் திறன்கள் மேம்பாட்டில் நேரத்தை செலவழித்து இருக்கும். உடல் நடவடிக்கைகளை நிகழ்த்தும்போது அவன் பெரும் நம்பிக்கையுடன் நிரப்பப்படுகிறான் என்பதில் ஆச்சரியமில்லை; அவர் அந்த நடவடிக்கைகளை நன்றாக கற்ப்பதற்கான கட்டம் இப்போது. நிஜ உலகத்திலிருந்து புதிய நடைமுறை திறன்களை கற்றுக் கொள்ளவது மற்றும் விளையாட விரும்புவது அல்லது அவனது வயதில் உள்ள மற்ற குழந்தைகளுடன்  இருப்பது.

 

இந்த கட்டத்தில் உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்த மற்றும்நல்ல செயல் திறன்கள் மேம்பாட்டு மைல்கற்கள் எவை?

 

உங்கள் நான்கு வயது குழந்தை அவரது உடல்ரீதியான செயல்பாடுகளில் நிறைய நம்பிக்கைகளை கொண்டு இருக்கலாம், ஆனால் உணர்வுபூர்வமாக அவன் தைரியமாகவோ அல்லது பயந்தோ இருக்கலாம். இரண்டு விஷயங்களிலும் அவன் வெளியே விளையாடும் போது, அவனை கண்காணிக்க வேண்டும்.

4 வயது குழந்தைகள் வீட்டிற்கு வெளியில் உலகைத் தொடங்கும் போது கற்கவேண்டிய ஒட்டுமொத்த செயல் திறன்களின்  பட்டியல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. குழந்தை பின்வருவனற்றை செய்ய முடியும்:

 • 10 விநாடிகளுக்கு மேல் ஒரு காலால் நிற்ப்பது
 • தத்தி நடப்பது மற்றும் குட்டிக்கரணம் செய்வது
 • எளிதாக மற்றும் விரைவாக மேலும், கீழும் நடக்கிறது
 • எளிதாக ஒரு மூனு சக்கர வண்டியை பயன்படுத்துகிறது

. ஒரு நேர் கோட்டில் சிறிய தூரம் நடக்கிறது

 

4 வயது குழந்தையின் நல்ல செயல் திறன்கள் இப்போது சமமாக முன்னேறியுள்ளது. குழந்தை பின்வருவனற்றை செய்ய முடியும்:

. ஒரு வட்டம், முக்கோணம், சதுரம் மற்றும் பிற வடிவங்களை வரைவது மேலும் புரிந்து கொள்வது

 • உடல் பாகங்களுடன் ஒரு நபரை வரைவது
 • ஒரு முட்கரண்டி மற்றும் கரண்டியை பயன்படுத்துவது
 • 10 க்கும் மேற்பட்ட தொகுதிகளை குவிப்பது

. ஒரு நெக்லஸ் செய்ய மணிகளை நூலில் கோற்பது

 • பகல் நேரத்தில், தனது சொந்த கழிப்பறை தேவைகளை கையாளுவது

 

என் குழந்தையின் உடல் மற்றும் செயல் திறனை மேம்படுத்துவது எப்படி?

 

உங்கள் குழந்தையின் மொத்த செயல் திறனை அதிகரிக்கும், 4 வயது குழந்தைக்கான மொத்த செயல் திறன்கள் நடவடிக்கைகளின் பட்டியல் இங்கே:

 

 • அவனை பூங்கா அல்லது தோட்டத்திற்கு வழக்கமாக எடுத்துச்செல்லுங்கள், அவனை அங்கு உள்ள அனைத்து சவாரிகளிலும் விளையாடவும் அனுபவிக்கவும் அனுமதியுங்கள்
 • மிக பெரிய அளவிலான பந்தை பயன்படுத்தி கால்பந்து, கிரிக்கெட் அல்லது பந்து எறிதல் விளையாடவும்
 • கடற்கரைக்கு அவரை அழைத்துச் சென்று சேறு அல்லது மணலில் அவருடன் விளையாடலாம்

 

நான்கு வயது குழந்தை அவரது திறமைகளை கூர்மைப்படுத்துவதற்காக, உங்கள் குறுநடை போடும் குழந்தையை நீங்கள் ஈடுபடுத்தக் கூடிய சில நல்ல செயல்திறன் நடவடிக்கைகள் இங்கே:

 

 • அவருக்கு வித்தியாசமான வரைபடம் மற்றும் நிறங்கள் கொண்ட புத்தகத்தைக் கொடுக்கவும்
 • உடுத்துவது போன்ற விளையாட்டுக்களை விளையாடலாம்

. பொம்மைகளுடன் அல்லது கைப்பாவைகளுடன் விளையாடலாம்

 • அவர் தனது சொந்த கழிப்பறை தேவைகளை நிர்வகிக்கும் போதெல்லாம் அவரை பாராட்டுங்கள்

 

4 வயதில் அறிவாற்றல் மற்றும் மொழி வளர்ச்சி மைல்கற்கள் யாவை?

 

4 வயது குழந்தைக்கான அறிவாற்றல் வளர்ச்சி பட்டியல் இங்கே:

 

. மிகச் சிறந்த முறையில் நேரத்தை புரிந்துக் கொள்ள முடியும்

 • 10 அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை எண்ணலாம்

. நினைவகம் மூலம் எண் 30 வரை எண்ண முடியும்

 • பெரும்பாலான எழுத்துக்களை அங்கீகரித்து அவரது சொந்த பெயரை எழுதவும் படிக்கவும் முடியும்

நிஜம் மற்றும் கற்பனைக்கு இடையே உள்ள வேறுபாட்டை புரிந்துக் கொள்ளுதல்

மிகப்பெரிய, நீண்ட, பரந்த முதலிய அளவுகோலை புரிந்துகொள்ளுதல்

 • சரியாக 4 அல்லது அதற்கு மேற்பட்ட நிறங்களை குறிப்பிட முடியும்

3 அல்லது அதற்கு மேற்பட்ட வடிவங்களை சரியாகக் குறிப்பிட முடியும்

உங்கள் 4 வயது குழந்தை இப்போது சாம்பியன் ஆக தொடங்கியிருக்கக் கூடிய 4 வயது குழந்தைக்கான மொழி வளர்ச்சி மைல்கற்கள் இங்கே:

 • இலக்கணம் புரிந்துகொள்ளுதல்

. ஒப்பீட்டளவில் சிக்கலான வாக்கியங்களைப் பேசுதல் (5 க்கும் அதிகமான வார்த்தைகள் கொண்ட வாக்கியங்கள்)

 • பெயர் மற்றும் முகவரி கூறுதல்

. கடந்தகாலம், எதிர்காலம், வினைச்சொற்கள், ஒருமை-பன்மை போன்றவற்றைப் பயன்படுத்துவது

. 1000 வார்த்தைகள் வரை தெரிந்துகொண்டு பேச முடியும்

 

நான்காவது வயதில் குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்க நான் என்ன செய்ய வேண்டும்?

 

இதுவரை நாம் 4 வயதுடையவர்களுக்கு அறிவார்ந்த மற்றும் மொழி மைல்கற்கள் பட்டியலைப் பார்த்தோம். அவர்களின் அறிவை கூர்மைப்படுத்தி மற்றும் மொழி வளர்ச்சி ஊக்குவிக்கும் சில நடவடிக்கைகள் பின்வருமாறு:

 

. கதை முடிவில் ஒரு தார்மீகக் கோட்பாடு கொண்ட சிறு கதை புத்தகங்களை சிறு குழந்தைகளுடன் படிக்கவும்

கதையின் சில பகுதிகளை அல்லது கதையின் தார்மீக விளக்கத்தைக் குழந்தையை கூறுமாறு கேளுங்கள்

. அவளுடன் / அவருடன் பாடல்களைப் பாடுங்கள்

நர்சரி ரைம்ஸை ஓதிக்காட்டவும்

 • அவரை களிமண் அல்லது மாவுடன் விளையாட அனுமதிக்கவும் மற்றும் பல்வேறு விலங்குகள் அல்லது வடிவங்களை செய்யும்படி அவரை கேட்கவும்
 • உங்கள் குழந்தையிடம் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி பேசவோ அல்லது சிறிது காலத்திற்கு முன்பு நடந்ததை பற்றி கூறவும் ஊக்குவிக்கவும்

 

உங்கள் 4 வயது குழந்தையிடம் என்ன சமூக வளர்ச்சி மைல்கற்கள் முன்னேறுகின்றன?

 

உங்கள் தன்னலம் உடைய குழந்தை இப்போது மற்றவர்களின் உணர்ச்சிகளின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்கிறது, மேலும் அவரது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும்போது முரண்பாடுகளை கையாள முடிகிறது.

அவரது சமூக உணர்ச்சி கோளத்திற்கான 4 வயது குழந்தைக்கான வளர்ச்சி மைல்கற்கள் பட்டியல் இங்கே:

 • மேலும் சமூகமயமாகி, பிற குழந்தைகளுடன் விளையாடுவதை விரும்புகிறது
 • அவரது நண்பர்களை மகிழ்விக்க விரும்பலாம்
 • மேலும் சுதந்திரம் அடைவது
 • உடல் ரீதியான சண்டைக்கு மாறாக வார்த்தைகளில் அதிருப்தி தெரிவிப்பது

. மற்றவர்களின் உணர்ச்சிகளை அங்கீகரிப்பது

 

மறுப்பு: கட்டுரையின் தகவலானது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சையளிப்பதற்காக ஒரு மாற்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை அல்லது உட்படுத்தவில்லை. எப்போதும் உங்கள்  மருத்துவரின் ஆலோசனையைத் தேடுங்கள்.

 

#babychakratamil