• Home  /  
  • Learn  /  
  • மகப்பேறிலிருந்து மீண்டு வருகிறீர்கள் – யோனி வழியாக பிறப்பு
மகப்பேறிலிருந்து மீண்டு வருகிறீர்கள் – யோனி வழியாக பிறப்பு

மகப்பேறிலிருந்து மீண்டு வருகிறீர்கள் – யோனி வழியாக பிறப்பு

22 Mar 2019 | 1 min Read

Baby 360 Degrees

Author | 62 Articles

நீங்கள் மிகவும் விரிவான வாழ்க்கை சவாலான தருணங்களை கடந்து வந்துள்ளீர்கள்! ஒரு புது உயிரை பிரசவித்து தாய்மை அடைந்திருக்கிறீர்கள். அதிக அன்புடனும் வலியுடனும் என்று சொல்லவே வேண்டாம்!

 

ஒரு புதிய பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதால், உங்களை கவனித்துக்கொள்வது அவசியம். குறிப்பாக சுகப்பிரசவமாக இருந்தால் (யோனி வழியாக பிரசவம்) உங்களை பராமரித்து மீண்டுவருவது மிகவும் அவசியம்.

உங்கள் கர்ப்பம் ஒன்பது மாதங்கள் நீடித்தது, இந்த நேரத்தில் பல மாற்றங்களைச் சகித்திருக்கிறது. இந்த மாற்றங்கள் தங்கள் அசல் நிலைக்கு மாற்றியமைக்க சிறிது காலம் எடுக்கின்றன. கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பிலிருந்து உங்கள் உடம்பு மீண்டு வர தோராயமாக 18 மாதங்கள் ஆகும்.

 

உங்கள் வயிறு இன்னும் 7 மாத கர்ப்பிணிக்குரியதாக இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள், மேலும் மிகவும் தளர்வான மற்றும் மந்தமானதாக தோன்றுகிறது. இது முற்றிலும் சாதாரணமானது. உங்கள் கருப்பை பிரசவத்திற்கு பின் சுருங்க தொடங்கும் மேலும் கருப்பை அதன் அசல் வடிவம், அளவு மற்றும் நிலையை அடைந்து இடுப்புக்குழிக்குள் செல்ல தோராயமாக 6 முதல் 8 வாரங்கள் ஆகின்றன.

 

  • நீங்கள் நடக்கும்போதும் நேராக அமரும் போதும் வயிற்றுக்கான பெல்டை அணிந்துகொள்ளலாம். இது உங்கள் வயிற்று தசைகளுக்கு ஆதரவளிப்பதோடு மீண்டு வருவதை துரிதப்படுத்துகிறது.
  • நஞ்சுக்கொடி வெளியேற்றப்பட்டதும் மகப்பேறுக்கு பிந்தைய இரத்தப்போக்கு அல்லது லோச்சியா உடனே தொடங்குகிறது. இது அடர்த்தியாக பளிச்சென சிவப்பு நிறத்தில் முதல் சில நாட்களுக்கு வந்து பின் மெல்ல குறையும். பத்து நாள் பிறகு அவ்வப்போது ஸ்பாட்டிங் இருக்கலாம். கர்பப்பை லைனிங் உதிர்ந்து நஞ்சுக்கொடி இருந்த இடம் குணமாவதால் இது ஏற்படுகிறது. இந்த காலகட்டத்தில் யோனிக்குள் எதையும் நுழைக்காதீர்கள். இதனால் தொற்று எற்படலாம்.
  •  உங்களுக்கு யோனியில் தையல்கள் போடப்பட்டிருந்தால் தளர்வான பருத்தி உள்ஆடைகள், பருத்தியினால் ஆன பிரசவத்திற்கான பேடுகளை அணியவும். மேலும் ஒவ்வொரு முறை கழிவறை பயன்படுத்தும்போதும் வெதுவெதுப்பான நீரில் யோனியை சுத்தம் செய்யவும். மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஆண்டி-இன்ஃபெக்டிவ் ஆயின்மெண்டை உபயோகிக்கவும்.
  •  வேகமாக நடப்பது, மாடிப்படி ஏறுவது, காலை சம்மனமிடவோ அல்லது விரித்து வைக்கவோ உங்களுக்கு சிரமமாக இருப்பதால் தவிர்க்க நினைக்கலாம்

கழுத்து, தோள், கை, கால் மற்றும் கனுக்காலை இழுப்பது போல் மென்மையான உடற்பயிற்சியை மேற்கொள்வதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதேபோல் கீகெல்ஸ் செய்வதால் உங்கள் யோனி தசைகள் மீண்டு வர உதவும்.

  •  அனைத்து சத்துக்களும் இருப்பது போல் சமச்சீரான உணவை எடுத்துக்கொள்ளவும். ஏதாவதொரு குறிப்பான உணவை தவிர்க்கவோ அல்லது அதிகம் எடுத்துக்கொள்ளவோ வேண்டாம். மிதமாக எதையும் உண்ணவும்.
  •  நிறைய திரவங்களை எடுத்துக்கொள்ளவும், இதனால் நீர்சத்து குறையாது. மேலும் பால் சுரக்க இது உதவும்.
  •  உங்கள் உடம்பு சொல்வதை கேளுங்கள். தேவைப்படும்போது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். வழக்கமான வேலைகள் சில நாட்களுக்கு செய்ய நேரமிருக்காது. முதல் சில வாரங்களுக்கு குழந்தையினை பார்த்துக்கொள்வதில் பெரும்பாலான நேரம் போய்விடும்.

மகப்பேறுக்கு பிறகு 15 மற்றும் 40 ஆவது நாட்களில் மருத்துவரை சந்திக்கவேண்டும். இதை தள்ளிப்போடவேண்டாம். இந்த சந்திப்பின்போது உங்கள் தையல் குணமாகிறதா மற்றும் கர்ப்பப்பை சரியாக சுருங்குகிறதா என்பதை சோதிப்பார்.நல்ல செய்தி என்னவென்றால், யோனி  வழியாக சுகப்பிரசவம் ஆகும் பெண்கள் ஆரோக்கியமாக இருப்பதுடன் சாதாரண வாழ்க்கைமுறையை குழந்தை பிறந்து 40 நாட்களில் திரும்பப்பெறுகிறாரகள்.

 

#babychakratamil #babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you