25 Mar 2019 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
உங்களுக்கு கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் பல பிரச்சனைகளில் நெஞ்செரிச்சல் – உங்கள் உணவுக்குழாயில் வயிற்று அமிலம் கசிவதால் ஏற்படும் ஒரு எரியும் உணர்வானது பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒரு பொதுவான கர்ப்பகால பிரச்சனை ஆகும்.
ப்ரோஜெஸ்டிரான் என்ற ஹார்மோன் உங்கள் தசைகளை கர்ப்பத்தின்போது தளர்த்துகிறது. இது உணவுக்குழாயில் அமிலத்தை வைத்திருக்கும் வயிறு வால்வையும் தளர்த்துகிறது. அதோடு, வளரும் குழந்தை வயிற்றை முட்டுவதால், அங்கிருக்கும் அமிலம் உணவுக்குழாய்க்கு வலுவாக தள்ளுகின்றது. இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
சரி, இங்கே நெஞ்செரிச்சல் நீக்கும் சில குறிப்புகள் உள்ளன:
ஒவ்வொரு 2 மணிநேரமும் சாப்பிடுங்கள்: சிறிது சிறிதாக அடிக்கடி எடுத்துக்கொள்ளும் உணவு உடம்பு செரிப்பதற்கு உதவுவதோடு வயிற்று அமிலத்தையும் தளர்த்துகிறது.
நெஞ்செரிச்சல் ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்க்கவும்: காரமான, எண்ணெய், புளிப்பு, சிட்ரஸ் மற்றும் சாக்லேட் மற்றும் காஃபின் போன்ற சில உணவுகள் நெஞ்செரிச்சலைத் தூண்டும்.
திரவங்களை உட்கொள்ளவும்:
சூப்கள், தேங்காய் தண்ணீர், ஸ்மூதீ, பழச்சாறுகள், மோர் போன்ற பிற திரவங்கள் மற்றும் தண்ணீரைக் குடிக்கவும். இதனால் நெஞ்செரிச்சல் சற்று மட்டுப்படும்.
தூக்கம்: சாப்பிட்ட பிறகு உடனடியாக தூங்கச் செல்லாதீர்கள். நிங்கள் படுக்கைக்கு செல்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக உணவை உட்கொள்ளவும். இது செரிமானத்திற்கு உதவுவதோடு, நெஞ்செரிச்சலையும் தவிர்க்கிறது.
அமில எதிர்ப்பி (ஆண்டாசிட்) எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்: உங்கள் உடல் நிலைக்கேற்ற ஆண்டாசிட்டை பரிந்துரைக்குமாறு உங்கள் மருத்துவரிடம் கேட்கலாம்.
சாப்பாட்டிற்கு பிறகு சிறிது நடைப்பயிற்சி செய்யலாம்: இது ஜீரணிக்க உதவுவதுடன் நெஞ்செரிச்சலை தவிர்க்கிறது.
தலையணையில் உங்கள் தலை சாய்ந்தாற் போல் படுக்கவும்: இதனால் வயிற்று அமிலம் உணவுக்குழாய்க்குள் போகாது.
தளர்வான ஆடைகளை அணியவும்: இடுப்பை சுற்றி எந்த விதத்திலும் இறுக்கமாக வைக்கவேண்டாம்.
இடுப்பை வளைத்து குனிந்து எதையும் எடுக்கவேண்டாம்: உட்காரும்போதோ அல்லது கீழே உள்ள எதையும் எடுக்கும்போதோ முட்டியை மடக்கி எடுக்கலாம்.
கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் நிவாரணத்திற்கு சில இயற்கை வைத்தியங்கள் பின்வருமாறு:
கால்சியம் கிடைக்கும் ஒரு சிறந்த மூலப்பொருளான இது வயிற்றை அமைதிப்படுத்தும்.
அமில எதுக்களிப்பு வாரம் இரண்டு மடங்காக அதிகமானால், அல்லது இரண்டு வாரங்களுக்கு மேலாக மருத்துவரை அனுகாமல் மருந்துகளை எடுத்துக் கொண்டபின்னும் உங்களுக்கு நிவாரணமில்லையென்றால், உங்களுக்கென்று குறிப்பிட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மருந்துகள் தேவைப்படலாம் – அதை கண்டறியவும் சிகிச்சையளிக்கவும் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்
A