அறுவைசிகிச்சை விட இயற்கை பிறப்பின்போது பெறும் 10 நன்மைகள்

cover-image
அறுவைசிகிச்சை விட இயற்கை பிறப்பின்போது பெறும் 10 நன்மைகள்

பல ஆண்டுகளாக, தாய்மார்கள் சிசேரியனைவிட சுகபிரசவத்தை பாதுகாப்பானதாக எண்ணுகிறார்கள். அனைத்து பிரசவத்திற்கும் மருத்துவ தலையீடு தேவைப்படுவதில்லை. எனினும், இதைப்பற்றிய போதிய அறிவு இல்லாததால், பெரும்பாலான பெண்கள் அவர்களுக்கு சுகபிரசவம் ஆகிற திறன் இருந்தும் அறுவைசிகிச்சையை தேர்வு செய்கின்றனர். இந்த கட்டுரையில், சிசேரியனை விட சுகபிரசவம் எவ்வாறு சிறந்தது என விளக்கும் பத்து நன்மைகளை பட்டியலிடுகிறோம்.

 

தாய்ப்பாலூட்டல் மூலம் ஒரு உறவை நிறுவுதல்

 

சிசேரியன் செய்யும் முன், பெண்ணுக்கு மறத்துப்போவதற்கு மருந்து அளிக்கப்படுகிறது. முதல் 24 மணிநேரம் தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாய்க்கும் குழந்தைக்கும் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும் மிக முக்கியமான தருணமாகும். மயக்க நிலையில் இருப்பதால் அறுவைசிகிச்சைக்குபின் பாலூட்டுதல் குறைகிறது. இதனால் அந்த தெய்வீக அனுபவத்தை இழப்பீர்கள்.

 

சுகபிரசவம் உங்களில் ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்தும்

 

சுகபிரசவத்தின்போது கடைசியாக முக்குதல் உங்கள் உடலில் ஆக்சிடோசினை வெளியிடும், இது ’அன்பு ஹார்மோன்’ என்று அழைக்கப்படும். ஆக்ஸிடோசின் சுரப்பதால் உடனடியாக உங்களை குழந்தையுடன் இணைக்க உதவுகிறது, பாசம் ஏற்படச்செய்கிறது. ஆக்சிடோசின் உங்களை மகிழவும் வைப்பதால், சுகபிரசவத்தில் ஹார்மோன் சமநிலை ஏற்படுகிறதோடு பிரசவத்தினால் ஏற்பட்ட அலுப்பு தீர்ந்து மகிழ்ச்சியடைகிறீர்கள்.

 

விரைவாக மீண்டுவருவது

 

சுகபிரசவத்தினால் பெண்கள் தங்கள் இயல்பான வாழ்க்கைக்கு மூன்று நாட்களுக்குள் திரும்புகின்றனர். எனினும், சிசேரியன் செய்யப்பட்டால் அறுவை சிகிச்சைக்கு பின் தையலை பிரிக்கவேண்டும் என்பதால், மருத்துவமனையில் சில நாட்கள் தங்கவேண்டி இருக்கும்.

 

இரத்த இழப்பை தவிர்க்கலாம்

 

சுகபிரசவத்தில் இரத்த இழப்பை தவிர்க்கலாம், இது சிசேரியனில் சில நேரங்களில் இயலாது. மேலும், சில நேரங்களில் இரத்த இழப்பால் மரணம் நேரலாம். அதனால், மருத்துவர் தாய் இருவரும் சுகபிரசவத்தையே விரும்புகின்றனர்.

 

பிரசவ வலி முக்கியமானது

 

பெண்களுக்கு கொடுக்கப்படும் வலி நிவாரணிகளால் இயற்கை விதியில் அது இடையிட்டு பிரசவ வலியினை குறைக்கிறது, மேலும் வெகு நேரம் நீடிக்கும். குழந்தை பாதுகாப்பாக வெளியே வர சுருங்கி விரிதல் மூளைக்கு தெரிவிப்பதால் பிரசவம் முடிந்தவரை எளிதாகிறது.

 

தொற்று அபாயங்கள் ஏதும் இல்லை

 

சிசேரியனின்போது போட்ட தையல்கள் உள்ளே தொற்றுக்களை ஏற்படுத்தலாம். அதனால், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இயற்கை முறையில் பிரசவித்துக்கொள்வதால் சிக்கல்களை தவிர்க்கலாம்.

 

பிரசவத்திற்கு பின் கனமான எடையை தூக்க முடியும்

 

சிசேரியன் செய்யும் பெரும்பாலான பெண்களுக்கு கடினமான வேலைகள் செய்யும்போது வலியை அனுபவிக்கின்றனர். முக்கியமாக கனமான எடையை தூக்கும்போது. இயற்கையான சுகபிரசவத்தில், இது போன்ற எந்த பிரச்சனையும் சந்திக்காமல் சாதாரண வாழ்க்கையினை தொடரலாம்.

 

பிரசவத்தின் போது உங்களுடைய ஈடுபாடும் இருக்கும்

 

சுகபிரசவத்தில் பொதுவாக நீங்கள் மருந்தெதுவும் உட்கொள்ளவேண்டாம். அதனால், குழந்தை பிறப்பு என்னும் இந்த அழகான தருணத்தை முழுவதுமாக உணர்ந்து ஈடுபடலாம்.

 

சுகபிரசவம் மலிவானது

 

இந்தியாவில் சிசேரியன் செய்ய ரூ. 30,000 முதல் 50,000 வரை தனியார் மருத்துவமனையில் செலவாகும். எனினும், சுகபிரசவத்திற்கு ரூ. 15,000 க்கும் குறைவாகவே செலவாகிறது.

 

மருந்துகள் கிடையாது

 

சுகபிரசவத்தில் மட்டுமே எந்த மருந்தோ சிகிச்சைமுறையோ தேவையில்லை. இது குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதை உறுதிசெய்வதால், இதையே பெரும்பாலான தாய்மார்கள் விரும்புகின்றனர்.

 

இயற்கையாக சுகபிரசவம் மூலம் பிறக்கும் குழந்தைகளில் நேர்மறை விளைவுகள்

சுகபிரசவத்தில் சுரக்கும் அழுத்த ஹார்மோன்களால் பிரசவ செயல்முறையில் குழந்தையை சீராக சுவாசிக்க வைக்கிறது. இதனால் குழந்தையின் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.  குழந்தையின் மூளை மற்றும் இயக்க திறன்களையும் சுகபிரசவம் மேம்படுத்த உதவுகிறது. கடைசியாக, தாய்ப்பால் ஊட்டுவதனால் குழந்தை தாயுடன் மேலும் பிணைப்புடன் இணைய உதவுகிறது.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!