உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது? வாரம் 14

உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது? வாரம் 14

27 Mar 2019 | 1 min Read

Sonali Shivlani

Author | 213 Articles

உங்கள் குழந்தை இப்போது 10 செ.மீ. கள் நீளமும் தோராயமாக 28 கிராம்கள் எடையும் கொண்டிருக்கும். உங்கள் குழந்தையின் முகம் இப்போது வளர்ந்து வருகிறது மேலும் அவள் / அவன் ஓர கண்ணால் பார்க்க, முகத்தை சுழிக்க, பழிப்பு காட்ட மற்றும் சிரிக்கவும் முடியும். குழந்தையின் சிறுநீரகங்கள் இப்போது சிறுநீர் உற்பத்தி செய்கின்றது, அது அமினோடிக் திரவத்துக்குள் செல்கின்றது.

 

இந்த வாரத்தின் முக்கிய மேம்பாடுகளில் லங்கோவின் வளர்ச்சியும் ஒன்றாகும். லங்கோ என்பது உங்கள் குழந்தையின் உடம்பு முழுவதும் வளரும் சிறு மென்மையான முடியாகும். உங்கள் குழந்தையின் உணர்திறன் மிக்க சருமத்தை பாதுகாக்க லங்கோ வளர்கிறது. இது குழந்தை பிறக்கும் முன் உதிர்ந்து மாற்றாக தடித்த அடர்த்தியான முடி வளர்கிறது.

 

உங்கள் குழந்தைக்கு இப்போது புருவம் வளர்வதோடு தலையிலுருந்து முடியும் அரும்ப தொடங்குகிறது.

 

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

 

சோர்வும் சோம்பல் உணர்வும் இந்த வாரத்தில் இருந்து குறைய தொடங்கும். குழந்தை பிறப்புக்கான வகுப்பில் நீங்கள் சேரவில்லையெனில், இப்போது சேரலாம். வழக்கமான உடற்பயிற்சி உங்கள் தசைகளை பிரசவத்திற்கு தயாராக்குவதோடு வலிகள் இல்லாமல் இருக்க செய்யும்.

 

உங்கள் உடம்பில் வயிற்றின் மத்தியை நோக்கி போகும் ஒரு கருத்த கோடு உருவாகலாம். இது லினிய நிக்ரா என்று அழைக்கப்படும். இந்த கோடு, பிரசவித்த பிறகு மாற்ற ஹார்மோனால் மாற்றங்கள் மறைவதை போல், இதுவும் மறைந்துவிடும்.

 

உடல் வளர்ச்சி

 

உங்கள் தொப்பை வளர்வதால், நீங்கள் கூன் போட்டு உட்காரும் படி ஆகலாம். உங்கள் தோல்களை பின்னுக்கு இழுத்து நேராக உட்காருங்கள். இதனால் முதுகுவலி ஏற்படாமல் தடுக்கலாம்.

 

உணர்ச்சி மேம்பாடு

 

உங்கள் குழந்தையின் இதய துடிப்பை நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்க நினைக்கலாம், இது உங்களுக்கும் குழந்தைக்கும் உண்டான பினைப்பை அதிகரிக்கும். உங்கள் ஸ்மார்ட் போனில் உங்கள் குழந்தையின் இதய துடிப்பை கேட்கவும் அதை பதிவு செய்து கொள்ளவும் இப்போது பல ஆப்கள் உள்ளன. இருந்தாலும் டோப்லர் போல அதிக உணர்திறன் கொண்டதாக இது நீருபிக்கப்படவில்லை. மறுபுறம், இதய துடிப்பு கேட்கவில்லை என்றால் உங்களை இது பீதியடைய செய்யலாம.

 

சிவப்பு கொடிகள்

 

தொடர்ந்து சரியான உணவை உட்கொண்டு கர்ப எடை ஆரோக்கியமானதாக இருப்பதை கண்காணியுங்கள். உடல் எடை இழக்க கடினமாக ஆக்கும், ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்திடுங்கள். உங்களது கர்ப்பம் பாதுகாப்பானதாக இருப்பதால் இப்போது நீங்கள் சிறிது தூர பயணத்தை ஆட்டோவில் செல்லலாம். எனினும், ஒட்டுநரை மெதுவகா ஒட்டச்சொல்லி, உங்களுக்கு அசெளகரியமாக உணரும் போது நிறுத்த சொல்லலாம்.

 

பாட்டி கதைகள்

 

இந்திய கலாச்சாரத்தில் மிக பிரபலமான கட்டுக்கதை  என்னவெனில் லினியா நிக்ரா கோடு தோன்றுவது வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் மட்டுமே என்பது. எனினும், பெரும்பாலான பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் இது தோன்றுவதால், இந்த கதை ஆண்டுகளில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய கதை என்னவேனில் நேரான மென்மையான கோடு பெண் குழந்தை என்றும் வளைந்த கோடு ஆண் குழந்தை என்றும் உள்ளது. இதற்கு எந்த விஞ்ஞான பூர்வமான அதிகாரமும் இல்லை!

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you