• Home  /  
  • Learn  /  
  • உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 17
உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 17

உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 17

29 Mar 2019 | 1 min Read

Sonali Shivlani

Author | 213 Articles

இப்போது உங்கள் சருமம் மினுமினுப்பாக உள்ளது! உங்கள் தொப்பை நன்றாக வெளியில் தெரியும்! கூடுதலாக உங்கள் குழந்தையின் நீளம் 12 செமீ மற்றும் 100 கிராம் எடை கொண்டிருக்கும். இந்த வாரத்தில், உங்கள் குழந்தையின் சருமத்திற்கடியில் கொழுப்பு உருவாக ஆரம்பித்திருக்கும், மேலும் இது குழந்தை பிறக்கும் வரை தொடரும். வெப்ப உற்பத்தி மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் உதவுவதால் கொழுப்பு முக்கியமாகும்.

 

உங்கள் கருப்பை இப்போது உங்கள் தொப்புள் மற்றும் இடுப்பு எலும்பு இடையே உள்ளது, மேலும் உங்கள் குழந்தை நஞ்சுக்கொடியை விட பெரிதாக இருக்கிறது. நஞ்சுகொடி உங்கள் குழந்தையை ஊட்டமளிப்பதில் முழு பங்களிக்கிறது, உங்கள் தொப்புள் கொடி இப்போது உங்கள் குழந்தையின் உயிர்நாடியாகும்.

 

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

 

உங்கள் உடலின் திரவ அளவுகள் இப்பொழுது அதிகரித்து வருகின்றன, இதனால் நீங்கள் சூடாக உணர்கிறீர்கள்! பல கர்ப்பினிப் பெண்கள் இந்த நேரத்தில் எப்போதையும் விட அதிகமாக வியர்ப்பதாக உணர்வார்கள், அவ்வப்போது குளிப்பதனால் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம், மேலும் பருத்தி ஆடைகளை அணிவது வசதியாகவும் சருமம் சுவாசிக்கவும் உதவும்.

 

நீங்கள் எப்போதும் மூக்கு உறிஞ்சுவது போல் உணரலாம்,  உங்கள் மூக்கு பாதைகள் அவ்வப்போது அடைபடுவதால் இது மிகவும் பொதுவானது. கர்ப்பத்தின்போது ஹார்மோன்கள் உங்கள் பார்வை புள்ளியை அதிகரிப்பதால் இப்போது கண் பரிசோதனை செய்ய சரியான நேரமாகும். சின்ன எழுத்துக்களை படிக்க நீங்கள் சிரமபட்டால் அல்லது மங்கலான பார்வையை உணர்ந்தால், கண் மருத்துவரை அனுகலாம்.

 

உடல் வளர்ச்சி

 

உங்கள் தொப்பை சீராக வளர்கிறது, ஆனாலும் மிகவும் கனமாகவில்லை. சரியான காலணியை பயன்படுத்தவும், ஏனெனில் வசதி இல்லாத ஷூக்கள் மற்றும் நீண்ட நேரம் நிற்பது உங்கள் கால்களை காயப்படுத்தலாம்.

 

விரைவில் உங்கள் மருத்துவர் ஒரு அனோமலி ஸ்கேனுக்கு பரிந்துரைப்பார். இது உங்கள் குழந்தையின் உடல் பாகங்களில் ஏதேனும் முறன் இருக்கிறதா என்று சோதிக்கும் ஒரு விரிவான அல்ட்ரா சவுண்ட் ஆகும். உங்கள் குழந்தையை நன்றாக பார்க்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதால் உங்கள் துணைவரை உடன் அழைத்துச் செல்லவும். உங்கள் குழந்தை உதைப்பதையும் விரல் சூப்புவதையும் காணலாம்! உங்கள் கர்ப்பத்தின் ஒரு முக்கியமான மைல்கல்!

 

பெரும்பாலான க்ளீனிக்குகள் இந்த ஸ்கேனின் படங்கள் மற்றும் சிடிக்களை உங்களுக்கு வழங்குவர், நீங்கள் இதை இனிய நினைவுகளாக வைத்துக்கொள்ளலாம்.

 

உணர்ச்சி மேம்பாடு

 

சில கர்ப்பினிகல் தான் கர்ப்பமாக இருப்பதை இந்த நேரத்தில் மறந்துவிடுவார்கள் (ஆம், இப்படியும் நடக்கும்). இது ஏனென்றால் இந்த வாரத்தில் பெரும்பாலான எரிச்சலூட்டும் கர்ப்பகால அறிகுறிகள் மறைந்து விடும்.

 

இது உங்களுக்கும் நடக்கும். கவனமாக, மெதுவாக நடக்கவும் நினைவில் வைத்துக்கொள்வதோடு நடக்க வசதியாக இருக்கும் காலனிகள் அணிவதில் கவனமாக இருக்கவும்.

 

சிவப்பு கொடிகள்

 

வியர்வையுடன் நீங்கள் இருக்கும்போது முகதிற்கு போடும் பவுடரை தவிர்க்கவும். இது உங்கள் சரும துளைகளை அடைப்பதோடு நோய்தொற்று ஏற்படுத்தும். உங்களுக்கு மூக்கடைப்பு இருப்பதால் சளி மற்றும் இருமல் ஏற்படலாம், தூக்க சிரமமும் ஏற்படும். நிறைய திரவங்களை உட்கொண்டு நீர்சத்துடன் இருப்பதை உறுதி செய்யுங்கள். மருந்தல்லாத சலைன் மூக்கிலிடும் துளிகளை பயன்படுத்தவும். படுக்கை அருகில் கற்பூர தைலத்தை பயன்படுத்தி நன்றாக இரவில் தூங்கவும்.

 

பாட்டி கதைகள்

 

கர்ப்பத்தின் போது விமானத்தில் பயணிப்பது பாதுகாப்பானது அல்ல என்று மக்கள் கூறலாம். இது பாதி மட்டுமே உண்மை. கர்ப்பத்தின் போது விமான பாதுகாப்பை கடந்து செல்வது மற்றும் விமானத்தில் பறப்பது ஆகியவை பாதுகாப்பானது. உங்களுக்கு சந்தேகமிருந்தால் உங்கள் கர்ப்பத்தை பற்றி விமான நிலைய கவுண்டரில் உங்கள் கர்ப்பத்தை பற்றி சொன்னால் அவர்கள் சரியாக வழிநடத்துவார்கள். எனினும், நீங்கள் அடிக்கடி பறப்பவர் என்றால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you