• Home  /  
  • Learn  /  
  • பிறந்த குழந்தைகளுக்கு வயிற்றில் வலி வந்தால் கிரைப் வாட்டர் நிவாரணம் தருமா?
பிறந்த குழந்தைகளுக்கு வயிற்றில் வலி வந்தால் கிரைப் வாட்டர் நிவாரணம் தருமா?

பிறந்த குழந்தைகளுக்கு வயிற்றில் வலி வந்தால் கிரைப் வாட்டர் நிவாரணம் தருமா?

4 Apr 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

பிறந்த குழந்தைகளுக்கு வயிற்றில் வலி வந்தால் கிரைப் வாட்டர் தரும்படி  ஒவ்வொரு அம்மாவும், வயது வந்தவர்களும் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் இது உண்மையில் என்ன செய்யும்?வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?

 

கிரைப் வாட்டரில் என்ன உள்ளது?

 

கிரைப் வாட்டர் என்பது வாயு தொல்லை, வயிற்றில் வலி,  மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் விக்கல்கள் ஆகியவற்றிற்கு கொடுக்கப்பட்ட ஒரு பொதுவான மருந்தாகும். இது பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளர் வில்லியம் உட்வர்ட்டால் 19 ஆம் நூற்றாண்டில் வணிக ரீதியாக விற்கப்பட்டது. 1840 களில், இங்கிலாந்தில் மலேரியா நோய்க்கு மருத்துவ சிகிச்சைக்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மருந்து,வயிற்று பிரச்சினைகள் கொண்ட குழந்தைகளுக்கு நிவாரணம் கொடுக்க முடிந்தது என்று அவர்கள் கவனித்தனர், இதை பயன் படுத்தி சில மாற்றங்கள் செய்து கிரைப் வாட்டரை கண்டுபிடித்து வணிக ரீதியாக விற்கத்தொடங்கினர்.

 

இது தண்ணீர், வெந்தயம், பெருஞ்சீரகம் விதை எண்ணெய், சர்க்கரை, சோடியம் பைகார்பனேட் மற்றும் 3.6% ஆல்கஹால் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆனால் இன்று, உற்பத்தியாளர்கள் மருத்துவ சகோதரத்துவத்தின் எதிர்ப்பின் காரணமாக கலவையிலிருந்து முழுமையாக மதுவை கைவிட்டனர்.

 

குழந்தைகளுக்கு கிரைப் வாட்டரின் பயன்பாடு என்ன?

 

வயிற்று வலி: பிறந்த குழந்தைகளுக்கு வயிற்றில் வலி வந்தால் கிரைப் வாட்டர் பயன்படுத்தப்படுகிறது.

பிற வயிற்று பிரச்சினைகள்: கிரைப் வாட்டர் அடிக்கடி செரிமான குழாய் பிரச்சனைகள், வாயு அல்லது வாய்வு, அமிலத்தன்மை மற்றும் சில நேரங்களில் மலச்சிக்கல் ஆகியவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

தத்தளிப்பு: பல் முளைக்கும்போது குழந்தைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். குழந்தைகள் அழுவதால் காற்றை விழுங்கவதால் வயிற்றில் விலி ஏற்படுகிறது. இதற்கும் பயன்படுத்தினர்.

விக்கல்: அஜீரணம், ஆசிட் ரெஃப்ளக்ஸ்  மூலமாக ஏற்படும் எரிச்சல் காரணமாக விக்கல் ஏற்படுகிறது.

மற்ற வழிகளில் நிவாரணம் பெறாத அறிகுறிகளை குழந்தை காட்டும் போது மட்டுமே கிரைப் வாட்டர் வழங்கப்பட வேண்டும். உங்கள் குழந்தைக்கு வலுக்கட்டாயமாக இதை கொடுப்பதற்கு முன் உங்கள் குழந்தை மருத்துவரிடம் பேசுவது மிகவும் அவசியம்.சில உற்பத்தியாளர்கள் இரண்டு வாரங்களுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கும் வழங்கப்படலாம் என பரிந்துரைக்கின்றனர், இது மிகவும் சர்ச்சைக்குரியதாகும்.

எப்போதும் ஒரு டீஸ்பூன் அல்லது துளிர் பயன்படுத்தி கிரைப் வாட்டர் கொடுக்க வேண்டும். கிரைப் வாட்டர் பொதுவாக ஒரு சில நிமிடங்களுக்குள் வேலை செய்கிறது. ஆனால் இது குழந்தையின் வயது மற்றும் அறிகுறிகளின் தீவிரத்தை சார்ந்துள்ளது. கிரைப் வாட்டர் ஒருமுறை அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுக்கப்படலாம். உங்கள் குழந்தை நல மருத்துவர் அறிவுரித்தியபடி கொடுக்கலாம். அதன் காலாவதி தேதி முடிந்தவுடன் கிரைப் வாட்டரை கொடுக்க வேண்டாம்.

 

குழந்தைகளுக்கு கிரைப் வாட்டர் பாதுகாப்பானதா?

 

குழந்தைகளுக்கு கிரைப் வாட்டர் பாதுகாப்பானது அல்லது பாதுகாப்பற்றது என்பதற்கான அறிவியல் சான்றுகள் இல்லை.  கிரைப் வாட்டர் ஆரம்ப காலாத்தில் மதுவை கொண்டிருந்தது. இது  மோசமானதாக கருதப்பட்டது. இன்றைய சூத்திரங்கள் மதுவைக் விலகிவிட்டது,எனினும் இன்றளவும் இதில் பாரபென்கள், கார்பன்கள் போன்ற பிற பொருட்கள் கொண்டுள்ளதால் சமமாக தீங்கு விளைவிக்கும்.

சோடியம் பைகார்பனேட் போன்ற இதர பொருட்கள், அதிகமாக உட்கொண்டால், பால் அல்கலி சிண்ட்ரோம் எனப்படும் ஒரு நிலைக்கு தள்ளப்படலாம். நீண்ட காலம் இது கொடுக்கப்பட்டால் குழந்தையின் சிறுநீரகங்கள் பாதிக்கபடலாம்.

டில் எண்ணெய் மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவை மட்டுமே குழந்தையின் நுகர்வுக்காக பாதுகாப்பாக கருதப்படுகின்றன.  குழந்தைகளுக்கு கூடுதல் ஆறுதலை தர புதினா எண்ணெய் கூட கொண்டிருக்கின்றது.

உங்கள் குழந்தை நல மருத்துவர் ஆலோசனையுடன் கிரைப் வாட்டர் தருவதே சிறந்தது.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you