• Home  /  
  • Learn  /  
  • குறைந்த பிறப்பு எடை கொண்ட குழந்தைகளை பராமரிப்பது எப்படி
குறைந்த பிறப்பு எடை கொண்ட குழந்தைகளை பராமரிப்பது எப்படி

குறைந்த பிறப்பு எடை கொண்ட குழந்தைகளை பராமரிப்பது எப்படி

12 Apr 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

குழந்தைகளில் குறைந்த பிறப்பு எடை

 

உலக சுகாதார அமைப்பு குறைவான பிறப்பு எடை என்பது 2500 கிராமுக்கு குறைவான பிறப்பு எடையுடன் பிறக்கும் குழந்தைகளை வரையறுக்கிறது. குறைவான பிறப்பு எடை குழந்தைகள் பொதுவாக இருப்பினும், முழு கால குழந்தைகளும் குறைவான பிறப்பு எடையுடன் பிறந்திருக்கலாம். குழந்தையின் பிறப்பு எடைக்கு கணிசமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, ஏனெனில் அது குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலைப்பாட்டின் குறியீடு மட்டுமல்ல, அதன் உயிர்வாழும் வாய்ப்புக்கும் முக்கியமானது. குறைவான பிறப்பு எடை குழந்தைகள்,சாதாரண குழந்தை எடை கொண்ட குழந்தைகளைவிட சிறியதாக இருக்கும், உடலின் மற்ற பாகங்களை விட, உடலில் உள்ள கொழுப்பு மிகக் குறைவாகவும் காணப்படும்.

 

குழந்தைகளில் குறைந்த பிறப்பு எடையின் காரணங்கள் யாவை?

 

குழந்தைகளில் குறைந்த பிறப்பு எடையானது பொதுவாக பிரசவ தேதிக்கு மிகவும் முன்பே பிறப்பதாலும் ,கருப்பையில்  வளர்ச்சின்மை காரணத்தினாலும் ஏற்படுகிறது.

 

 

பிரசவ தேதிக்கு முன்கூட்டிய பிறத்தல்:

 

37 வாரங்களுக்கு முன்பே பிறந்த குழந்தைகள் ப்ரீ மெசூர்ட் பேபி எனப்படுவர். கர்ப்பத்தின் கடைசி வாரங்களில் கர்ப்பத்தில் குழந்தைகளின் பெரும்பாலான எடை அதிகரிக்கிறது.

 

கரு வளர்ச்சிக் கட்டுப்பாடு:

 

பல குழந்தைகளுக்கு முழு காலப்பகுதிக்கு பின்னரே பிறக்கின்றன ஆனால் குறைந்த எடையைக் கொண்டிருக்கின்றன. இது கர்ப்பத்தில் வளர்ச்சியின்மையின் காரணமாக ஏற்படுகிறது. அதிகப்படியான ஆல்கஹால், போதைப்பொருள் துஷ்பிரயோகம், புகைபிடித்தல், இரத்த சோகை, எச்.ஐ.வி / எய்ட்ஸ், அதிக மன அழுத்தம் காரணமாக வளர்ச்சி தடை ஏற்படலாம். அதே கர்ப்ப காலத்தில், 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் சுமப்பது, நஞ்சுக்கொடி பிரச்சனைகள், தொற்றுநோய்கள்,  குழந்தைக்கு குறைந்த எடை ஏற்பட காரணமாக இருக்கும். உயர் இரத்த அழுத்தம் போன்ற தாயின் சில உடல்நிலையும் காரணமாக இருக்கலாம். தாயின் மருத்துவ நிலைமைகளை சரிசெய்தல் கருவில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சி விகிதத்தை மேம்படுத்த உதவும்.

 

குறைந்த பிறப்பு எடை கொண்டு பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் சாத்தியமான சிக்கல்கள் என்ன?

 

ரெஸ்பரேட்டோரி டிஸ்ட்ரெஸ் சின்டிரோம்.

 

இந்த நிலைமையில் பிறக்கும் குழந்தைகள் சுவாசிக்க சிரமப்படுவது, அவற்றின் நுரையீரல்களில் ஒரு சிறப்பு புரதம் இல்லாதிருத்தலே கரணமாகும். உடனடி மற்றும் பொருத்தமான மருத்துவ சிகிச்சை தந்தப் பின் குழந்தைகள் சாதாரணமாக மூச்சு விடுவதற்கு உதவுகிறது. அவற்றின் நுரையீரல்கள் ஒழுங்காக வளரும் வரை அவை மூச்சுக்கு உதவும் வகையில் ஆக்ஸிஜன் சப்ளை மற்றும் பிற கருவிகளுடன் ஒரு வென்டிலேட்டரில் வைக்கப்பட வேண்டும்.

 

குறைவான பிறப்பு எடை குழந்தைகள்  தங்கள் வாழ்க்கையில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இதய நோய்கள் போன்ற உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

அவர்கள் மெதுவாக அறிவாற்றல் மற்றும் மோட்டார் வளர்ச்சிக்கு முனைகின்றனர்.

மிக குறைந்த பிறப்பு எடை குழந்தைகளுக்கு பெருமூளை வாதம் மற்றும் பிற மோட்டார் வளர்ச்சி சீர்குலைவுகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.

குறைவான பிறப்பு எடை குழந்தைக்கு தொற்றுநோய்களின் ஆபத்து அதிகம்.

குறைந்த அளவு இரத்த ஆக்சிஜன் உள்ளது

குடல் அழற்சியும் காணப்படுகிறது.

 

குறைவான பிறப்பு எடை கொண்டு குழந்தைகள் பிறப்பதை தடுப்பது சாத்தியமா?

 

குறைவான பிறப்பு எடை கொண்டு பிறகும் பல குழந்தைகள் ஆரோக்கியமாகவும்  வளருக்கின்றன. உங்கள் குழந்தை குறைந்த பிறப்பு எடை கொண்டு பிறப்பதை குறைப்பது நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது உங்களை கவனித்துக்கொள்வதில்தான் உள்ளது.

 

நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது புகைபிடித்தல், ஆல்கஹால் மற்றும் தேவையற்ற மருந்துகளை தவிர்க்க வேண்டும். அத்தகைய பொருட்கள்  குழந்தைகளுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன.

ஒரு ஆரோக்கியமான உணவைப் பின்தொடர்ந்து, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

நடைப்பயிற்சிக்கு செல்வதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம்

பரிசோதனைகளுக்கு சென்று உங்கள் டாக்டர்கள் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றவும். பரிந்துரைக்கப்படாத மருந்துகளை தவிர்க்கவும்.

 

பிறந்த குழந்தையின் எடையை எப்படி அதிகரிக்கலாம்?

 

தாய்ப்பால்:

 

உங்கள் பிள்ளை குறைவான பிறப்பு எடையுடன் இருந்தால், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மிக முக்கியம். பிறந்த குழந்தையின் எடையை அதிகரிக்க தாய்ப்பால் கொடுத்தல் மிகவும் உதவியாக இருக்கும். குறைவான பிறப்பு எடை குழந்தைகளை பிறந்தவுடன் மார்பகத்தின் மேல் செலுத்த வேண்டும் என்று WHO பரிந்துரைக்கிறது,  6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது சிறந்தது என்று கூறுகிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பால்  குறைந்தபட்சம் 2 வருடங்களுக்கு கொடுப்பது உகந்தது. தாயும் குழந்தையும் தயாராக இருந்தால் 2 வயதிற்கு அப்பாலும் தொடரலாம்.

 

அன்பும் மற்றும் அரவணைப்பும்:

ப்ரீ டேர்ம் குழந்தைகளின் தாய் சேய் தொடர்பின் தாக்கத்தின் முக்கியத்துவம் பல மருத்துவமனைகளில் குழந்தை பராமரிப்பு நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கங்காரு கவனிப்பு பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் முடிந்தவரை மார்பகத்தோடு அணைத்துக்கொண்டு பாலூட்டவும். உங்கள் குழந்தையுடன் நிறைய நேரம் செலவழிக்கவும்.

 

தாயின் உணவு:

நீங்கள் உங்கள் குழந்தைக்கு பாலூட்டும் போது  ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு எடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

டாக்டர் ஆலோசனை:

உங்கள் பிள்ளையின் குறிப்பிட்ட தேவைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் குறைந்த எடையை நிர்வகிப்பதற்கான ஒரு சில வழிமுறைகளை உங்கள் மருத்துவர் குறிப்பிடலாம். உங்கள் மருத்துவரின் அறிவுரைகளை  பின்பற்றவும் மேலும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை கொடுக்கவும்.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.