உங்கள் குழந்தையைத் துணியால் சுற்றி வரிந்து கட்டுவதன் பயன்களும் கவனிக்க வேண்டியவைகளும் என்ன?

cover-image
உங்கள் குழந்தையைத் துணியால் சுற்றி வரிந்து கட்டுவதன் பயன்களும் கவனிக்க வேண்டியவைகளும் என்ன?

 

சுற்றி வரிந்து கட்டப்பட்ட எனது இரட்டைக் குழந்தையைப் பற்றிய நினைவுகள் இன்னும் என் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. அவர்களின் உடலை மட்டுமல்ல. எனது மகிழ்ச்சியும் அதனுடன் கட்டப்பட்டது போல் தோன்றுகிறது. அதை எண்ணி எண்ணி பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே!!! எனக்கு பிரசவம் பார்த்த அந்த மருத்துவமனையில் நீல நிற துணியால் என் குழந்தைகளைக் கட்டப்பட்டிருந்தது. இந்த ஒரே நினைவு தான் எனக்கு மனதில் வருகிறது. அந்த நாள் ஞாபகம், நெஞ்சிலே வந்ததே...

 

என் குழந்தை மட்டுமல்ல. எல்லா பிறந்த குழந்தைகளும் அதே போல இப்படி மெல்லிய துணியால் இதமாக அணைத்துக் கொள்ளப் படும். ஏனென்று தெரியுமா? அது அவர்களுக்கு மிருதுவான சுகத்தைத் தரும். அவர்களுக்கு இன்னும் தாயின் கருவில் இருப்பது போன்ற எண்ணமே தோன்றும். ஆனால் அதுமட்டுமல்ல. இதனால் அதிக பயன்களும் இருக்கின்றன. அவை என்னவென்று காண்போம்.

 

  • குழந்தைகளால் நன்றாக தூங்க முடியும்
  • அவர்கள் அழுவதை நிறுத்தி, தனது எனெர்ஜி குறையாமல் இருக்கும்
  • பிறந்த குழந்தைகளுக்கு தான் கருவில் இருப்பது போலவே தோன்றும்
  • எந்த வித தொந்தரவும் இருக்காது போன்ற எண்ணம் குழந்தைகளுக்கே இருக்கும்
  • பிறந்த குழந்தைகளின் நரம்பும் தசையும் நல்ல விதமாக பாதுகாக்கப்படும்

 

சரியான விதத்தில் எப்படி மெல்லிய மிருதுவான துணியால் அவர்களைக் கட்டி வாரி அணைக்க வேண்டும் என்று மருத்துவமனையில் நமது பிரசவத்தின்போது இருக்கின்ற நர்ஸ்கள் கற்றுக் கொடுப்பார்கள். எனக்கு என்ன அதிர்ஷ்டமாக அமைந்ததென்றால், என்னைவிட எனது அம்மா, மாமியார், மற்றும் கணவருக்கு என்னைவிட நன்றாகவே தெரிந்திருந்தது.

 

சுற்றி வரிந்து கட்டுவதன் பயன்கள் ஏராளம் என்றால் அதில் பல கவனத்திற்குரிய குறிப்புகளும் உள்ளன. அவை என்னவென்று விரிவாக காண்போம்.

 

  • குழந்தை தூங்கும்போது நேர்முகமாக தூங்க வேண்டும். வயிற்றை ஊன்றி குப்புற தூங்கக்கூடாது.
  • மிருதுவான காட்டன் துணியைத்தான் உபயோகிக்க வேண்டும். அப்போதுதான் வெப்பநிலை சரியான அளவில் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
  • சரியாக குழந்தையை சுற்றி வரிந்து கட்டவில்லை என்றால் இடுப்பு டிஸ்பிலேஸியா போன்ற பல நோய்கள் வந்துவிடும்.

 

குழந்தையை சுற்றி வரிந்து கட்டுவதால் என் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைவர். ஆதலால், இரட்டை குழந்தையைப் பெற்றெடுத்த நான் இதை அதிகம் பரிந்துரை செய்கிறேன். என் குழந்தைகளை முதல் நான்கு மாதம் பொதிந்த அந்த துணியை இன்றும் நான் பத்திரமாகவே வைத்திருக்கிறேன். இப்போது என் குழந்தைகள் நன்றாகவே வளர்ந்து விட்டனர். அவர்களின் கையைக் கூட இனி என்னால் பொதிய முடியாது. அவர்களின் இந்த வளர்ச்சியைக் கண்டு நான் அதிகமாகவே மெர்சல் ஆகிவிட்டேன். இப்போது அவர்கள் இருவரும் நன்றாக பேசி, தெம்புள்ள குழந்தைகளாக இருக்கின்றனர். ஆனாலும் இன்றும் அவர்களைப் பார்க்கும்போது ஆறு வருடங்கள் முன்பு அவர்கள் சுற்றி வரிந்து கட்டப்பட்டு இங்குபேட்டரில் இருந்த அந்த  முகங்கள்தான் ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!