எந்த வயதில் குழந்தைகள் கனவு காண ஆரம்பிக்கின்றனர்?

cover-image
எந்த வயதில் குழந்தைகள் கனவு காண ஆரம்பிக்கின்றனர்?

 

கனவுகள் என்பது நாம் தூங்கும்போது நம் மனதில் ஓடும் எண்ணங்கள், சித்திரங்கள், மற்றும் புலன் உணர்வுகளின் தொடர் என்றே அர்த்தம். தூக்கத்தில் மொத்தம் ஐந்து கட்டங்கள் உள்ளன. நான்கு கட்டங்களை நோன்-ஆர்ஈஎம் என்றும், மீதமுள்ள ஒரு கட்டத்தை ஆர்ஈஎம் தூக்கம் என்று கூறப்படும். ஆர்ஈஎம் என்றால் என்ன? ராப்பிட் மூவ்மென்ட் என்று கூறுவர். தமிழில் விரைந்த கண் பார்வை அசைவு என்று கூறப்படும். முதிர்ந்தோர் ஆகிய நாம் தூக்கத்தின் கால் பங்கை ஆர்ஈஎம் கட்டத்திற்கு ஒதுக்கி வைக்கிறோம். அதாவது அந்த நேரத்தில்தான் நாம் கனவே காண்கிறோம். குழந்தைகளோ 50 முதல் 80 சதவீத நேரத்தையே ஆர்ஈஎம் கட்டத்திற்கு ஒதுக்குவார்கள். இந்த நேரத்தில் குழந்தைகள் கனவு காணலாம். ஆனால் அவர்களால் அந்த கனவை படிப்படியாக விவரிக்க முடியாது.

 

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். குழந்தைகள் ஏன் அதிகம் இரவில் தூக்கத்திலிருந்து கண் விழிக்கிறார்கள்? அதுமட்டுமல்லாது, ஏன் அவர்கள் குட்டித்தூக்கம் போடுகிறார்கள்? நோன்-ஆர்ஈஎம் என்பதைப் பார்க்க, ஆர்ஈஎம் கட்ட தூக்கம் மிகவும் லைட்டாகவும் உயிர்ப்புள்ளதாகவும் இருக்கும். ஆர்ஈஎம் கட்டத்தில் நாம் உடனடியாக தூக்கத்திலிருந்து விழித்து விடுவோம்.

 

குழந்தைகள் கனவு காண்பார்களா?

 

கனவு காண எல்லா வாய்ப்பும் உள்ளது. அவர்கள் அதிக நேரம்  ஆர்ஈஎம் கட்டத்தில் தான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு குழந்தையின் கனவானது பெரியவர்களுடன் ஒப்பிடவே முடியாது. பெரியோர்களின் கனவில் அதிக உணர்வுகளும், மொழிகளும், சம்பவங்களும் நிறைந்தவையாக இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு அவ்விதமான கனவுகள் அந்த சிறிய வயதிலேயே வராது. ஆரம்ப காலத்தில், குழந்தைகளே தனது தூங்கும் நேரத்தைத்  தனக்கு வேண்டியது போல், அமைத்துக் கொள்வர். ஆதலால்தான் குழந்தைகள் அதிக நேரம் தூங்க நாம் அனுமதி தர வேண்டும். ஆர்ஈஎம் கட்டத்தின்போது, குழந்தையின் மூளையானது நரம்பு சார்ந்த புதிய பாதைகளை அமைக்கும். குழந்தைகளுக்கு கற்கும் திறனும் அவர்கள் தூங்கும்போதுதான் அமைகிறது என்று பல ஆய்வுகளும் கூறுகின்றன. குழந்தைகள் தூங்கும் நேரத்தில் திறனை வளர்த்துக் கொள்கிறார் என்றால் அந்நேரத்தில் கனவுகள் முளைக்க வாய்ப்பு என்பது குறைவாகவே இருக்கும்.

 

பல அறிவாற்றல் உளவியல் நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், குழந்தைகள் 5 முதல் 7 வயதிற்கு இடையில் தான் காணும் கனவிற்கு தகுந்த கருவை உணர முடியும். அந்த நேரத்தில்தான், தனித்துவமாக முழுமையாக கனவு காண்பதில் ஈடுபட்டு, பலவகை உணர்வுகளையும் மொழிகளையும் புரிய ஆரம்பிப்பார்கள். ஆனால், உங்களின் 3 அல்லது 4 வயது குழந்தை ஒரு காலை வேளையில் உங்களிடம் வந்து தான் கண்ட கனவை விவரித்தால், நீங்கள் அதிசயப்பட வேண்டியதில்லை. தனக்கு கிடைத்த திறமையை பயன்படுத்தி நல்ல ஒரு கனவைக் கண்டு விவரிக்கும் திறன் அவர்களுக்கு கிடைத்துவிட்டது  என்று நாம் ஒப்புக் கொள்ளலாம்.

 

கொடுங்கனவுகள்:

 

கொடுங்கனவுகள் என்பது பயம் நிறைந்த அல்லது சுவாரசியமற்ற கனவு என்பதே அதன் பொருள். குழந்தைகளை விட பெரியோர்களே அதிகம் அச்சமூட்டும் கொடுங்கனவைக் காண்பர். ஒரு கால் குழந்தைகளே ஒவ்வொரு வாரமும் கொடுங்கனவைக் காண்பர். ஒரு குழந்தை ரெண்டு வயது ஆகும்போதுதான் கொடுங்கனவைப் புரிந்து கொள்வர். இந்த வயதில்தான் அவர்களுக்கு பயம் என்ற கருத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பிப்பார்கள். மூன்று முதல் ஆறு வயதிற்கு இடையில், இக்கனவுகள் உச்சக்கட்டத்தை அடையும். கொடுங்கனவானது விடியற்காலை 4 முதல் 6 மணிக்கு இடையில் தான் வரும்.

 

கொடுங்கனவு வருவதற்கு காரணம் என்ன என்று விவரிக்க முடியாது. அவை வருவதற்கு மன அழுத்தம்தான் காரணம் என்று சிலர் கூறுகின்றார்கள். எந்த குழந்தை சிறிய வயதில் அதிர்ச்சிகரமான சம்பவத்தை அனுபவித்திருக்கிறாரோ, அவர்களே அடுத்த ஆறு மாதம் வரை அடிக்கடி கொடுங்கனவைக் காண்பர்.

 

உங்கள் குழந்தை அப்படிப்பட்ட கொடுங்கனவைக் காண்கிறார்கள் என்றால் அவர்களை அலட்சியப் படுத்தாதீர்கள். அவர்களைக் கட்டிப்பிடித்து கொள்ளவும். அவர்களுடனே இருக்கவும். ‘எதற்கும் பயப்பட வேண்டாம், நான் இருக்கிறேன்’,  என்று அவர்களுக்கு உறுதி கூறவும்.

 

இதுதான் உண்மையான நேரம். குழந்தைகள் அதிகம் கனவு காண மாட்டார்கள். ஆனாலும் இதைப்பற்றி யோசித்து உங்கள் தலையை அதிகம் புண்ணாக்க வேண்டிய அவசியமில்லை.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!