ஓர கண் பிரச்சனையா!! – என்ன செய்வது?

ஓர கண் பிரச்சனையா!! – என்ன செய்வது?

25 Apr 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

 

ஓர கண் பிரச்சனை என்றால் என்ன?

 

 •        ஓர கண் பிரச்சனை என்பது கண்விழிகளின் ஒழுங்கின்மை என்றே கூறலாம். இரு கண்விழிகளும் ஒரே திசையைக் காணாமல் வெவ்வேறு திசையைப் பார்க்கும்.
 •        இந்த ஒழுங்கின்மை சில நிமிடங்களுக்கு இருக்கலாம், விட்டுவிட்டு வரலாம், இல்லையெனில் நிரந்தரமாகவும் இருக்கலாம்.
 •        கண்டறிந்தவுடனே சிகிச்சை அளிக்கவில்லை என்றால் கண்பார்வையே இழந்து விட வாய்ப்புண்டு.

 

ஓர கண் பிரச்சனை எதனால் ஏற்படுகின்றது?

 

 •        மரபுத் தொடர்பு
 •        கண்களின் தசைகளிலோ அல்லது நரம்புகளிலோ தளர்ச்சி
 •        கண்ணில் அடிப்பட்ட காயம்
 •        கண் கோளாறு – கண்புரை (காடராக்ட்), கண் கட்டி, பசும்படலம் (கிளாவ்கோமா), ரெட்டீனா நோய், ஒளிவிலகல் பிழைகள் (ரீஃபிராக்டிவ் எரர்ஸ்), பார்வை கோளாறு போன்றவை
 •        கண் பார்வை குறைவு

ஓர கண் பிரச்சனையின் அறிகுறிகள் என்ன?

 

 •        ஒரு கண்ணோ அல்லது இரண்டு கண்களோ வெவ்வேறு திசையைக் காணும்
 •        கண் பார்வை கோளாறு ஒரு கண்ணில் அல்லது இரு கண்ணிலும்
 •        சூரிய வெளிச்சத்தில் ஒரு கண்ணை மூட வேண்டி வரும்
 •        கண் விழிகளை ஒரே திசைக்குக் கொண்டு வர, தலையைச் சற்று சாய்க்க வேண்டி வரும்
 •        குழப்பம் அல்லது இரட்டை பார்வையும் மேற்கொள்ள வேண்டி வரும்

 

ஓர கண் பிரச்சனை எந்த வயதில் சரி செய்ய முடியும்?

 

 •        முன்பு குறிப்பிட்டது போல், ஓர கண் பிரச்சனையை சரி செய்யவில்லை என்றால், கண் பார்வையே போய்விடும்
 •        குழந்தைகளுக்கு இந்த கோளாறு இருந்தால், சீக்கிரமாகவே தீர்வு காண வேண்டும். முடிந்த வரை, இரண்டு வயது ஆவதற்கு முன்பே.

 

ஓர கண் பிரச்சனைக்கு என்ன தீர்வு?

 

 •     ஒளிவிலகல் பிழைகளின் காரணமாக ஓர கண் பிரச்சனை ஏற்பட்டால், தகுந்த கண்ணாடியால் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்.
 •     கண்களுக்கு அவ்வபோது தேவையான அளவு ஓய்வு. கண்களை சுற்றி இருக்கும் தசைகளுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். கண்களுக்கு எந்தவித சோர்வும் இருக்காது
 •     அறுவை சிகிச்சை
 •     பாட்சிங் தெராபி – நன்றாக காணும் கண்ணை மறைத்து வைத்து, கோளாறு இருக்கும் கண்ணை மட்டும் திறந்து வைத்தால், கண்விழி கோளாறு சரியாகலாம்
 •     பாமிங் தெராபி – கண் தசையின் நெகிழ்வுக்காக இந்த சிகிச்சை செய்யப்படும். தூங்க போகும் முன், இந்த சிகிச்சையை செய்ய வேண்டும்
 •     பென்சில் புஷ்-அப்ஸ் – இந்த பயிற்சியை எங்கு வேண்டும் என்றாலும் செய்யலாம். வெறும் பென்சில் தான் தேவை. இருக்கையில் நேராக உட்கார்ந்து, பென்சிலை கண்முன் உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் நகர்த்தவும். கண் தசையைச் சுற்றியுள்ள விறைப்புத் தன்மை (ரிஜிடிட்டி)  மறைந்துவிடும்

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you