குழந்தை பிறந்து எத்தனை நாட்கள் வரை மருத்துவமனையில் தங்க வேண்டி வரும்?

cover-image
குழந்தை பிறந்து எத்தனை நாட்கள் வரை மருத்துவமனையில் தங்க வேண்டி வரும்?

 

உலகத்திற்கே தெரிந்த செய்தி – கேட் மிடில்டன் தனது மூன்றாவது குழந்தை பிறந்து ஏழே மணிநேரத்திற்குள் வீடு திரும்பிவிட்டார். அப்படி எத்தனை நேரத்தில் தாய்மார்களால் பிரசவத்திற்குப் பின் வீடு திரும்ப முடிகிறது? இது எல்லா கர்ப்பிணிகளுக்கு வரும் சந்தேகம்தான்.

 

குழந்தை பிறந்து எத்தனை நாள் வரை மருத்துவமனையில் தங்க வேண்டி வரும்?

 

  • சரியான கணிப்பைக் கூற முடியாது. தாய் மற்றும் சேய்யின் ஆரோக்கிய நிலையைப் பொருத்தது.
  • குழந்தை பிறந்தவுடன், குழந்தையின் உடல் உறுப்புகள் மற்றும் ஆரோக்கிய நிலையை டாக்டர் கண்டறிவர். நார்மலான குழந்தைகள் பிறந்த சில மணிநேரங்களில், வெளியுலகத்துடன் உடனே ஒத்துப் போவர்.
  • தகுந்த பரிசோதனைகளை முடித்த பிறகு தான் கூற முடியும்.
  • மரபுவழி நோய் அல்லது உடல் கோளாறு ஏதேனும் இருக்கிறதா என்றும் டாக்டர் பரிசோதனை செய்வர்
  • எப்படியும் குழந்தைகள் முதல் தடவை மருத்துவமனையில் தான், சிறுநீர் மற்றும் மலம் கழிப்பர். அதற்கு பின்தான், வீடு திரும்ப முடியும்.
  • குழந்தை அழுகிறதா, மூச்சு விட முடிகிறதா, விழுங்க முடியுதா, சூப்ப முடியுதா, என்பதையும் டாக்டர் பரிசோதிப்பார்

 

யோனிவழி பிரசவம் என்றால் எத்தனை நாட்கள் வரை மருத்துவமனையில் தங்க வேண்டி வரும்?

 

  • இயற்கையான யோனிவழி பிரசவம் என்றால்,  24 - 48 மணிநேரம் வரை தான் மருத்துவமனையில் தங்க வேண்டி வரும்.
  • அது எப்போது சாத்தியம் என்றால், பிரசவத்தில் எந்தவித கோளாறுகளும் இல்லாமல் சுகப்பிரசவம் நடந்திருக்க வேண்டும்

 

சிசேரியன் பிரசவம் என்றால் எத்தனை நாட்கள் வரை மருத்துவமனையில் தங்க வேண்டி வரும்?

 

  • எப்படியும் யோனிவழி பிரசவத்தை விட அதிக நாள் மருத்துவமனையில் தங்க வேண்டி வரும். 3 முதல் 4 நாள் வரை தங்க வேண்டி வரும்.
  • பின்வரும் 3 செயல்களை சுயமாக செய்ய முடிந்தால், வீடு திரும்ப முடியும்:
    • சுயமாக கழிப்பறை செல்லுதல்
    • காத்ததர் இல்லாமல் சிறுநீர் கழித்தல்
    • வாந்தி எடுக்காமல், உணவு சாப்பிட மற்றும் நீர் அருந்துதல்.

 

தாய்க்கும் ஏதேனும் பிரசவத்திற்குப் பிறகு பரிசோதனை இருக்கிறதா?

 

  • பரிசோதனை என்பதை விட சில பயிற்சிகள் நர்ஸ்களால் தரப்படும். அதுவும் முக்கியமாக முதல் தடவை குழந்தையைப் பெற்ற தாய்மார்களுக்கு.
  • எப்படி தாய்ப்பால் ஊட்ட வேண்டும்? எப்படி குழந்தையைக் குளிப்பாட்ட வேண்டும்? எப்படி அவர்களின் டைப்பர் மாற்ற வேண்டும்? இவை அனைத்தையும் கற்றுக் கொடுப்பார்கள்.

 

வேறு ஏதேனும் காரணத்தினால் அதிக நாள் மருத்துவமனையில் பிரசவத்திற்குப் பின் தங்க வேண்டி வருமா?

 

ஆமாம். சில நேரங்களில் பின்வரும் அறிகுறிகள் தாய்க்கு அல்லது சேய்க்கு பிரசவத்தின்போது இருந்திருந்தால், அதிக நாட்கள் தங்க வேண்டி வரும்.

  • அதிக உதிரப்போக்கு – மணிக்கு இரண்டை விட அதிக நாப்கின் பயன்படுத்த வேண்டி வருதல்
  • ரத்த அழுத்தம்
  • குழந்தையில் குறைவான சர்க்கரை அளவு
  • பிறப்பின்போது குழந்தை மலங்கழித்தலால் குழந்தைக்கு ஏற்படும் மூச்சுத்திணறல்
  • குழந்தையின் எடை  குறைவு – 2 கிலோவின் கீழ் எடை இருந்தால், குழந்தையின் எடை கூடும் வரை, மருத்துவமனையில் இருக்க வேண்டும்

 

வீடு திரும்பின பிறகும் டாக்டர் விசிட் அவசியமா?

 

ஆம். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாலும், முதல் 2-3 வாரங்கள் வரை முதல் முறை பிரசவித்த தாய்மார்கள், தனது டாக்டருடன் தொடர்பில் இருக்க வேண்டும்

 

பிரசவம் முடிந்து வீடு திரும்புமுன் வேறு ஏதேனும் வேலை மருத்துவமனையில் இருக்கிறதா?

 

குழந்தைக்கு பிறப்பு சர்டிபிகேட் வாங்க, குழந்தை மருத்துவமனையில் மறக்காமல் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.

நீங்கள் எத்தனை நாட்களுக்குள் பிரசவம் முடிந்து வீடு திரும்பினீர்கள் என்று கமென்ட் செய்யவும்?

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!