கர்ப்பிணி பெண்கள் தமக்கு சுகப்பிரசவம் நடக்கவும் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்கவும், சில யோகா முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று டாக்டர்களே பரிந்துரைக்கின்றனர். ஆனால் எல்லா யோகா முறைகளையும் கடைப்பிடிக்கக் கூடாது. பின்வரும் இந்த மூன்று சிறந்த யோகா முறைகளைப் பின்பற்றினால், பிரசவத்தில் எந்த வித கோளாறுகளும் இருக்காது.
தடாசனம் (Thadasana)

Image Source: floyoga
செய்முறை:
- கால்களைச் சேர்த்து, முழங்கால்களை வளைக்காமல் நேராக நிற்கவும்
- நமஸ்காரம் செய்வது போல் கைகளைத் தலைமேல் தூக்கி வைக்கவும்
- மூச்சை உள்ளிழுக்கவும், குதிகால்களையும் மெதுவாக உயர்த்தி சில நொடிகள் நிற்கவும்
- பிறகு மூச்சை விட்டபடி, குதிகால்களை மெதுவாக இறக்கி, எப்போதும் போல நிற்கவும்
- இந்த முறையை மூன்று தடவை செய்யவும்
பலன்:
- முதுகெலும்பை வலுப்படுத்தும்
- முதுகு வலியும் குறைவாகும்
மர்ஜரியாசனம் (marjariyasana)

Image Source: blogvertex
செய்முறை:
- தரையில் முட்டிப் போட்டு நேராக நிமிர்ந்து அமரவும்
- முட்டி போட்ட படியே வளைந்து, கைகளைத் தரையில் வைக்கவும்
- இரண்டு கால்களுக்கும் இடையே சிறிது இடைவெளி இருக்கட்டும்
- தலையைக் குனிந்து, தோள்களை நேராக வைக்கவும்
- முதுகை முடிந்தவரை நன்றாக வளைத்து, சில நொடிகள் அப்படியே இருக்கவும்
- இந்த முறையை மூன்று தடவை செய்யவும்.
- முடிந்தவரை இடைவெளி எடுத்துக் கொள்ளவும்
- கவனிக்கவேண்டியவை: இந்த ஆசனம் கர்ப்ப கால முதல் 26 வாரங்கள் மட்டுமே செய்ய வேண்டும்
பலன்:
உங்களின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, தோள்களுக்கு பலம் தருகின்றன.
சவாசனம் (savasana)

Image Source: birthbreathanddeath
செய்முறை:
- விரிப்பில் மல்லாக்க கிடந்து, கைகளையும் கால்களையும் அகலமாக விரித்து வைக்கவும்
- படுத்தபடியே, மூக்கு வழியாக நன்றாக சுவாசிக்கவும்
பலன்:
- இந்த யோகா முறை கடைசியில் கடைப்பிடிக்க வேண்டியவை. உடலுக்கும் மனதுக்கும் நல்ல ஓய்வு கொடுக்கும்.
- இந்த யோகா கடைப்பிடித்த பிறகு சோர்வு ஏதும் இல்லாமல் புத்துணர்ச்சி கிடைக்கும்
- மனஅழுத்தம் இருக்காது
இந்த மூன்று முறைகளும் கர்ப்பிணிகள் பின்பற்றும் அடிப்படையான யோகா முறைகளாகும்.
மேற்கண்ட யோகா முறைகளைக் கடைப்பிடிக்கும்போது மறக்காமல், ஒரு யோகா பயிற்சியாளரின் கண்காணிப்பில் இந்த முறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது. இவற்றைத் தொடங்கும் முன், டாக்டரின் ஆலோசனை பெறுவதும் உத்தமம்.
#babychakratamil