மகிழ்ச்சியான சூழ்நிலையும் நமது வாழ்க்கைத்தரமும் நன்றாக இருந்தால், பிரசவம் நன்றாகவே நடக்கும். நல்ல பிரசவத்திற்கு ஒரு நல்ல பொறுப்பான டாக்டரின் அவசியமும் உள்ளது. உங்களின் தகுதிக்கு ஏற்ப சரியான ஆலோசனையை கொடுக்கும் மருத்துவரே, சிறந்த மருத்துவர்.
1. குடும்ப மருத்துவர்:
- குடும்ப மருத்துவருக்கு நமது குடும்ப நிலையும், வருமான நிலையும், ஆரோக்கிய நிலையும் நன்றாகவே தெரியும்.
- ஆதலால், அவர்தான் நமது பிரசவத்திற்க்கான, சரியான வல்லுனரை தேர்ந்தெடுக்க உதவுவர். பிரசவத்தையும் குழந்தை பிறப்பையும் கண்காணிப்பவர் OB-GYN (ஒப்ஸ்ட்டேட்ரிஷியன்-கைநேக்கொலஜிஸ்ட்) என்பவரே.
- ஒப்ஸ்ட்டேட்ரிஷியன் பிரசவத்தையும் குழந்தை பிறப்பையும் பார்ப்பவர். கைநேக்கொலஜிஸ்ட் பொதுவாக இனப்பெருக்க மண்டலத்தைக் கண்காணிப்பார். இவ்விரண்டு செயல்முறையிலும் அனுபவமுள்ள மருத்துவரைத்தான் நீங்கள் அணுகுவீர்கள்.
2. பேறுகால உதவியாளர்
- இவர் சுக பிரசவத்தைக் கையாளுவார். பிரசவத்தில் ஏதேனும் கோளாறு இருந்தால், இவரால் சிகிச்சை அளிக்க முடியாது
- சாதாரண அறையில், அறுவை சிகிச்சையில்லாமல் பிரசவம் பார்ப்பார்.
3. டௌலா
பிரசவத்தின்போது துணையாக இருப்பார். இவர்கள் பிரசவத்திற்கு பின்பும் தகுந்த ஆலோசனை கொடுப்பார்.
4. பிரசவகால பங்காளி
பிரசவகால பங்காளியாக உங்கள் கணவரோ, தோழியோ அல்லது உறவினரோ இருப்பார். மனரீதியான தைரியத்தைக் கொடுப்பார்
எங்கே குழந்தையைப் பெற்றெடுப்பது?
கர்ப்பம் தரித்த நாள் முதற்கொண்டு மனைவியும் கணவரும் எங்கே குழந்தையைப் பெற்றெடுப்பது என்று தீர்மானிக்க வேண்டும்.
1. மருத்துவமனை:
- மருத்துவமனையில் பெற்றெடுக்க தீர்மானித்தால், உங்கள் வீட்டுப் பக்கத்தில் எது பிரசவத்திற்கு உகந்த மருத்துவமனை, அங்கே மெடிக்ளைம் வசதி இருக்கிறதா, சிசேரியன் வசதி இருக்கிறதா என்று பார்த்து வைக்கவும்.
- முடிந்தவரை உங்கள் வீட்டினருகே எவரேனும் அந்த மருத்துவமனையில் பிரசவித்திருந்தால், அவரிடம் அந்த மருத்துவமனையின் வசதிகளைக் குறித்து நன்றாக கேட்டு வைக்கவும்.
- மருத்துவமனைகள் பிரசவத்தைக் குறித்தும், பிரசவ வலியைக் குறித்தும், உணவு மற்றும் யோகா பயிற்சியைக் குறித்தும் பற்பல வகுப்புகளை நடத்துகின்றனர். கர்ப்பிணிகள் அந்த வகுப்புகளில் பங்கேற்று தம் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்.
2. பிரசவ மையம்
- 37 முதல் 42 வாரம் வரையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த மையத்திலேயே பிரசவம் பார்க்க முடியும்
- இங்கு பிரசவம் பார்ப்பதே பேறுகால உதவியாளர்கள் தான்.
- பிரசவத்தில் ஏதேனும் கோளாறு இருந்தால், இங்கே சிகிச்சை அளிக்க முடியாது
3. வீட்டில் பிரசவம்
- வீட்டில் பிரசவம் பார்க்கும்போது, கணவரும் உறவினர்களும் கூடவே இருப்பார்கள். ஆதலால், கர்ப்பிணிகளுக்கு மிகவும் தைரியாமாக இருப்பார்கள்.
- ஆனால் இங்கேயும் பிரசவத்தில் ஏதேனும் கோளாறு வந்தால், வீட்டில் சிகிச்சை அளிக்க முடியாது. மருத்துவமனையை நாட வேண்டி வரும்.
#babychakratamil