தமிழ்நாட்டில் தலப்பாக்கட்டி பிரியாணியைப் பற்றி கேட்காத ஆளையே பார்க்க முடியாது. திண்டுக்கலுக்கு பெருமை சேர்ப்பதே தலப்பாக்கட்டி பிரியாணிதான். திருநெல்வேலிக்கு அல்வா; மதுரைக்கு மல்லிகை இட்லி; அதே போல, திண்டுக்கலுக்கு தலப்பாக்கட்டி பிரியாணி.
அசைவ உணவு பிரியர்களுக்கு தலப்பாக்கட்டி பிரியாணி என்றாலே உயிர். பொதுவாக மட்டன் அல்லது நாட்டுக்கோழியில் மட்டுமே இந்த பிரியாணியைத் தயாரிப்பார்கள். அவரவர் ஊருக்கு ஏற்ப தனிப்பட்ட ருசியுடன் ஏகப்பட்ட பிரியாணி வகைகளை காண முடியும். அவற்றில் பெயர் போனது தலப்பாக்கட்டி பிரியாணி தான்.
தலப்பாக்கட்டி பிரியாணி என்று எப்படி பெயர் கிடைத்தது?
திண்டுக்கலில் முதன்முதலில் இந்த வகை பிரியாணி தயாரிக்கப்பட்டது. பிறகு அந்த பிரியாணிக்கு தனது கடை பேரே வைக்கப்பட்டது. அதுதான் ‘ஆனந்த விலாஸ் பிரியாணி’. கடையின் முதலாளி தலைப்பாகு கட்டிக்கொள்ளும் பழக்கம் உள்ளது. ஆதலால்தான், இந்த ரெசிபிக்கு பிறகு ‘தலப்பாக்கட்டி பிரியாணி’ என்று அவருக்கு பெருமை சேரும்படி பெயர் மாற்றம் ஏற்ப்பட்டது.
தலப்பாக்கட்டி பிரியாணியில் அப்படி என்ன ஸ்பெஷல்?
- தலப்பாக்கட்டி பிரியாணி வாசனை மிகுந்த சீரக சம்பா அரிசியில் தான் சமைக்க வேண்டும். செலினியம் அளவு அதிகமாக உள்ளதால் மார்பு, குடல் மற்றும் பெருங்குடலில் புற்றுநோய் வராது. அதிகளவில் ஆண்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்தும் உள்ளன. ஆதலால், உடலில் கொழுப்பு அளவும் செம்மையாக குறைந்துவிடும். கலோரி அளவைக் கட்டுக்குள் வைப்பதால், எடையும் சிறந்த விதத்தில் கட்டுக்குள் இருக்கும்.
- வாசனை மிகுந்த சீரக சம்பா அரிசியுடன் பற்பல நறுமணப்பொருட்கள் சேர்ப்பதால், ருசி பன்மடங்கு அதிகமாக இருக்கும்.
முன்பு விவரித்தது போல, இளசான ஆடு அல்லது நாட்டுக்கோழியில்தான் இந்த பிரியாணி தயாரிக்கப்படுகிறது.
- நாம் இங்கு நாட்டுக்கோழியில் தலப்பாக்கட்டி பிரியாணி தயாரிப்பது எப்படி என்று காண்போம்.
ஏன் பிரோய்லர் கோழி இல்லை? ஏன் நாட்டுக்கோழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
- பொதுவாக நாட்டுக்கோழியில் எதை சமைத்தாலும் ருசி மிகவும் அதிகமே.
- நாட்டுக்கோழி இயற்க்கையானதால் எந்த வித சுரப்பியின் தாக்குதல் இல்லை; விஷத்தன்மையும் இல்லை. பிரோய்லர் கோழியைப் பார்க்க, நாட்டுக்கோழியில் கொழுப்பளவு மிகவும் குறைவே. நாட்டுக்கோழியில் அதுபோல, சத்தின் அளவும் மிகவும் அதிகம்தான். ஆதலால், புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.
- ஆதலால் கர்ப்பிணிகளையும் நாட்டுக்கோழியை தைரியமாக சாப்பிடலாம். உடலுக்கு எந்த வித கேடும் இல்லை. குழந்தைகளுக்கும் நன்றாக பரிமாறலாம்.
பலரும் இந்த உணவை சாப்பிட்டு இருப்பார்கள். ஆனால், பலருக்கு இதை வீட்டில் எப்படி தயாரிப்பது என்று தெரியாது. இதைக் கருத்தில் கொண்டு, இதோ தெரிவிக்கிறோம், தலப்பாக்கட்டி நாட்டுக்கோழி பிரியாணியின் ரெசிபி.
எப்படி தலப்பாக்கட்டி நாட்டுக்கோழி பிரியாணியை சமைக்க வேண்டும்?
- ஆயத்த நேரம் – 20 நிமிடங்கள்
- சமைக்க நேரம் – 15 நிமிடங்கள்
- பரிமாறும் அளவு – 4 பேர்
தேவையானவை:
- நாட்டுக்கோழி – ½ கிலோ
- சீரக சம்பா அரிசி – 2 கப்
- சின்ன வெங்காயம் – 200 கிராம்
- தக்காளி – 1 (நறுக்கி வைத்துக்கொள்ளவும்)
- பூண்டு – 15 பற்கள்
- இஞ்சி – 2 இன்ச் துண்டு
- பச்சை மிளகாய் – 4
- புதினா இலைகள் – ½ கப்
- கொத்தமல்லி இலைகள் – ½ கப் (நறுக்கி வைத்துக்கொள்ளவும்)
- தயிர் – ¼ கப்
- மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
- மல்லி தூள் – 2 டீஸ்பூன்
- கல் உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – 1/4 கப்
- நெய் – 3 டேபிள்ஸ்பூன்
- தண்ணீர் – 3 கப்
- எலுமிச்சை – ½
பிரியாணி மசாலா தயாரிப்பு
- பே இலை – 1
- பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
- சீரகம் – ½ டீஸ்பூன்
- மிளகு – 1 டீஸ்பூன்
- இலவங்கப்பட்டை – 1 இன்ச்
- கிராம்பு – 3
- ஏலக்காய் – 3
- ஸ்டார் வடிவில் அனிசீட் – 1
- சாதிப்பூ – 1
- காய வாய்த்த சிவப்பு மிளகாய் – 4
- மல்லி தூள் – 2 டீஸ்பூன்
- மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
ஆயத்த முறை
- சிக்கனை மரிநேட் செய்யவும் – சிக்கன் துண்டுகளை நன்றாக கழுவிவிட்டு மஞ்சள் பொடி, எலுமிச்சை சாறு மற்றும் உப்பின் கலவையால் சிக்கன் துண்டுகளின் மீது பூசி வைக்கவும்
- சீரக சம்பா அரிசியை நன்றாக கழுவிவிட்டு தண்ணீரில் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பிறகு, தண்ணீரை ஊற்றி விடவும்
- பிரியாணி மசாலா தலைப்பின் அடியில் கொடுக்கப்பட்ட எல்லா பொடிகளையும் சேர்த்து கரகரவென அரைத்துக்கொள்ளவும்.
- சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை கழுவிவிட்டு, நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
செயல்முறை
- சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, மற்றும் பச்சை மிளகாவை நன்றாக மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி சூடாக்கவும். பிறகு மிக்சியில் அரைக்கப்பட்ட மசாலா மற்றும் பே இலையை சேர்த்து, கல் உப்பையும் சேர்த்து கோல்டன் பிரவுன் நிறமாகவும் வரை நன்றாக வதக்கவும்.
- தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்
- நறுக்கி வைத்த கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
- இந்த கலவையுடன் மரிநேட் செய்த சிக்கனை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- மேற்கண்ட கலவையுடன் புதிதாக தயாரித்த பிரியாணி மசாலா மற்றும் தயிரையும் சேர்த்து விட்டு, ஐந்து நிமிடம் வரை வதக்கவும்
- பிறகு தண்ணீர் சேர்க்கவும். அதாவது, 2 கப் சீரக சம்பா அரிசிக்கு, 3 கப் தண்ணீர் சேர்க்கவும். பிறகு நன்றாக கொதிக்க விடவும். வேண்டுமென்றால், உப்பைச் சேர்க்கவும்
ஊறவைத்த சீரக சம்பா அரிசியை சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கிக்கொள்ளவும்.
- நன்றாக கொதித்த பிறகு, குக்கரை 15 நிமிடம் வரை, மீடியம் தீயில் மூடி வைக்கவும்.
- பிறகு அடுப்பை அணைத்து விடவும். 10 நிமிடம் வரை இருக்க விட்டதற்கு பிறகு மூடியைத் திறக்கவும்சூடாக இருக்கும்போதே ஒரு டீஸ்பூன் நெய்யை ஊற்றவும்.
- நன்றாக பிறகு இளக்கி விடவும். பிரியாணியை புதினா இலைகளாலும், முந்திரியாலும் அழகுப்படுத்தவும்.
திண்டுக்கல் தலப்பாக்கட்டி நாட்டுக்கோழி பிரியாணி ரெடி!!
எப்படி பரிமாறலாம்?
முட்டையுடனும் தயிர்ப்பச்சடியுடனும் சால்னாவுடனும் இந்த பிரியாணியைப் பரிமாறலாம்.
மறக்காமல் சமைத்து பார்த்து அதன் புகைப்படத்தை ஷேர் செய்யவும். சாப்பிட்டு பார்த்து உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்திருந்தால் மறக்காமல் உங்களின் அனுபவத்தையும் ஷேர் செய்யவும்.
#babychakratamil