கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்ன?

cover-image
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்ன?

 

கர்ப்பிணிகள் ஆரோக்கியமாக இருந்தால் பிறக்கப்போகும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதே தத்துவம்.

 

இரண்டாவது ட்ரைமெஸ்டேரிலிருந்தே கருவிலிருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி ஆரம்பமாகும். மூன்றாவது ட்ரைமெஸ்டேர் வரும்போது, குழந்தையின் மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும். அந்நேரம் தாயின் மனநிலை குழந்தைக்கும் அப்படியே பரிமாறப்படும் என்பதே மருத்துவ ஆய்வு கூறுகிறது.

 

புத்தகம் படிப்பது உங்களின் பொழுதுபோக்கா? இந்நேரங்களில் எந்தவித பதற்றமும் ஏற்படுத்தாத புத்தகத்தையே படிக்க வேண்டும். எப்படிப்பட்ட புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று பேபிசக்ரா உங்களுக்கு தகுந்த யோசனையை அளிக்கிறது.

 

கீழே கொடுக்கப்பட்ட நூல்களைப் படித்தால் மனதை சமநிலைப்படுத்தும்; நல்லதை மட்டுமே போதிக்கும்; உண்மை மற்றும் நேர்மையின் மகத்துவத்தை உணர்த்தும்

 • பகவத்கீதை
 • திருவாசகம் சில சிந்தனைகள்
 • வால்மீகி ராமாயணம் – சுந்தர காண்டம்
 • பைபிள்
 • குரான்

 

கீழே கொடுக்கப்பட்ட குட்டிக் கதைகளால் பிணைக்கப்பட்ட புராண நூல்களைப் படித்தால், தர்மத்தின் வாழ்வுதனை  சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்,  என்கிற பாடத்தைப் போதிக்கும் கதைகளாகும்

 

 • ராமாயணம்
 • தசாவதாரம்
 • சிவபுராணம்
 • தெனாலிராமன்

 

கீழே கொடுக்கப்பட்ட கர்ப்பம் சம்பந்தமான நூல்களைப் படித்தால், உங்களுக்கு கர்ப்பத்தைக் குறித்துள்ள எல்லாவித சந்தேகங்களும் தீரும்; தெளிவும் பிறக்கும். குழந்தையின் பிறப்பு மற்றும் வளர்ப்புக்கு பயன்படும்.

 

 • கர்ப்பக் குறிப்புகள்
 • கர்பவதிகளுக்கு அவசியமான கையேடு
 • கர்ப்பிணிகளுக்கான உணவும்,  உணவு முறைகளும்
 • கரு முதல் குழந்தை வரை
 • பிரசவகால பாதுகாப்பு
 • குழந்தைப் பேறு

 

இவையில்லாமல், உத்வேகம் பிறக்கக்கூடிய பற்பல மகான்களின் உண்மை கதைகளையும், மூளைக்கு வேலை கொடுக்கும்  கதைகளையும் படிக்கலாம். விஞ்ஞானம் கலந்த நூல்களைப் படிப்பது மிகவுமே நல்லது.

 

முடிந்தவரை இந்நேரங்களில் திகில் கதைகளையோ, திருட்டு கொலை சம்பந்தமான கதைகளைப் படிக்காமல் இருப்பது நல்லது. நீங்கள் படிப்பதை உங்கள் கருவிலிருக்கும் குழந்தையும் கேட்கிறது என்பதை நன்றாக மனதில் வைத்துக்கொள்ளவும். உங்களின் குழந்தை பிற்காலத்தில் எப்படி வளர வேண்டும், எதைப் படிக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டிய நேரம் இதுதான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

 

நீங்கள் ஏதேனும் புத்தகங்களை பரிந்துரைக்க விரும்புகிறீர்களா? மறக்காமல் ஷேர் செய்யவும்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!