• Home  /  
  • Learn  /  
  • வேலையிடத்தில் யாரிடம் எப்போது எப்படி கர்ப்ப செய்தியை தெரிவிக்க வேண்டும்?
வேலையிடத்தில் யாரிடம் எப்போது எப்படி கர்ப்ப செய்தியை தெரிவிக்க வேண்டும்?

வேலையிடத்தில் யாரிடம் எப்போது எப்படி கர்ப்ப செய்தியை தெரிவிக்க வேண்டும்?

7 May 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

வாழ்த்துக்கள்! நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள். இந்த செய்தியை கேட்டவுடன் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமான உணர்வு ஏற்படும். சிலர் மிகவும் குதூகலம் அடைவர். சிலர் இது எதிர்ப்பாராமல் நடந்துவிட்டதே என்று வருத்தப்படுபவர்களும் உள்ளனர். தன் வேலையின் எதிர்காலம் என்னவாகிவிடும் என்கிற பயமும் பலருக்கு ஏற்படும். எப்படி இந்த செய்தியை பாஸ்ஸிடமும் சக பணியாளர்களிடமும் தெரிவிப்பது? அவர்கள் இந்த செய்தியை கேட்டு என்ன சொல்வார்கள், என்றெல்லாம் யோசனைகள் எழும்.

 

எப்படி உங்களின் இந்த விசேஷமான செய்தியை வேலை செய்யும் இடத்தில தெரிவிப்பது? இதோ, உங்களுக்கான சில எளிய வழிகள்…

 

வேலையிடத்தில் யாரிடம் முதலில் தெரிவிக்கவும்?

 

  • எவ்வளவுதான் உங்களுக்கு அதிக சக பணியாளர்கள் தோழர்களாகவோ தோழிகளாகவோ இருந்தாலும் சரி. முதலில் இந்த செய்தியை உங்கள் பாஸ்ஸிடம் தெரிவிப்பதே உத்தமம்.
  • உங்களின் பாஸ்ஸுக்கு உடனே பதற்றமோ, கோபமோ வரவும் வாய்ப்புள்ளது. அதுவும் நீங்கள் தான் அந்த வேலையிடத்திலுள்ள முதல் கர்ப்பிணியென்றால், உங்கள் பாஸ்ஸின் எதிர்மறையான விளைவுகளை சந்திக்கவும் வாய்ப்புள்ளது.
  • பயப்படாதீர்கள்! கோபப்படாதீர்கள்! எதிர்ப்பாராமல்  இந்த செய்தியை கேட்க நேர்ந்ததால், உங்கள் பாஸ்ஸின் எதிர்வினை இப்படியிருக்கலாம். பொறுமையாக இருக்கவும்.

 

எப்போது இந்த செய்தியை தெரிவிக்கவும்?

 

  • சட்டரீதியாக நீங்கள் உங்கள் பாஸ்ஸிடம் கர்ப்ப செய்தியை, உங்களுக்கு தெரிந்தவுடனே தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை.
  • உங்கள் பிரசவ தேதியிலிருந்து 15 வாரங்களுக்கு முன்பு தெரிவித்தால் போதுமானது.
  • பல பெண்களும் தனது முதல் ட்ரைமேஸ்ட்டர் முடிந்தவுடனே பாஸ்ஸிடம் தெரிவிக்கின்றனர்.
  • இப்படி நேரமாக தெரிவிப்பதற்கு பற்பல பயன்களும் உள்ளன.
  • நீங்கள் சீக்கிரமாக தெரிவித்தால், உங்கள் பாஸ் உங்களுக்கு தேவையான சலுகைகளை செய்து தரலாம். உங்களின் வேலைச்சுமையை குறைக்கவும் வாய்ப்புள்ளது. சக பணியாளர்களின் தக்க உறுதுணையும் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு. அதிக நேரம் ஆஃபீஸில் இருக்கச்சொல்லி தொந்தரவு இருக்காது. கர்ப்ப பரிசோதனைகளை செய்து கொள்ள உங்களுக்கு வேண்டிய விதத்தில் அனுமதி தர வாய்ப்புண்டு.
  • தகுந்த சான்றிதழ்களைக் காட்டினால் மட்டுமே போதும். நீங்கள் கர்ப்பமான ஒரே காரணத்தினால், உங்களை யாராலும் வேலையை விட்டு தூக்க முடியாது.

 

எப்படி இந்த செய்தியை பகிர வேண்டும்?

 

  • சாதாரணமாக சென்று, உங்கள் பாஸ்ஸிடம் இந்த செய்தியை தெரிவிக்காதீர்கள். சரியான முன்னேற்பாட்டுடன் சென்று தெரிவிப்பது நல்லது.
  • முடிந்தவரை உங்கள் பாஸ் கூலாக இருக்கும் போது தெரிவிப்பதே உத்தமம்.
  • அதே போல, உங்கள் பாஸ் அதிக வேலைச்சுமையுடன் இருக்கும்போதோ அல்லது மீட்டிங் செல்லும் நாட்களில் தெரிவிப்பதைத் தவிர்க்கவும்.
  • இந்த செய்தியை எந்தவித குழப்பம் இல்லாமல், தெளிவாக உங்கள் பாஸ்ஸிடம் தெரிவிக்கவும்.
  • இது உங்களுக்கான தனிப்பட்ட மகிழ்ச்சி நிறைந்த செய்தி. ஆதலால், நீங்கள் இதைத் தெரிவிக்கும்போது மனிப்பைக் கேட்காதீர்கள். நீங்கள் தவறொன்றும் செய்யவில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
  • உங்கள் பாஸ் என்னென்ன கேள்விகளைக் கேட்க போகிறார் என்று ஏற்கெனவே யூகித்து வைத்து, அதற்கான பதிலுடன் எதிர்கொள்ளவும்.
  • நீங்கள் எதற்கு முன்னுரிமை கொடுக்கப்போகிறீர்கள் என்று மனதில் வைத்துக்கொண்டு, தகுந்த வேறுவழிகளை பரிந்துரைக்கவும்.
  • ஏதேனும் அரை நாள் வேலை அல்லது வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பு உள்ளதா என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ளவும்.
  • தனது கர்ப்பம் ஒரு காலமும் தனது வேலைத்திறனை கெடுக்காது என்று உங்களின் பாஸ்ஸிடம் தெளிவாக கூறவும்.
  • எப்போது முதற்கொண்டு விடுமுறை தேவை, யாரிடம் பொறுப்பை ஒப்படைப்பது, எப்படி பிரசவத்திற்கு பின் வேலையில் சேர்வது, என்றெல்லாம் தெளிவாக கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

 

நீங்கள் எதிர்பார்த்தபடி உங்களின் பாஸ் திருப்தியடையவில்லை என்றால் வருத்தப்படாதீர்கள். இப்போதைய காலத்தில் பெண்கள் கர்ப்பமடைவது பெரிய விஷயமல்ல. ஒருவிதமாக போய்க்கொண்டிருக்கும் வேலைகளில் மாற்றம் ஏற்படுவது சகஜம்தான். எந்தவித மாற்றங்களையும் எப்படி சமாளிப்பது என்பது எல்லா பாஸ்ஸுக்கும் நன்றாக தெரியும். காரணம், மாற்றம் ஒன்றே மாறாதது!

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.