ரம்ஜான் நோன்பு துவங்கும் நேரம் வந்துவிட்டது. புதிதாக ஏதேனும் ரெசிபி தயாரித்து பார்க்க நேரம் வந்துவிட்டது. அதற்காக மட்டும்மல்ல. நாம் எல்லோரும் பொதுவாக பிரியாணி என்றாலே வெஜிடபிள், பன்னீர், காளான், சோயா போன்ற சைவ வகைகளும் மீன், சிக்கன், மட்டன் போன்ற அசைவ வகைகளையும் பார்த்திருக்கிறோம். ஆனால் பலாப்பழத்தில் பிரியாணி வகை என்பது மிகவும் புதுமை வாய்ந்தது. அதே நேரம், இது நமது பாரம்பரிய ரெசிபியும் கூட.
ஏன் பலாப்பழம்?
- பலாப்பழம் டையாபடிஸ் நோயாளிகளுக்கு உகந்தது. டையாபடிஸ் அளவை கட்டுக்குள் வைக்கும்.
- பலாப்பழத்தில் ஃபிலேவநோய்டு, ஆண்டிஆக்சிடன்ட், ஃபைடோநியூற்றியன்ட்ஸ், மற்றும் வைட்டமின் – ஸி முதலியன அடங்கியவை. ஆதலால், உடலில் எதிர்ப்புசக்தி அதிகமாக இருக்கும்.
- பலாப்பழத்தில் பொட்டாசியம் அளவு அதிகமாக உள்ளதால், ரத்த அழுத்தத்தை குறைவாக்கும். ஸ்ட்ரோக் மற்றும் இதய நோய் வராமல் தடுக்கப்படும்.
சரி, இந்த பலாப்பழ பிரியாணி எப்படி தயாரிப்பது?
தேவையானவை:
- 1 சிறிய தோலுரிக்கப்பட்டு துண்டுகளாக நறுக்கி பொறிக்கப்பட்ட பலாப்பழம்
- 1 ½ கப் பாஸ்மதி அரிசி (பதினைந்து நிமிடங்கள் ஊறவைக்கவும்)
- ஏலக்காய் – 9
- 2 பே இலைகள்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- இலவங்கப்பட்டை – 1
- கிராம்பு – 3-4
- வறுத்த வெங்காயம் – 1 கப்
- சிவப்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
- கெட்டித் தயிர் – 1 1/2 கப்
- பச்சை மிளகாய் – 4
- மஞ்சள் தூள் – 1/2 கப்
- உப்பு – சுவைக்கேற்றபடி
- துண்டுகளாக நறுக்கப்பட்ட இஞ்சி – ஒரு துண்டு
- கரம் மசாலா தூள் – 2 டீஸ்பூன்
- ஏலக்காய்ப் பொடி – 1/4 டீஸ்பூன்
- நெய் – 2 டீஸ்பூன்
- புதிய இலைகள் – 25
- பொடியாக நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகள் – 2 டீஸ்பூன்
- பால் – 2 டீஸ்பூன்
- பன்னீர் – 2 டீஸ்பூன்
- குங்குமப்பூ – 1 சிட்டிகை
செயல்முறை
- ஒரு வானலியில் எண்ணெயை ஊற்றி சூடுபடுத்தவும்.
- பலாப்பழ துண்டுகளை எண்ணெயில் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். அதற்கு பின், அதை தனியே ஒதுக்கி வைக்கவும்
- பிறகு ஒரு நான்-ஸ்டிக் வானலியில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக்கொள்ளவும்.
- கருப்பு ஏலக்காய், பே இலைகள், கிராம்பு, இலவங்கப்பட்டை, பச்சை ஏலக்காய், சீரகம் முதலியவற்றை சூடான தண்ணீரில் சேர்த்து கொள்ளவும்.
- பிறகு, இந்த கலவையுடன் நன்றாக வடிக்கட்டிய பாஸ்மதி அரிசியை சேர்த்து கொதிக்கவிடவும். தேவையான அளவு உப்பை சேர்த்து பாதியளவில் வேகவைக்கவும்.
- பிறகு ஒரு நல்ல ஆழமான நான்-ஸ்டிக் வானலியில் தயிர், முக்கால் கப் வறுத்த வெங்காயம், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய்த் தூள், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, இஞ்சி துண்டுகள், 1 டீஸ்பூன் நெய், வறுத்த பலாப்பழம், 1 டீஸ்பூன் கரம் மசாலா பவுடர், தேவையான அளவு உப்பு, ஆகிய எல்லாவற்றையும் சேர்க்கவும்.
- மேலேயுள்ள கலவையுடன், 1 டீஸ்பூன் பச்சை ஏலக்காய் தூள், 10 புதினா இலைகள் மற்றும் 1 டீஸ்பூன் கொத்துமல்லி இலைகளை சேர்த்து கலக்கவும். 1/4 கப் கொதிக்கும் தண்ணீரையும் சேர்க்கவும்.
- பிறகு குங்குமப்பூ, பால் மற்றும் பன்னீரையும் சேர்க்கவும்.
- பாதியளவில் வெந்த அரிசியை வடிக்கட்டின பிறகு, தயிர் கலவையின் மீது பரப்பவும். ஒரு சிட்டிகை கரம் மசாலா மற்றும் ஏலக்காய்த் தூளையும் தூவவும்.
- கொத்துமல்லி இலைகள், 7 புதினா இலைகள், மீதமுள்ள வறுத்த வெங்காயம், நெய் மற்றும் குங்குமப்பூ பாலைச் சேர்க்கவும்.
- மறுபடியும் மீதமுள்ள சாதத்தை வடிக்கட்டி மேலாகப் பரப்பவும். மீதமுள்ள புதினா மற்றும் குங்குமப்பூவையும் சாதத்தின் மீது பரப்பவும். அதற்கு மேல், நெய்யையும் சேர்க்கவும்.
- மற்றொரு பாத்திரத்தால் மூடி, அதிகளவு சூட்டில் முதல் இரண்டு நிமிடங்கள் வேகவைக்கவும்.
- பிறகு தீயளவைக் குறைத்து, பதினைந்து நிமிடங்கள் வரை, அதாவது அரிசி வேகும்வரை சமைக்கவும்.
பலாப்பழ பிரியாணி ரெடி!!
எப்படி பரிமாறுவது?
இந்த பலாப்பழ பிரியாணியை சால்னா அல்லது தயிர் பச்சடியுடன் பரிமாறலாம்.
- ஆயத்த நேரம் – 20 நிமிடங்கள்
- சமைக்க நேரம் – 15 நிமிடங்கள்
- பரிமாறும் அளவு – 3 பேர்
மறக்காமல் சமைத்து பார்த்து, கமகம பலாப்பழ பிரியாணியின் புகைப்படத்தை ஷேர் செய்யவும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்திருந்தால் மறக்காமல் உங்களின் அனுபவத்தையும் ஷேர் செய்யவும்.
பேனர் படம்: archanaskitchen
#babychakratamil