‘நான் கர்ப்பமாக இருக்கிறேன்.’ இப்படி மொட்டையாக யாரிடமும் தெரிவிப்பதில் அவ்வளவு சுவாரசியம் இல்லை. கேட்பதற்கு குதூகலமாகவும் இல்லை. காரணம், இச்செய்தி ஒரு தம்பதியின் வாழ்வில் அதிக மகிழ்ச்சியை அளிக்கும் செய்தியாகும். அதை மெதுவாகவும் மறைமுகமாகவும்தான் தெரிவிக்க வேண்டும்.
பிறகு, நாம் எப்படி தெரிவிக்கலாம்? முதலில் நாம் கணவரிடம் எப்படி தெரிவிப்பது? பிறகு குடும்பத்தினரிடம் எப்படி தெரிவிப்பது?
சினிமாவில்கூட, ஒரு பெண் தன் கணவரிடம் இந்த செய்தியை மறைமுகமாக தெரிவிப்பார். அவரின் கையை தன் வயிற்றில் வைக்கும் காட்சி. உடனே கணவனோ, ‘நிஜமாகவா?’ என்று கேட்பார்.
இம்முறையில் இல்லாமல், வேறு எந்த முறைகளில் மறைமுகமாக இந்த செய்தியைத் தெரிவிக்கலாம்.
இதோ, பேபிசக்ரா அதற்கான யோசனைகளைத் தருகிறது. அவை என்னவென்று காண்போம்.
முதலில் உங்களின் கணவரிடம் எப்படி மறைமுகமாக தெரிவிக்கலாம்?
- உங்கள் கணவருக்கு அதிகமாக டிவி காண்கிற பழக்கம் இருக்கிறதா? டிவி ரிமோட் தன் கையில்தான் இருக்க வேண்டும் என்று அடம்பிடிப்பாரா? மெதுவாக சென்று அவரது பெரிய ரிமோட் பக்கத்தில் அவர் பார்க்கும் வண்ணம், ஒரு சிறிய ரிமோட் ஒன்றையும் வைக்கவும். உங்கள் கணவர் உடனே கண்டுபிடித்துவிடுவார்!
- அவர் புத்தகம் படிக்கும்போது, நீங்கள் அவருக்கு ஒரு ‘குழந்தை பிறப்பு’ பற்றிய ஒரு புத்தகத்தைத் தரவும். அவர் புரிந்து கொள்வார்.
- சர்ப்பிரைஸ் என்று சொல்லி உங்கள் கணவருக்கு ஒரு டி-ஷர்ட் பரிசளிக்கவும். கூடவே, ஒரு குட்டி டி-ஷர்ட்டையும் கொடுக்கவும். அவர் குதூகலம் அடைவார்.
- உங்கள் கணவருக்கு புகைப்படம் எடுக்கு விருப்பம் உள்ளதா? அதுவும் செல்ஃபி? இருவரும் ஒரு செல்ஃபிக்கு போஸ் கொடுக்கவும். அவர் போஸ் கொடுக்கும்போது ஒரு பிறந்த குழந்தையின் புகைப்படத்தையும் இடையில் நுழைக்கவும். அப்போது அவர் முகத்தில் வருமே ஒரு பாவ மாற்றம்! அதுதான் சரியான செல்ஃபி கிளிக். புரிந்துவிடுவார் அவரும் எளிதில்.
- உங்கள் கணவருக்குப் பாட்டு கேட்கும் பழக்கம் உள்ளதா? இடையில் சம்பந்தம் இல்லாமல், கர்ப்பம் பற்றின பாட்டுகளையும் தாலாட்டு பாட்டுகளையும் நுழைக்கவும். சரியான சவால்!
- நீங்கள் இருவரும் சேர்ந்து கடைக்கு சாமான் வாங்க போனீர்களா? திடீரென ஹக்கீஸ், ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் போன்ற குழந்தைக்குரிய சாமான்களைச் சேர்க்கவும். அவர் உடனே புரிந்து கொள்வார்.
குடும்பத்தினருக்கு எப்படி அறிவிக்கலாம்?
- முன்பு அறிவித்தது போல், உங்களின் குதூகல செல்ஃபி போஸை உங்கள் இருவரின் டி-ஷர்ட்டில் புகைப்படமாக மாற்றவும். கூடவே ஒரு காப்ஷன். ‘நாம் இருவர், நமக்கு ஒருவர்’. பார்ப்பவர்கள் அனைவருக்கும் எளிதில் புரிந்துவிடும்.
- அடுத்து ஏதேனும் ஒரு பண்டிகை நாள் வருகிறதா என்று பார்க்கவும். அப்படியென்றால், உங்கள் குழந்தை தனது பாட்டி தாத்தாவுக்கு வாழ்த்துக்கள் அனுப்புவது போல ஒரு அட்டையைக் கொடுக்கவும். அனுப்பியது யார் என்று பார்த்தவுடன் புரிந்து கொள்வார்கள்.
- குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து அமர்ந்து உணவுண்ணும் பழக்கம் இருக்கிறதா? சபை கூடும்போது குட்டியாக ஒரு இருக்கையையும் இடையில் வைக்கவும். இதைவிட மகிழ்ச்சி பெரியோர்களுக்கு வேறு என்ன இருக்க முடியும்.
- வீட்டில் உள்ள பெரியோர்களுக்குப் பாட்டு கேட்கும் பழக்கம் இருக்கிறதா? அதே ப்ளேயரில் நீங்கள் உங்களின் கர்ப்ப செய்தியை ரெகார்ட் செய்யவும். அவர்கள் பாட்டு கேட்கும்போது, இறுதியில் எதிர்ப்பார்க்காமல் இந்த செய்தி வரும்படி தயார் செய்யவும். குதூகலத்தில் பூரித்துப்போவார்கள்.
- உங்களுக்கு வேறு குழந்தைகள் இருக்கிறதா? அவர்கள் தன் பாட்டி தாத்தாவிடம் இந்த செய்தியை ரகசியமாக தெரிவிக்கும்படி செய்யவும். மிகவும் மகிழ்ச்சியடைவர்.
- நீங்கள் மற்றும் உங்கள் கணவர். நீங்கள் இருவரும் கையில் சோனோகிராம் அல்லது நேர்மறை கர்ப்ப பரிசோதனை ரிப்போர்ட்டைப் பிடித்துக்கொண்டு இருக்குமாறு ஒரு புகைப்படம் எடுக்கவும், உங்களின் குடும்பத்தினருக்கு உடனே அந்த புகைப்படத்தை வாட்ஸப் அனுப்பவும். அவ்வளவுதான். உங்களுக்கு இனி ராஜ மரியாதைதான்.
உங்களிடம் இது போன்ற வேறு ஏதேனும் யோசனை இருந்தால், மறக்காமல் ஷேர் செய்யவும்.
#babychakratamil