வாழ்த்துக்கள், நீங்கள் இப்போது கர்ப்பமாக இருக்கிறீர்கள். இந்த கர்ப்ப காலத்தில் ஜாக்கிரதையாக இருப்பதென்பது மிகவும் இன்றியமையாதது. அதே நேரத்தில் நீங்கள் வெளியே வேலைக்குச் செல்பவர் என்றால், வேலையை இந்நேரத்தில் எப்படி சமாளிப்பது. இதோ உங்களுக்கான 6 டிப்ஸ்.
1. உங்கள் பாஸிடம் அறிவிக்கவும்:
- கர்ப்ப காலங்களில் பொதுவாகவே பெண்கள் அதிக கர்ப்ப அறிகுறிகளை அனுபவிப்பார்கள்.
- அசதி, தூக்கம், சோர்வு, குமட்டல், வாந்தி, முதுகுவலி போன்ற கர்ப்ப அறிகுறிகளினால் உங்கள் வேலையில் நீங்கள் பின்தங்கி போக வாய்ப்புள்ளது.
- ஆதலால், நீங்கள் கர்ப்பமான செய்தியை உங்கள் பாஸிடம் மறக்காமல் தெரிவிக்கவும்.
- அதுவும் முடிந்தவரை முதல் ட்ரைமேஸ்ட்டர் முடிந்த பிறகு தெரிவிப்பது மிகவும் நல்லது.
- மற்றும் மகப்பேறு விடுப்பு குறித்த தகவல்களையும் தெளிவாக கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.
2. உங்கள் சக பணியாளர்களிடம் அறிவிக்கவும்:
- பாஸடம் தெரிவித்த பிறகு, மறக்காமல் சக பணியாளர்களிடமும் நீங்கள் கர்ப்பமான செய்தியைத் தெரிவிக்கவும்.
- நீங்கள் தெரிவிக்காமல் இருந்தால், உங்களுக்கு வேலை செய்ய விருப்பமில்லை என்று உங்களை தப்பாக புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
- நீங்கள் அவர்களிடம் தெரிவித்தால், உங்களுக்கு நல்ல உறுதுணையாக இருப்பார்கள்.
- சில நாட்கள் உங்களுக்கு ரொம்பவே அசதியாக இருக்கலாம். சில நேரங்களில் உங்களுக்கு அதிகம் வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகளும் அதிகமாக இருக்கலாம். அந்த நேரங்களில் அவர்கள் உங்களுக்கு நன்றாக உதவி செய்வார்கள்.
- அதிக தூரம் பயணம் செய்ய வேண்டி வந்தாலும், உங்களுக்காக அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள வாய்ப்புண்டு.
- அதே போல, வேலை சம்பந்தமான சந்திப்புகளையும் உங்களின் கர்ப்ப பரிசோதனை நாட்களுடன் ஒத்து வராமல் தகுந்த விதத்தில் திட்டமிடவும்.
3. உடல்நிலையை சரியாக புரிந்துகொள்ளவும்:
- எந்த சில நாட்களில் உங்களுக்கு அதிக அசதியோ குமட்டலோ இருந்தால், மறக்காமல் அதை உங்கள் சக பணியாளர்களிடம் தெரிவிக்கவும்.
- நாட்கள் நெருங்க நெருங்க எடை கூடுதல், காலில் நீர் கட்டுதல், சோர்வு முதலியன அதிகரிக்கும்.
- மேலும் இரண்டாவது ட்ரைமேஸ்ட்டரில் உங்களில் கர்ப்ப அறிகுறிகள் சற்று அதிகமாகவே இருக்கும்.
- நீங்கள் உங்களின் சக பணியாளர்களிடம் நேர்மையுடன் தெரிவித்தால், அவர்கள் உங்களுக்கு வேண்டிய உதவியை செய்வார்கள்.
- நீங்களும் உங்கள் உடல் நிறை பேதமாக இருக்கும்போது அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்யலாம்.
4. வேறுவழியை யோசிக்கவும்
- பிரசவத்திற்கு பிறகும் நீங்கள் முழு நேரம் வேலை செய்ய விருப்பம் இருந்தால் மறக்காமல் உங்கள் பாஸிடம் தெரிவிக்கவும்.
- ஏதேனும் வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதி இருக்கிறதா, அல்லது அரை நாட்களுக்கு வந்து செல்ல முடியுமா என்றெல்லாம் மறக்காமல் கேட்டு அதற்கான சம்மதத்தைப் பெற்றுக்கொள்ளவும்.
5. அறிகுறிகளை சமாளிக்க தயாராகவும்
- குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளை சமாளிக்க, மறக்காமல் ஒரு கைப்பிடி துணி, எலுமிச்சை போன்ற பொருட்களை உங்களின் அருகே வைத்துக் கொள்ளவும்.
- மிகவும் அசதியாக இருந்தால், அதிக நேரம் நின்று வேலை செய்யாமல் தேவையான அளவு இடைவெளியை எடுத்துக் கொள்ளவும்.
- தனியே ஓய்வெடுக்க அறை இருந்தால், உங்கள் வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு சற்று ஓய்வெடுத்துக் கொள்ளவும். அதிக தூர பயணத்தைத் தவிர்க்கவும்.
- உங்களை நீங்கள் அதிகமும் வருத்திக்கொள்ளாதீர்கள்.
- அதேபோல, நீங்கள் மன அழுத்தத்தை அனுபவிக்கிறீர்களா? கர்ப்ப கால யோகா முறைகளையும், உடற்பயிற்சிகளையும் விடாமல் தொடரவும்.
- நேரம் கிடைக்கும்போதெல்லாம் நன்றாக நடக்கவும்.
6. கவனமாக செயல்படவும்
- நீங்கள் வேலை செய்யும் இடம் ரொம்ப தூரமாக இருந்தால், தேவையான அளவு முன்னெச்சரிக்கையுடன் செயல்படவும்.
- கூட்டம் அதிகமுள்ள பஸ்ஸில் பயணிப்பதை தவிர்க்கவும்.
- தகுந்த இடைவெளியில் சத்துள்ள உணவுகள், பழங்கள் ஆகியவற்றை சாப்பிட மறக்காதீர்கள். மறக்காமல் அதிக அளவு தண்ணீரை அருந்தவும்.
முதலில் மறக்காமல் டாக்டரிடம் நீங்கள் கர்ப்ப காலத்தில் வேலைக்கு போகலாமா என்று கேட்டு தகுந்த ஆலோசனை பெற்றுக்கொள்ளவும். மேலே கூறியவற்றை மனதில் வைத்துக்கொண்டு, உங்களின் கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் சிறப்பாக கொண்டாடவும்.
#babychakratamil