ஏன் கர்ப்ப காலங்களில் வலி ஏற்படுகின்றது?
வலிகளும் சுளுக்கும் கர்ப்பம் என்கிற குதூகலத்தின் மறுபக்கம். நம் கர்ப்பப்பையில் குழந்தை வளர வளர சுற்றியுள்ள தசைகளும் தசைநார்களும் விரிந்து கொடுக்கும். அவ்வாறு விரியும்போது முதுகெலும்பில் சற்று அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தம் கூட கூட வலியும் ஏற்படுகின்றது.
இந்த கர்ப்ப கால வலி பொதுவாக கர்ப்ப காலத்தின் எந்த ட்ரைமேஸ்ட்டரில் ஏற்படும்?
முதலாவது ட்ரைமேஸ்ட்டர் முதற்கொண்டு மூன்றாவது வரை எப்போது வேண்டுமென்றாலும் ஏற்படும்.
எந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்படும்?
- வலி
- சுளுக்கு
- வீக்கம்
- உணர்வின்மை (மரத்து போகுதல்)
பொதுவாக கர்ப்பிணிகளுக்கு எந்த பகுதிகளில் வலி ஏற்படும்?
- தலைவலி
- கர்ப்பப்பை இடத்தில சுளுக்கு
- யோனி வலி
- கால் வலி மற்றும் சுளுக்கு
- ரெஸ்ட்லெஸ் லேக் சின்ட்றோம்
- கார்பல் டனல் சின்ட்றோம்
- விலா எலும்பு வலி
- ஸ்கையாடிக்கா
- இடுப்பு வலி
- கீழ் முதுகு வலி
- டெயில்போன் வலி
- தொப்புள் வலி
ரெஸ்ட்லெஸ் லேக் சின்ட்றோம் என்றால் என்ன?
- பொதுவாக இந்த அறிகுறி மூன்றாவது ட்ரைமேஸ்ட்டரில் ஏற்படும்.
- இத்துடன் ஃபாஸ்ஃபோரஸ் அதிகமானாலும், கால்ஷியம் குறைந்து போனாலும் காலில் சுளுக்கு அடிக்கடி ஏற்படும்.
- ரெஸ்ட்லெஸ் லேக் சின்ட்றோம், அயர்ன் அல்லது ஃபோலிக் ஆஸிட் பற்றாக்குறையினால் ஏற்படுகிறது
- கால்களை ஆட்டிக்கொண்டு இருக்க வேண்டி வரும்
- ஒருவித இனம்புரியாத உணர்வு மற்றும் இரவு நேர கால் இழுவையும் ஏற்படும்
கார்பல் டனல் சின்ட்றோம் என்றால் என்ன?
- கைகளில் உணர்வின்மை மற்றும் ஒருவித கூச்சம் ஏற்படும்
- கைகளின் அதிக பயன்பாட்டினால் கார்பல் டனல் சின்ட்றோம் ஏற்படும்
- கர்ப்ப கால நீர்க்கட்டுதல் மற்றும் வீக்கத்தினாலும் இந்த குறை ஏற்படுகிறது
ஸ்கையாடிக்கா ஏற்படுவதன் காரணம் என்ன?
- கர்பப்பை பெரிதாகுந்தோரும் ஸ்கையாடிக் நரம்பில் அழுத்தம் ஏற்படும்.
- இந்த அதீத அழுத்தத்தினால் பிட்டம், கீழ் முதுகு மற்றும் தொடையில் வலி, கூச்சம், உணர்வின்மை முதலியன ஏற்படும்.
விலா எலும்பு வலி, டெயில்போன் வலி, இடுப்பு வலி, மற்றும் தொப்புள் வலி ஏன் ஏற்படுகின்றன? வலியிலிருந்து எப்படி விடுபெறுவது?
- டெயில்போன் முதுகெலும்பின் கீழ் நுனியில் உள்ளது. கர்ப்பப்பையின் பின்புறத்தில் இருக்கும். கருவில் குழந்தை உதைப்பதால், விலா எலும்பு மற்றும் டெயில்போன்னில் அழுத்தம் ஏற்பட்டு வலி தோன்றுகிறது.
- சில நேரம், சுரப்பிகள் மற்றும் மலச்சிக்கல் வலியை அதிகரிக்கும்.
- இடுப்பு வலி வருவதற்கு காரணம், தோற்றப்பாங்கில் வரும் மாற்றம்தான். குழந்தை கருவில் வளர வளர நம்மை அறியாமல் இடுப்பை முன்பாகமோ பின்பாகமோ தள்ளிக்கொண்டு நடப்போம்.
- அதே போல, கருவில் குழந்தை வளருந்தோரும் சுற்றியுள்ள தசைகளில் அழுத்தம் ஏற்பட்டு தொப்புள் வலி அதிகமாகும்.
- இதற்கு தீர்வு என்பது அந்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். ஒரு புறமாக தூங்கவும். தூங்கும்போது தொப்புளுக்குப் பக்கத்தில் தலையணையை வைத்துக்கொள்ளுங்கள்.
- வலி அதிகளவில் இருந்தால் மேடேர்நிட்டி சப்போர்ட் பெல்ட்டை பயன்படுத்தவும். நீங்கள் நின்று வேலை செய்யும்போது, உங்களின் முதுகுக்கும், வயிற்றுக்கும் நல்ல தாங்காக இருக்கும்.
பொதுவாக மேலே குறிப்பிட்டுள்ள வலிகளுக்கு என்னதான் தீர்வு?
- சரியான வேளையில் நன்றாக தூங்கவும்
- உயர்ந்த சத்துள்ள உணவுகளையும் மற்றும் பழங்களையும் சரியான இடைவெளியில் உண்ணவும்.
- பிராணயாமா போன்ற மூச்சு சம்பந்தப்பட்ட எளிதான உடற்பயிற்சியை முறையாக செய்து வரவும்.
- அதேபோல நீட்சி யோகா முறைகளை, நல்ல யோகா பயிற்சியாளரின் உதவியால் மெதுவாக செய்யலாம்.
- சூடு ஒத்தடம் கொடுக்கவும்
- நீராகாரத்தைக் கூட்டவும். அதிகளவில் தண்ணீர் அருந்தவும்
- வெந்நீரில் குளிக்கவும்
- மேலே குறிப்பிட்டுள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்தியும் எந்தவித பலன்கள் இல்லையென்றால், உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்கவும்.
#babychakratamil