10 May 2019 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
‘ஒரு தாய் தனக்கும், தன் குழந்தைக்கும், இந்த பூமிக்கும் தரும் பரிசின் பெயர் தாய்ப்பால்’ – பாமெலா விக்கின்ஸ்
‘உணவும் மருந்தும் ஒன்றே’ என்ற பழமொழியின் படி பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே ஒரே சிறந்த உணவு. அதுவே சிறந்த மருந்தாகும். அதிகளவில் தாய்ப்பால் ஊட்ட ஊட்ட, தாய்மார்களுக்கும் அதிக சத்துகள் கிடைக்கும். அதன்படி, தாய்க்கும் சேய்க்கும் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாக மாறும். அவர்களுக்கு இடையில் இணைப்பிரியா பந்தமும் ஏற்படும்.
நமது பேபிசக்ரா, தாய்ப்பாலூட்டும் எல்லா தாய்மார்களுக்கும் தகுந்த ஆதரவு தந்துள்ளனர். அதன் பலனாக பேபிசக்ரா ஜண்டு பிராண்டுடன் சேர்ந்து இந்த அன்னையர் தினத்தில் ‘பிரெஸ்ட்ஃபீடிங் அண்ட் மதர்ஹுட் (தாய்ப்பாலும் தாய்மையும்)’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். மும்பையில் சாண்டாகிரூஸ் என்கிற இடத்தில் உள்ள சூர்யா மருத்துவமனையில் மே 12-ஆம் தேதி காலை 11-12 மணியளவில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
ஏன் இந்த தலைப்பு?
இந்திய ஆராய்ச்சி படி கிராமங்களில் வெறும் 55% மற்றும் நகரப்புறங்களில் வெறும் 34% தாய்மார்கள் மட்டுமே குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகின்றனர். இப்படி ஏற்பட்டால், எதிர்காலத்தில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமலேயே போய்விடும். இந்த நிலையை மனதில் கொண்டுதான், இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் பற்பல பிரபலமான மருத்துவர்களும் தாய்மார்களும் பங்கேற்பர். தாய்மார்கள் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த பதில்கள் மருத்துவர்களால் அளிக்கப்படும்.
முக்கியமாக பிரபல மருத்துவர்களான டாக்டர் திருப்தி தேதியா (மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் ஆலோசனையாளர்), டாக்டர் முகுந்த் ஷிர்லோகா (குழந்தைநல அவசர சிகிச்சையாளர்), மிஸ். பரினா ஜோஷி (ஊட்டச்சத்து ஆலோசனையாளர்) மற்றும் நமது பேபிசக்ராவின் நிறுவனர், நையா ஸாகி.
ஜண்டு பிராண்டுடன் தொடர்பு
ஜண்டு பிராண்டு, ஆயுர்வேத மரபில் தனக்கென்று ஒரு இடம் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கண்டுபிடித்த ஸ்திரிவேதா (தண்ணீர்விட்டான் கலவை) மூலம், தாய்ப்பாலின் மதிப்பைக் குறித்து அவர்கள் தகுந்த விழிப்புணர்வை மக்களுக்கு இடையில் ஏற்படுத்துகின்றனர்.
ஏன் தண்ணீர்விட்டான்?
தண்ணீர்விட்டான் உடலில் ப்ரோலாக்டின் என்கிற சுரப்பியை அதிகமாக ஊக்குவிக்கும். அதன் மூலம், தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
ஆதலால், இந்த அன்னையர் தினத்தை முன்னிட்டு எல்லோரும் ஒன்று சேர்ந்து தாய்ப்பால் மற்றும் தாய்மையின் மகத்துவத்தை மற்றவர்களுக்கு பகிர்வோம்.
A