கோடை கால ஸ்பெஷல் – ஜிகர்தண்டா - ஜில் ஜில் கூல் கூல்!!!

cover-image
கோடை கால ஸ்பெஷல் – ஜிகர்தண்டா - ஜில் ஜில் கூல் கூல்!!!

 

‘ஜிகர்தண்டா’ என்று கேட்டாலே போதும். கார்த்திக் சுப்புராஜ் படத்தின் பெயர்தான் உடனே ஞாபகத்திற்கு வரும். சரிதானே நான் சொன்னது? ஆனால் நாம் இப்போது அந்த படத்தை பற்றி எழுதவில்லை. இந்த படம் வருவதற்கு முன்பே ஜிகர்தண்டா பயங்கரமாவே பிரபலம். அது ஏன் அப்படி? அதை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பதை விரிவாக காண்போம்.

 

ஜிகர்தண்டா என்றால் என்ன?

 

 • பொதுவாக தமிழகத்தில் மதுரையில்தான் ஜிகர்தண்டா பிரபலம். காரணம், கோடை காலத்தில் மதுரையில் தான் அதிக வெயில் காணப்படும். ஆதலால்தான், மதுரை மக்களுக்கு தம் உடலை குளிர்விக்க ஒரு குளிர்பானம் தேவை. அதற்கு பெயர்தான் ஜிகர்தண்டா.
 • இந்த வார்த்தை இந்தி மொழியை குறிக்கிறது. இதனை ஜிகர்+தண்டா என்று இரு சொற்கள் சேர்ந்தவை. ‘ஜிகர்’ என்றால் மனது என்று அர்த்தம். ‘தண்டா’ என்றால் குளிர் என்று அர்த்தம். மனதை குளிர்விக்க ஜிகர்தண்டா உதவும். ஆனால் உண்மையிலேயே இந்த பானம் மனத்தைக் குளிர வைக்குமா என்று தெரியாது. என்ன இருந்தாலும், குளிர்பானத்தில் இதன் ருசியை மிஞ்ச வேறு எந்த பானங்களினாலும் முடியாது.

 

தேவையானவை:

 

 • பால் - கப்
 • பாதாம் பிசின் – 3 டீஸ்பூன்
 • ரோஜா சிரப் – 2 டீஸ்பூன்
 • ஐஸ்கிரீம்

 

செயல்முறை:

 

 • முதலில் பாதாம் பிசினை 8 மணிநேரம் வரை ஊறவைக்கவும்.
 • 8 மணிநேரத்திற்கு பிறகு பாதாம் பிசின் கொழகொழவென இருக்கும்
 • பாலானது தன் அளவிலிருந்து அரையளவு குறையும் வரையிலும், மஞ்சள் நிறமாகும் வரையிலும் கொதிக்க வைக்கவும்.
 • பிறகு பாலை குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர வைக்கவும்
 • பின்னர் ஒரு கப்பை எடுத்துக்கொள்ளவும். பாதியளவு வரை குளிர் பாலை நிரப்பி வைக்கவும். அத்துடன் கொழகொழவென இருக்கும் பாதாம் பிசின், ரோஜா சிரப் மற்றும் ஐஸ்கிரீமை சேர்க்கவும்
 • ஜில் ஜில் கூல் கூல் ஜிகர்தண்டா ரெடி!!

 

கவனிக்கவேண்டியவை:

 

 • பால் நல்ல கெட்டியாக இருக்க வேண்டும். அப்போதுதான், ஜிகர்தண்டா ருசியாக இருக்கும்.
 • மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களின் அளவு ஒரு கப்புக்கு உரியதாகும்.
 • பாதாம் பிசின் சிறிது எடுத்தாலுமே, தண்ணீரில் ஊற ஊற விரிவடையும். ஆதலால், சிறிதளவு பாதாம் பிசின் எடுத்தாலே போதும்.
 • சில கடைகளில், ரோஜா சிரப்க்கு பதிலாக நன்னாரி சிரப்பும் பயன்படுத்துவார்கள்.
 • அதே போல, பாதாம் பிசினுக்கு பதிலாக கடல் பாசியும்  பயன்படுத்துவார்கள்.எப்படி இருக்கிறது இந்த ஜிகர்தண்டா? மறக்காமல் இந்த கோடை காலத்தில் வீட்டிலேயே தயாரித்து குடித்து பார்க்கவும். நீங்களே தயாரித்த ஜிகர்தண்டாவை புகைப்படம் எடுத்து மறக்காமல் ஷேர் செய்யவும்

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!