• Home  /  
  • Learn  /  
  • ஹோம்மேட் நியூடெல்லா – அவசரத்திற்கு உதவும்
ஹோம்மேட் நியூடெல்லா – அவசரத்திற்கு உதவும்

ஹோம்மேட் நியூடெல்லா – அவசரத்திற்கு உதவும்

13 May 2019 | 1 min Read

Dr. Mrinalini

Author | 86 Articles

 

நியூடெல்லாவை ருசித்துப்பார்க்காதவர் யாருமே  இருக்க முடியாது என்று தான் சொல்லியாக வேண்டும். இதனை சாக்லேட் ஹேசெல்நட் ஸ்ப்ரெட் என்றே கூறுவர். இதன் பிறப்பிடம் இத்தாலிய நாடு என்றாலும், இந்தியாவில் இது மிகவுமே பிரபலம். குழந்தைகள் இதனை பிரட், தோசை மற்றும் சப்பாத்தியுடன் ருசித்து சாப்பிடுவார்கள். வெளியில் இந்த நியூடெல்லாவை வாங்க போனால், அதிக விலை. நாள் போக போக விலை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது.

 

அப்படியுள்ள நிலையில் இதனை வீட்டிலேயே தயாரித்தால் எப்படி இருக்கும்? அதிக விலையும் கொடுக்க வேண்டியதில்லை. எல்லோராலும் இதனை பயன்படுத்தவும் முடியும்.

 

வெளியில் விற்கப்படும் நியூடெல்லாவுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, ஹோம்மேட் நியூடெல்லாவின் சேர்வை பொருட்களில் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா?

 

ஆம். வெளியில் விற்கப்படும் நியூடெல்லா, பாம் ஆயிலில்  தயாரிக்கப்படுகிறது. ஆனால் வீட்டில் தயாரிக்கப்படும் நியூடெல்லா, தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யில் தயாரிக்கப்படும். ஆதலால், ஹோம்மேட் நியூடெல்லாவுக்கு சத்தளவு அதிகம்.

 

ஹோம்மேட் நியூடெல்லாவின் ரெசிபி:

 

தயாரிக்கும் நேரம் – உடனே

ஆயத்த நேரம் – 10 நிமிடங்கள்

பரிமாறும் அளவு – 2

 

தேவையானவை:

 

  • ஹேசல்நட் – 150 கிராம் (1 கப்)
  • கொக்கோ பவுடர் – ¼ கப்
  • சர்க்கரை – 1 கப்
  • தேங்காய் எண்ணெய் – ¼ கப்
  • உப்பு – தேவையென்றால் மட்டுமே

 

செயல்முறை

 

  • மீடியம் சூட்டில் ஹேசல்நட்களை 10 நிமிடங்கள் வரை வறுக்கவும்; பிறகு அதன் தோலை நீக்கிக் கொள்ளவும்.
  • இந்த வறுக்கப்பட்ட ஹேசல்நட்களை மிக்ஸியில் இட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  • இனிப்புத்தன்மையை சமமாக்க தேங்காய் எண்ணெய், கொக்கோ பவுடர், சர்க்கரை ஆகியன கலக்கவும்.
  • வேண்டுமென்றால் உப்பையும் கலக்கலாம்.
  • பிறகு மென்மையான தன்மை ஏற்படும் வரை, நன்றாக மிக்ஸியில் மறுபடியும் அரைத்துக்கொள்ளவும்.
  • ஹோம்மேட் நியூடெல்லா ரெடி!!

 

எப்படி இருக்கிறது இந்த ஹோம்மேட் நியூடெல்லா ரெடி? இனி நீங்கள் இந்த பதார்த்தத்தை வெளியிலிருந்து வாங்க வேண்டியதில்லை.

 

மறக்காமல் இந்த ஹோம்மேட் நியூடெல்லாவை வீட்டிலேயே தயாரித்து பார்க்கவும். நீங்களே தயாரித்த ஹோம்மேட் நியூடெல்லாவின் புகைப்படத்தை மறக்காமல் ஷேர் செய்யவும். எப்படி இருக்கிறது என்ற உங்களின் அனுபவத்தையும் ஷேர் செய்யவும். கேட்க ஆவலுடன் இருக்கிறோம்.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.