கர்ப்ப கால வரியா? – பயப்பட வேண்டாம்!

கர்ப்ப கால வரியா? – பயப்பட வேண்டாம்!

13 May 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

 

கர்ப்ப கால வரி என்றால் என்ன?

 

 • கர்ப்ப கால வரியை லினியா னைக்ரா என்றும் கூறுவர். கர்ப்ப காலத்தில் உங்கள் வயிற்றின் மீது ஒரு கருப்பு நேர் கோடு தோன்றும். இதைத்தான் கர்ப்ப கால வரி என்று அழைப்பார்கள்.
 • இந்த வரி ஏற்கனவே இடம்பெற்று இருக்கலாம். மிகவும் லேசான கோடு ஆனதால், பலரும் கவனிக்காமல் போயிருப்பார்கள். கர்ப்ப காலத்திற்கு முன், இதனை லினியா அல்பா என்று அழைப்பார்கள்.
 • கர்ப்ப காலத்தின் இதன் நிறம் கருமையாகுவதால், இதற்கு லினியா னைக்ரா என்று பெயர் கிடைத்தது.
 • பொதுவாக கர்ப்ப கால வரி கருப்பு நிறத்தில் இருப்பதில்லை. பிரவுன் நிறமாக எடுத்து காட்டும் வண்ணத்தில் இருக்கும்.
 • ¼ முதல் ½ இன்ச் வரை விரிவாகவும், வயிற்றில் நீட்ட வாக்கில் தொப்புள் வரை நீண்டு இருக்கும்.
 • பிரசவ நேரம் நெருங்க நெருங்க, கர்ப்ப வரி கருமையாக மாறும்.
 • சில நேரங்களில், 5-வது மாதங்களிலேயே இந்த வரியைக் காணலாம்

 

கர்ப்ப வரி ஏற்படுவதன் காரணம் என்ன?

 

 • இந்த வரி தோன்றுவது மிகவும் இயற்கையான தன்மை தான்.
 • ஏன் இந்த மாற்றம் ஏற்படுகிறது என்று காரணம் தெரியாது. சிலர் இதன் காரணம் சுரப்பிகளின் அளவில் ஏற்படும் மாற்றம் என்று கூறுவர்.
 • நஞ்சுக்கொடியினால் இயக்கப்பட்ட மேலாநோசைட் சுரக்கின்ற சுரப்பிதான்  காரணம் என்றும் ஒரு கூற்று உள்ளது.
 • இந்த சுரப்பியினால் நிப்பிளை சுற்றியுள்ள இடமும் கருக ஆரம்பிக்கும்

 

இந்த கர்ப்ப வரி தோன்றாமல் தடுக்க இயலுமா?

 

 • நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. காரணம், இது இயற்கை முறைதான்.
 • ஆனால், வருத்தப்பட வேண்டாம்! குழந்தை பிறந்தவுடன் தானாகவே கர்ப்ப வரி மங்க ஆரம்பித்து காணாமல் போய் விடும்.
 • ஆதலால், நீங்கள் எந்தவித சிகிச்சையும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

 

பேனர் படம்: verywellfamily

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you