உடலில் நீர் கட்டுதா? - வெள்ளை பூசணி அவியல் உங்களுக்காக!

cover-image
உடலில் நீர் கட்டுதா? - வெள்ளை பூசணி அவியல் உங்களுக்காக!

 

வெள்ளை பூசணியில் அதிக நீரளவு இருப்பதால், உடலின் நீர்பற்றாக்குறையைத் தீர்க்கும். நீரிழிவு நோயைத் தடுக்கும். அதே போல், சிறுநீர் போக்கை அதிகமாக்குவதால், உடலில் எங்கேயும் நீர் கட்டாது. ஆதலால், கர்ப்பிணிகளுக்கு முக்கியமாக இந்த உணவை பரிமாறலாம்.  எடையும் கட்டுக்குள் இருக்கும்.

 

தேவையானவை

 

 • சீவி வெட்டப்பட்ட வெள்ளை பூசணி – ஒரு கப்
 • மஞ்சள் பொடி – கால் டீஸ்பூன்
 • உப்பு – தேவையானவை
 • பச்சை மிளகாய் 2-3
 • துருவிய தேங்காய் – ஒரு கப்
 • சீரகம் – 2 டீஸ்பூன்
 • இஞ்சி – ஒரு துண்டு
 • தயிர் – ஒரு கப்
 • தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
 • காய்ந்த சிவப்பு மிளகாய் – ஒன்று
 • கடுகு - ஒரு டீஸ்பூன்
 • கருவேற்பிலை 8-10
 • பெருங்காயம் - கால் டீஸ்பூன்

செயல்முறை

 

ஆயத்த நேரம்  : 6-10 நிமிடங்கள்

தயாரிக்கும் நேரம் : 16-20 நிமிடங்கள்

பரிமாறும் அளவு : 4

 

 • ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்க வைக்கவும். அதனுடன் மஞ்சள், உப்பு மற்றும் நேராக சீவிய ஒரு பச்சை மிளகாயை சேர்க்கவும். வெள்ளை பூசணியை சேர்த்து 5-6 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.
 • தண்ணீரை வேண்டுமென்றால் பயன்படுத்தி துருவிய தேங்காய், சீரகம், உப்பு, இஞ்சி மற்றும் மிஞ்சிய பச்சை மிளகாய் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
 • வெள்ளைப் பூசணியை வடிகட்டி அதன் சாரை ஒதுக்கி வைக்கவும்.
 • மறுபடியும் வடிகட்டின பூசணி சாரையும், பூசணியையும், நான்ஸ்டிக் பேனில் சூடாக்கவும்.
 • மிக்சியில் அரைத்த விழுதையும் அரை கப் தண்ணீரையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இரண்டு நிமிடங்களுக்கு சமைத்த பின், மூடி வைக்கவும். சிறிது உப்பை சேர்க்கவும். பிறகு தயிரை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு சற்று நேரம் அடுப்பின் தீயை குறைக்கவும்.
 • ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய்யை சூடாக்கவும். பிறகு கடுகு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் சிவப்பு மிளகாய் மற்றும் பெருங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.
 • இந்த கலவையை ஏற்கனவே தயாரித்த அவியலில் சேர்த்து உடனே மூடவும்
 • ருசி அப்படியே கட்டுக்குள் இருக்கும். பிறகு அடுப்பின் தீயை குறைக்கவும்.
 • சற்று நேரம் கழிந்த பின், மூடியை எடுத்துவிட்டு நன்றாக கலக்கவும்.  பிறகு பரிமாறவும். வெள்ளை பூசணி அவியல் ரெடி!!

 

சாப்பிட்டு பார்த்து மறக்காமல் உங்கள் கருத்தை ஷேர் செய்யவும். 

பேனர் படம்: padhuskitchen 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!