கர்ப்பப்பை சுளுக்கா? - கவனிக்கவேண்டியவை!!

 

கர்ப்பப்பை சுளுக்கு  என்றால் என்ன?

 

  • வயிற்றின் ஒரு பக்கமோ அல்லது இரு பக்கமோ இழுத்து பிடிப்பது போல தோன்றினால், அதற்கு, கர்ப்பப்பை சுளுக்கு  என்று கூறப்படும்.
  • முதல் ட்ரைமெஸ்டேரில் கர்ப்பப்பை சுளுக்கு அடிக்கடி ஏற்படும். பல கர்ப்பிணிகளுக்கும் இந்த அறிகுறி தமது முதல் ட்ரைமெஸ்டேரில் காணப்படும்.
  • பொதுவாக கர்ப்பப்பை சுளுக்கு என்பது சாதாரணமான ஒரு அறிகுறிதான். ஆனால், சில பல நேரங்களில், அது கவனிக்கவேண்டிய அறிகுறியாக மாறும்.

 

ஏன் கர்ப்பப்பை சுளுக்கு  ஏற்படுகிறது?

 

  • கர்ப்பப்பை விரியும்போது, சுற்றியுள்ள தசைநார்களும், தசைகளும் கர்ப்பப்பை நன்றாக விரிய துணை புரிகிறது.
  • பொதுவாக இருமல் வரும்போது அல்லது தும்மல் வரும்போது, கர்ப்பப்பை சுளுக்கு ஏற்படும்.
  • இரண்டாவது ட்ரைமெஸ்டேரில், சுற்று தசைநார் வலிதான் கர்ப்பப்பை சுளுக்கு ஏற்பட காரணமாகிறது.
  • இந்த சுற்று தசைநார் என்பது கர்ப்பப்பையை சுற்றி நன்றாக தாங்கும். கர்ப்பப்பை விரியும்போது, கீழ் வயிற்றில் சுருக்கென்று, ஏதோ குத்துவது போன்ற வலி உண்டாகும்.

 

கர்ப்ப காலங்களில் சாதரணமாக கர்ப்பப்பை சுளுக்கு ஏற்பட காரணம் என்ன?

 

  • வாயுத்தொல்லை
  • மலச்சிக்கல்
  • உடலுறவு

 

எந்த நிலைகளில் கர்ப்பப்பை சுளுக்கு ஆபத்தைக் குறிக்கும்?

 

  • எக்டோபிக் கர்ப்பம் – கர்ப்பப்பைக்கு வெளியே கரு உண்டாகுதல்
  • கருச்சிதைவு மற்றும் ரத்தப்போக்கு
  • ப்ரேஎக்லாம்ப்ஸியா – அதிக ரத்த அழுத்தமும், சிறுநீரில் புரதம் கழித்தல்
  • குறைப்பிரசவம் – 37 வாரங்களுக்கு முன்பே பிரசவ வலி ஏற்படுதல்
  • சிறுநீர்க்குழாய் தொற்று நோய்
  • நஞ்சுக்கொடி தகர்வு – குழந்தை பிறக்கும் முன்னே, நஞ்சுக்கொடி கர்ப்பப்பையிலிருந்து தனியே விலகுதல்

 

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

 

  • கர்ப்பப்பை சுளுக்குடன் கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்பட்டால், மருத்துவரை உடனே அணுகவும்.
  • அதிகளவில் குறைவில்லாத வலி
  • கர்ப்பப்பை சுருங்கலுடன் அடிவயிறு வலி
  • தோள் மற்றும் கழுத்து வலி
  • யோனி சுளுக்கு, ரத்தப்போக்கு, சோர்வு, வயிற்று கோளாறு

 

அடிக்கடி வரும் கர்ப்பப்பை சுளுக்குக்கு ஏதேனும் சிகிச்சை இருக்கிறதா?

 

  • அடிக்கடி உட்காரவும், படுக்கவும், மற்றும் உங்கள் நிலையை மாற்றிக்கொண்டே இருக்கவும்
  • வெந்நீரில் குளிக்கவும்
  • உடலை வருத்தாமல் எளிதான உடற்பயிற்சியை மேற்கொள்ளவும்
  • சூடு ஒத்தடம் கொடுக்கவும்
  • அதிகளவில் தண்ணீரை அருந்தவும்

 

பேனர் படம்: medicalnewstoday

 

#babychakratamil

Pregnancy

தமிழ்

Leave a Comment

Recommended Articles