கர்ப்ப காலத்தில் கழிப்பறையில் தரையில் குந்தி உட்காருவது பாதுகாப்பானதா?

cover-image
கர்ப்ப காலத்தில் கழிப்பறையில் தரையில் குந்தி உட்காருவது பாதுகாப்பானதா?

 

 • பொதுவாக குந்தி இருப்பதால், எளிதாக எந்த வித அழுத்தமும் இல்லாமல் விரைவாக மலங்கழிக்க முடியும். சரியான நிலையில் குடலில் ஒருவித அழுத்தம் ஏற்படுவதால்தான் எளிதில் மலங்கழிக்க முடிகிறது.
 • குந்தி இருந்து மலங்கழித்தால் மலச்சிக்கல் ஏற்படாது. மூலவியாதியும் ஏற்படாது. ஆதலால்தான், இந்திய கழிப்பறை மேல்நாட்டு கழிப்பறை போல் இல்லாமல் இருக்கிறது.
 • கர்ப்பிணிகள் அப்படி குந்தி இருந்துதான் மலங்கழிக்க வேண்டும் என்று மருத்துவர்களும் ஆலோசனை கூறுகின்றனர். குந்தி இருப்பதால் பல நேரங்களிலும் சுகப்பிரசவத்திற்கு வழி வகுக்கும். காரணம், பிரசவ நேரத்தில் குந்தி இருக்கும்போது, யோனிக்குழாய் சரியான விதத்தில் திறக்கப்படும்.
 • குந்தி இருந்தால் 20 முதல் 30 விழுக்காடு வரை யோனிக்குழாயின் சுற்று விரிந்து கிடைக்கும். கர்ப்பிணிகளின் இடுப்பெலும்புகளுக்கும் தொடையின் தசைகளுக்கும் பலத்தைக் கூட்டும். ஆதலால், சிசேரியன் ஏற்படும் வாய்ப்பும் நன்றாக குறைந்து விடும்.

 

ஆனால், இந்திய வகை கழிப்பறையை பயன்படுத்தும்போது, என்ன விதிமுறைகளை பின்பற்ற  வேண்டும்?

 

 • கழிப்பறையின் தரை வழுக்காமல் நன்றாக காய்ந்திருக்க வேண்டும்
 • தகுந்த காலணியை மட்டிக்கொள்ளவும். தண்ணீரில் வழுக்காமல் அந்த காலணி கெட்டியாக இருக்க வேண்டும்
 • கழிப்பறையில் தேவையான அளவு வெளிச்சம் இருக்க வேண்டும். இருட்டாக ஒரு போதும் இருக்கக்கூடாது
 • சட்டென்று வெளிச்சம் இல்லாமல் ஆகி விட்டால், ஒரு அவசர வெளிச்ச கருவியைப் பயன்படுத்தவும்
 • உங்களுக்கு வயிறு பெரிதாக இருக்கும் நேரத்தில் குந்துவதில் பிரச்சனை இருந்தால், சுவற்றில் நீங்கள் கை வைக்கும் இடத்தில் தகுந்த ஒரு கைப்பிடி இருப்பது மிகவுமே நல்லது. கீழிருந்து மேலே எழ இந்த கைப்பிடிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
 • உங்களின் உடல் நிலையை கவனியுங்கள். கீழே குந்தும்போது உங்களுக்கு அதிகளவில் வலியோ, அசௌகரியமோ தென்பட்டால், மேல்நாட்டு கழிப்பறையை பயன்படுத்தலாம்.
 • மலங்கழிக்க அதிகளவில் கஷ்டப்பட வேண்டாம்; அதுவும் பிரசவ காலம் நெருங்கும் தருணத்தில். அப்படி செய்யும்போது உங்களின் கர்ப்பப்பையில் அதிக அழுத்தம் ஏற்படுகின்றது.
 • பிரசவ நேரம் நெருங்கும் தருணத்தில் தேவையில்லாமல் குனிய வேண்டாம்.  
 • உங்கள் பிரசவத்தில் ஏதேனும் கோளாறு இருக்கும் என்று மருத்துவர்கள் ஏற்கனவே கூறி இருந்தால், நீங்கள் இந்திய வகை கழிப்பறையை பயன்படுத்த வேண்டாம்
 • உங்கள் வாழ்நாள் முழுதும் இந்திய வகை கழிப்பறையை பயன்படுத்தாமல் இருந்துவிட்டு, திடீரென கர்ப்பகாலத்தில் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், முதலில் மருத்துவரிடம் தெரிவித்து தகுந்த ஆலோசனை பெறவும்.
 • தப்பித்தவறியும் மேல்நாட்டு கழிப்பறையை இந்திய வகை கழிப்பறையாக பயன்படுத்தி விடாதீர்கள். அதாவது, மேல்நாட்டு கழிப்பறையின் மீது குந்தி இருந்து தப்பாக மலங்கழிக்காதீர்கள்.

 

இது குறித்து உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் மறக்காமல் கமென்ட் செய்யவும். உங்களுடையை கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்கப்படும்.

 

பேனர் படம்: bodyfabulous

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!