குழந்தைகளுக்கு நகம் வெட்டுகையில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!!!

cover-image
குழந்தைகளுக்கு நகம் வெட்டுகையில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!!!

 

குழந்தைகளுக்கு நகம் வெட்டுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, அதுவும் ஒருவகை சவாலே. சவாலை எதிர்கொள்ள இதோ சில வழிகள். நகம் வெட்ட பயந்து, அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டாலோ, தங்களைத் தாங்களே கீறிக் கொண்டு காயமாகிக்கொள்வார்கள், அழுவார்கள். குளிர் காலமாக இருக்கும் பட்சத்தில், கையுறைகளை (gloves) மாட்டி விட விடலாம், அதையும் சிறிது நேரத்தில் உருவி விடுவார்கள். வெயில் காலத்தில் இருக்கும் கசகசப்பில் கையுறை (gloves) பிள்ளைகளுக்கு கூடுதல் அசௌகரியம்.

 

பிறந்த முதல் சில வாரங்கள் நகங்களை வெட்டாது, குழந்தைகளுக்கு  என ப்ரத்யேகமாக கிடைக்கும் Nail Filer-கொண்டு, கூர்மையான நகங்களின் முனைகளை தேய்த்து மென்மையாக்கி விடலாம். குழந்தைகளுக்கு நகங்கள் வெட்ட, அவர்கள் உறங்கும் நேரமே உகந்தது. குளிக்க வைத்து முடித்ததும் நகங்களை வெட்டலாம். அந்த சமயத்தில் நகங்கள் மிகவும் மென்மையாகவும், வெட்டுவதற்கு எளிதாகவும் இருக்கும்.

 

குழந்தைகளுக்கென பிரத்யேகமாக கிடைக்கும் நகவெட்டிகள், கத்தரிக்கோல் இவற்றை பயன்படுத்தலாம். எவ்வளவு கவனமாக இருந்தாலும் நம்மை அறியாது, நகம் வெட்டுகையில் காயம் ஏற்பட வாய்ப்புண்டு. அப்படி ஏதேனும் ஏற்பட்டால் பயப்படாமல், நிதானமாக கையாள வேண்டும். காயம் ஏற்பட்ட விரலை குளிர்ந்த நீரில் காண்பிக்கலாம் அல்லது தூய்மையான மெல்லிய பேண்டேஜ் துணி கொண்டு அவ்விடத்தில் லேசாக அழுத்த வேண்டும். பெரும்பாலும், இரண்டு நிமிடங்களில் இரத்தம் நின்றுவிடும்; நிற்கவில்லையெனில் காயம் பட்ட இடத்தில் மஞ்சள் தூள் வைத்து லேசாக அழுத்தி பிடிக்கலாம் ரத்தம் நின்று விடும். நாம் காயங்களுக்கு பயன்படுத்தும் பேண்டேஜ்களை பயன்படுத்துதல் கூடாது.

 

அப்படியும் இரத்தம் நிற்காத நிலையில் மருத்துவரை நாடுதல் நன்று. நகங்களை கடித்து நீக்குதல் கூடாது. குழந்தைகளுக்கு ஏதேனும் காயம் இருந்து, அதன் வழியே, நம் வாயிலிருந்து கிருமிகள் குழந்தையை தாக்க வாய்ப்புள்ளது.  கவனத்துடன் செயல்படுவோம்.

 

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!