கர்ப்பகால இரத்தசோகை

cover-image
கர்ப்பகால இரத்தசோகை

 

இரத்தசோகை என்பது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதையே குறிக்கும். ஹீமோகுளோபின் (Hemoglobin) என்பது புரதம் (Protein), சிவப்பு ரத்த அணுக்களில் (Red Blood Cells) இந்த ஹீமோகுளோபின் எனும் புரதம் இருக்கும். நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் கொண்டு செல்லும் பணியை செய்கின்றன. இவை சரியான அளவில் இருக்க இரும்பு சத்து அவசியமாகிறது.  

 

பெண்கள் அதிகமாக இந்த இரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர். அதிகப்படியான பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இரத்தசோகை (Anaemia in Pregnancy) ஏற்படுகிறது. ஆனால் கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக சரியான அளவு இரத்தம் பெண்களின் உடலில் இருப்பது அவசியமானது. இரத்தசோகை ஏற்பட சில காரணங்கள் இவைகளாகவும் இருக்கலாம்: 

 • முதல் பிரசவத்தில் அதிக இரத்த போக்கு 
 • 20 வயதிற்கு முன்னர் தாயாதல் 
 • குறைந்தளவில் உணவு உட்கொள்ளுதல் 
 • இரும்புச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடாமல் இருத்தல் 
 • மாதவிடாயின் போது அதிக இரத்தபோக்கு 
 • மிகக்குறைந்த கால இடைவெளியில் இரண்டாவது குழந்தை பிறத்தல்
 • வைட்டமின் - சி உணவுகளை குறைவாக உண்ணுதல் 

 

அதே நேரம் ஒருவருக்கு இரத்த சோகை ஏற்பட்டு இருந்தால் அவரிடம் பின்வரும் அறிகுறிகள் வெளிப்படும். 

 • தலை சுற்றல்
 • தலைவலி 
 • மூச்சு விடுவதில் சிரமம்
 • நெஞ்சு வலி
 • எரிச்சலடைதல் மற்றும் கவனமின்மை 
 • வெளிர் நிறம் கொண்ட கண்களின் அடிப்பகுதி, மேல் அன்னம்/நகங்கள்
 • ஸ்பூன் வடிவில் நகங்கள் இருத்தல்  

 

இதனாலேயே கர்ப்பமடைந்து இருப்பதை உறுதி செய்து கொள்ள மருத்துவரிடம் பரிசோதனைக்கு செல்லும் போது மருத்துவர் கர்ப்பிணியை இரத்த பரிசோதனை செய்ய அறிவுறுத்துகிறார். 

 

குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் - சி நிறைந்த உணவுகளை உண்பதன் மூலம் இதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம். சிறிதளவு இரத்த குறைபாடு காணப்பட்டால் அதற்காக அதிகம் பயப்பட தேவையில்லை. உரிய சிகிச்சைகளை எடுத்து கொண்டால் போதுமானது. ஆனால் இதனை கவனிக்காமல் நீண்ட நாட்கள் விட்டுவிடுவது ஆபத்தில் கொண்டு சேர்க்கும். ஒருவர் இரத்தசோகையால் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றால் அது குழந்தையை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை. கர்ப்பத்தின் ஆறு மாதம் வரையும் இரத்த சோகையை சீர் செய்யாமலேயே வைத்திருந்தால், அது குறைந்த உடல் எடையுடன் குழந்தை பிறக்க காரணமாக அமைந்துவிடும்.   

 

இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். வேளா வேளைக்கு- உணவு உண்ண வேண்டும். மாதுளை, முட்டை, திராட்சை, மீன், ஸ்ட்ராபெர்ரி, ப்ரோகோலி, பீட்ரூட், பேரிச்சை ஆகியன அதிக நன்மை பயக்கும். ஆனால் ஒரு சில உணவு வகைகள் இரும்பு சத்தை உடல் உறிஞ்ச தடையாக அமையும். அவற்றில் முட்டைகோஸ், டீ, சோயா ஆகியன குறிப்பிடத்தக்கவை. இவற்றை பருகினால் இரண்டு மணி நேரம் கழிந்த பின்பு தான் இரும்பு சத்து உணவுகளை உண்ண வேண்டும். இவற்றின் மூலம் கர்ப்ப கால இரத்த சோகையை சீர்செய்யலாம்.

 

மேலும் துரதிருஷ்டவசமாக கருவிலேயே உப்பின் அளவு அதிகரிப்பதால் குழந்தை இறந்தே பிறக்கும் நிலையை இன்ட்ராயூட்டரின் டெத் என்பார்கள். அதனால் கர்ப்ப காலங்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து செக் -அப் செல்ல தயங்கக்கூடாது. வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனுக்காக அம்மா எப்போதும் தான் சாப்பிடும்  உணவுப் பொருட்களின் மீதான விழிப்புணர்வைத் தவிர்க்காமல் இருப்பது குழந்தைக்கும் அம்மாவுக்கும் நல்லது.

 

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும். 

 

#babychakratamil

#babychakratamil

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!