7 Oct 2019 | 1 min Read
Komal
Author | 138 Articles
தாய்ப்பால் – குழந்தைகளுக்கான வரப்பிரசாதம். தாய்ப்பாலின் மூலம் பிள்ளைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தைப் பெறுவதுடன், தாயும் சேயும் பிணைப்புற பெரிதும் உதவுகிறது. மருத்துவத்துறை பரிந்துரையின்படி குழந்தைக்கு 24 மாதங்கள் (2 வயது) வரை பால் புகட்டலாம். பெரும்பாலான பெண்களுக்கு தன் பிள்ளைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்கிறது. சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு சீக்கிரமே குறைந்துவிடுகிறது. இதன் காரணமாவது யாதெனில் பிரசவத்தின் போது 500 மி.லி மேலாக ரத்தபோக்கு இருந்திருக்கும். இன்னொன்று, ப்ளாசன்டா காரணமாகவும் குறைவான பால் சுரப்பு இருக்கும். பிரசவத்துக்கு பிறகான 3 நாளைக்கு இப்படி இருக்கலாம்.
பின்வரும் ஹார்மோன் சம்பந்தமான ஏற்ற/இறக்கங்களும் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்க காரணமாக அமையலாம்.
இது போன்ற பிரச்சனைகள் இருப்போர், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி தாய்ப்பால் சுரக்க மருந்துகளை உட்கொள்ளலாம். கருத்தடை மாத்திரைகள் முன்பு சாப்பிட்டு இருந்தாலும், ஹார்மோன் அளவு மாற்றமடைந்து தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். நிப்பிளில் வலி காரணமாக, குறைவாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும். அடிக்கடி தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும்.
முன்பை விட மார்பகம் கனமாக இல்லை என்று சில பெண்கள் கருதுகின்றனர். இந்த எண்ணமும் ஒரு காரணம். குழந்தைக்கு தாய்ப்பால் அதிகமாக தேவைப்படும் எனத் தாங்களாகவே ஒரு எண்ணத்தைப் போட்டு கொள்கின்றனர். ரெகுரலாக தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தை குறைவான நேரமாக மாற்றிக் கொள்வதாலும் தாய்ப்பால் சுரப்பு குறைவாகும்.
பெரும்பாலும் தவறான கருத்துகளும் குழப்பங்களுமே குறைவான தாய்ப்பால் சுரப்புக்குக் காரணமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள். பின்வரும் காரணிகள் கூட காரணமாக அமையலாம்.
குழந்தைக்கு ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுக்கும்போது, சரியான நிலையில் நீங்களும் குழந்தையும் இருக்க வேண்டும். தாய்ப்பால் சுரப்புக்காக நீங்கள் மார்பகத்தை அவ்வப்போது அழுத்தி விடுங்கள். மார்பகத்தை அளவாக பம்ப் செய்யுங்கள். தாய்ப்பால் நன்றாக சுரக்கும். தாய்ப்பாலை சுரக்க வைக்கும் உணவுகளை அதிக அளவில் சாப்பிடுங்கள். நீங்களும் குழந்தையும் நன்கு தூங்க வேண்டும். தூக்கம் குறைவானாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும்.
மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.