அடிக்கடி சோர்வாக உணர்கிறீர்களா?

ஒரு சிலர் எப்போதும் சோர்வாகவே காணப்படுவார்கள். அடிக்கடி தூங்கவும் விரும்புவார்கள். அப்படி நாள் முழுவதும் சோர்வுடன் காட்சி அளிப்பது பல்வேறு உடல்நல குறைபாடுகளை தோற்றுவிக்கும். ஒருசில அறிகுறிகளை கொண்டு அந்த சோர்வு எத்தகையது என்பதை கண்டறிந்து அதனை போக்கிவிடலாம்.

 

சிலர் எதையும் ஈடுபாட்டோடு செய்யும் மனநிலையில் இருக்க மாட்டார்கள். தான் பலவீனமாக இருப்பதாக கருதுவார்கள். உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பது இதற்கு காரணம். இரும்பு சத்து ஹிமோகுளோபினின் முக்கிய அங்கமாக இருப்பதால் அது குறையும்போது உடல் பலவீனமடையும். உடலில் உள்ள செல்களுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றாலும் பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். பின்வரும் உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் சோர்வை விரட்டலாம். 

 

 • பச்சை இலை காய்கறிகள், 
 • இறைச்சி, 
 • பயறு வகைகள், 
 • நீர்ச்சத்து கொண்ட பழங்கள், 
 • நட்ஸ் வகைகள் 

 

பகல் வேளையில் சோம்பலாக இருப்பதாக உணர்ந்தால் நிறைய பேர் காபி பருகுவார்கள். அது உடனடியாக சோம்பலை போக்கி உற்சாகத்தை தரும். ஆனால் அது சில மணி நேரங்கள் மட்டுமே நீடிக்கும். மேலும் அதிக அளவு சர்க்கரை கலந்த பானங்களை பருகும்போது அவை ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்கும். அதனால் உடனடியாக புத்துணர்வு கிடைக்கும். ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் சோர்வு எட்டிப்பார்க்க தொடங்கிவிடும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீரற்ற நிலையில் இருப்பது நல்லதல்ல. இதனை தவிர்க்க இவைகளை பின்பற்றுங்கள்: 

 

 • சீரான இடைவெளியில் சாப்பிட வேண்டும் 
 • நார்ச்சத்து / புரதம் அதிகம் கொண்ட உணவுகளை உண்ணவும்   

 

சிலருக்கு மனம் நிம்மதி இன்றி தவிக்கும். நாள் முழுவதும் காபின் கலந்த பானங்களை பருகுபவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படும். காபின் அதிகமாக உட்கொள்ளும்போது அது உடலையும், மனதையும் பாதிக்கும். காபி அதிகம் பருகுவதை தவிர்த்து மூலிகை டீ வகைகளை பருகி வரலாம்.

 

கவனச்சிதறல், ஆர்வமின்மை போன்ற காரணங்களாலும்  சோர்வு எட்டிப்பார்க்கும். அது அன்றாட செயல்பாடுகளை நேரடியாக பாதிக்கும். அப்போது மூளையின் செயல்பாடும் குறையும். அதனால் சோர்வு உண்டாகும். அதற்கு வைட்டமின் பி குறைபாடு காரணமாக இருக்கலாம். மது அருந்துவதாலும் இத்தகைய பாதிப்பு நேரும். இதனை போக்க

  

 • புரதம் நிறைந்த உணவு உண்ணல் 
 • மதுப்பழக்கத்தை தவிர்த்தல் 

 

காலை உணவை தவறாமல் உட்கொள்ள வேண்டும். சாப்பிடாமல் நீண்ட நேரம் வெறும் வயிற்றுடன் இருப்பது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும். மந்தமான உணர்வு ஏற்படும்.

 

 • சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளல் 
 • உடலுக்கும் மனதிற்கும் தேவையான ஓய்வும் அவசியம் 

 

மேலே கூறிய வகைகளில் உங்களுக்கு எவ்வகையான சோர்வு என்பதை கண்டறிந்து அதற்கேற்ப மருத்துவ உதவியை நாடலாம். 

 

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

 

#babychakratamil

#babychakratamil

#babychakratamil

Baby, Toddler, Pregnancy

Read More
தமிழ்

Recommended Articles