வயதிற்கேற்ப உடற்பயிற்சி - என்னவென்று அறிவீர்களா?

cover-image
வயதிற்கேற்ப உடற்பயிற்சி - என்னவென்று அறிவீர்களா?

உடற்பயிற்சி - இன்றைய நவீன உலகில் மிக அவசியமாகிறது. நம்மில் பெரும்பாலானோருக்கு அதன் அவசியம் தெரிந்தும் செய்ய போதிய நேரமில்லாமல் போகிறது. வெகு சிலர் நேரமிருந்தும் சோம்பேறித்தனத்தின் காரணமாக உடற்பயிற்சி செய்வதில்லை. உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவம் பற்றிப் பேசும் அதேவேளையில் நாம் நமது வயதுக்கும் உடல்நிலைக்கும் ஏற்ற சரியான உடற்பயிற்சியைத்தான் செய்கிறோமா என்பதும் மிக முக்கியம். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் என்னென்ன உடற்பயிற்சி  செய்யலாம், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.  

 

குழந்தைகள்:

 

 

குழந்தைகளை ஓடியாடி விளையாட அனுமதிக்க வேண்டும். வெளியே சென்று விளையாடுதல், மணல் விளையாட்டு, உடல் சார்ந்த விளையாட்டுக்கள்,  நீச்சலடித்தல், யோகா போன்றவற்றைக் அவர்களுக்குக் கற்றுத் தரலாம். வாலிபால், கிரிக்கெட், பாஸ்கெட் பால், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் பங்கெடுப்பதை ஊக்கப்படுத்தலாம். விளையாட்டின் மூலம் அவர்களின் நினைவாற்றல், கவனம், குழுத்திறன், எதிர்ப்பு சக்தி, சகிப்பு தன்மை ஆகியவை அதிகரிக்கிறது. வெற்றி, தோல்விகளை சமமாக எதிர்கொள்ளும் மனபலம் பெறுகிறார்கள். நடக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கலாம்.         

 

டீன் ஏஜ் (வாலிப) பருவத்தினர்:

 

 

பிள்ளைகள் வாலிப பருவத்தை அடைந்ததும் வாலிபால், கிரிக்கெட், பாஸ்கெட் பால், டென்னிஸ் ஆகியவற்றை ஊக்குவிக்கலாம். சைக்கிள் பயன்பாட்டை அதிகரிக்கலாம். பதினெட்டு வயது ஆனதும் ஜிம்முக்கு அனுப்பலாம். தினமும் 1 (அ) 2 மணி நேரம் ரன்னிங், ஜாகிங் போன்றவற்றில் ஈடுபடுத்தலாம். நோய்கள் எதுவும் இல்லாதபட்சத்தில், டீன் ஏஜ் பருவத்தினர் செய்யக்கூடாத பயிற்சிகள் என்று எதுவும் இல்லை. ஆனால், எந்தத் தேவையுமின்றி `சிக்ஸ் பேக்’ வைப்பது போன்ற முயற்சிகளைத் தவிர்க்கவும்.

 

நடுத்தர வயதினர்: 

 

 

நடுத்தர வயதினர் ஸ்ட்ரெச்சிங், வாக்கிங், ஜாகிங், டிரெட் மில், குறைவான எடையில் பளுதூக்குதல், நீச்சல் போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். நடுத்தர வயதில் கடினமான பயிற்சிகளைச் செய்யக்கூடாது. இதனால் கடுமையான தசைவலி, தசைப்பிடிப்பு ஏற்படும். உடற்பயிற்சியின் மீதான ஆர்வமும் குறைந்துவிடும். பெண்கள் பொதுவான எல்லா வீட்டு வேலைகளிலும் ஈடுபடலாம். நம்மில் பெரும்பாலான பெண்களுக்கான பிரச்சனை, மகப்பேறுக்கு பிறகான எடை அதிகரித்தல், இதற்கு தகுந்த உடற்பயிற்சியும், டயட் ஒன்றே தீர்வாக அமைகிறது. தரமான உடற்பயிற்சி நிலையம், ஊட்டச்சத்து நிபுணரை நாடுவதன் மூலம் பயனடையலாம்.         

 

முதியவர்கள்:

 

 

முதியவர்கள் மிக மிகக் குறைந்த எடையை (ஒரு கிலோ அளவுக்கான எடை) தூக்கலாம். எந்த நோய்களும் இல்லையென்றால் வேகமான நடைப்பயிற்சி கூட செய்யலாம். மூச்சு வாங்கும் அளவுக்கு எந்த உடற்பயிற்சியையும் செய்யக்கூடாது. ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு கட்டுக்குள் இருந்தால் ஜாகிங் செய்யலாம். ஆரோக்கியமாக உள்ள முதியவர்களும் ஜாகிங் செய்யும்போது கவனமாகச் செய்யவேண்டும்.

 

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட  வேண்டும்.

 

#babychakratamil #babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!