பட்டர் (butter) முறுக்கு!!

பட்டர் (butter) முறுக்கு!!

23 Oct 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

முறுக்கு அனைவருக்கும் பிடித்த ஒன்று. மாலை வேளையில் சூடான தேநீருடன் சரியான ஜோடி. ஒரு முறை செய்து வைத்து 10-15 நாட்கள் வரை பயன்படுத்தலாம். முறுக்கு பக்குவம் மிக முக்கியம். அதிக கடினமானால் கடிப்பது கஷ்டம், மிருதுவாகவும், மொறு மொறுவென்றும் இருப்பதே சரியான முறுக்கு பதம். இதோ உங்களுக்காக மொறு மொறு ரெசிபி!! 

 

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 1 கப் 

கடலை மாவு – 1 ஸ்பூன் 

வறுத்த பொட்டுக்கடலை மாவு – 2 ஸ்பூன் 

வெண்ணெய் – 4 ஸ்பூன் 

கருப்பு எள் – 1 ஸ்பூன் 

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவையான அளவு

 

செய்முறை:

  • அரிசி மாவு, கடலை மாவு, வறுத்த பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், எள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பக்குவத்திற்கு பிசையவும்.
  • முறுக்கு/இடியாப்பம் செய்வதெற்கென்று கிடைக்கும் பிரத்யேக கருவியை எடுத்து, உட்புறம் சிறிது எண்ணெய் தடவி பிசைந்த மாவை அதில் நிரப்பவும்.
  • முறுக்கு அச்சுகளில் ஒரு நட்சத்திர முனை (அ) வட்ட வடிவம் வேண்டுமெனில் அதற்கான அச்சை பயன்படுத்தி பிழியலாம்.

 

 

படம் : clubfactory

 

  • கடாயில் முறுக்கு மூழ்கும் அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் போதுமான சூடானதும் (சரியான எண்ணெயைக் காண குறிப்புகளைச் சரிபார்க்கவும்), மாவை அச்சு வழியாக சூடான எண்ணெயில் அழுத்தவும். நீங்கள் அதை கீற்றுகள் அல்லது வட்ட முருக்கு வடிவத்தில் செய்யலாம். சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒவ்வொரு முறுக்காக புரட்டவும், மறுபுறமும் வேகவிடவும்.
  • வெந்ததும் முறுக்கை பலகார ஜல்லடையில் சிறிது நேரம் வைத்து எண்ணெய் இறங்கிய பிறகு டப்பாக்களில் சேகரித்து வைக்கலாம். 

 

குறிப்புக்கள்:

  • வறுத்த பொட்டுக்கடலை மாவு தயாரிக்க – 2 ஸ்பூன் பொட்டுக் கடலையை வெறும் கடாயில் வறுத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். 
  • எண்ணெயின் வெப்பத்தை சரிபார்க்க – ஒரு சிறிய துண்டு மாவை எண்ணெயில் விடுங்கள். அது சீராக வந்தால், எண்ணெய் தயாராக உள்ளது. அது கீழே இருந்தால், எண்ணெய் போதுமான சூடாக இல்லை. நீங்கள் நடுத்தர – உயர் எண்ணெயை சூடாக்குவதை உறுதிசெய்து கொள்ளுங்கள், அது  போதுமான அளவு சூடாகிவிட்டால், முறுக்கை நடுத்தர வெப்பத்தில் வேக விடவும்.

 

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும். 

 

#babychakrahindi

A

gallery
send-btn

Related Topics for you