கர்ப்பகால மலச்சிக்கல்? - தீர்வாகும் ஒரு பழம்!!

cover-image
கர்ப்பகால மலச்சிக்கல்? - தீர்வாகும் ஒரு பழம்!!

 

கர்ப்பகாலத்தில் பலவகை உட்புற உடல் மாற்றங்கள் நிகழ்கின்றன. அதில் கர்ப்பிணிகளுக்கு பெரும் அவஸ்தையான ஒன்று மலச்சிக்கல். சிலருக்கு ஆரம்பம் முதலே இந்த பிரச்சனை தொடங்குகிறது, பலருக்கு 6 மாதம் கடந்து வயிறு பெரிதாக ஆரம்பித்தவுடன் சிறுநீரக அழுத்தத்தினால் மலச்சிக்கல் ஆரம்பமாகிறது. இதற்கான எளிய தீர்வு. கொய்யா பழம்.  

 

கர்ப்பிணி பெண்களுக்கு இந்த கொய்யா பழம் எவ்வகையில்  நன்மை பயக்கும்:

 

 • கொய்யா பழத்தில் வைட்டமின் சி அதிகளவில் இருக்கிறது. அதனால், கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. வளர்சிதை மாற்றம் அதிகரிக்க, இதனால் பல நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது.
 • கர்ப்பிணி பெண்கள் இரத்த அழுத்த விஷயத்தில் கவனத்துடன் இருத்தல் அவசியமாகிறது. கொய்யா பழம், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க, இதனால் கருச்சிதைவு, குறை பிரசவம் முதலியவை தவிர்க்கப்படுகிறது.
 • கர்ப்பிணிகளுக்கு, கர்ப்ப நீரிழிவு என்பது வழக்கமாக உண்டாகக்கூடியது தான். குறிப்பாக உங்களுடைய 24ஆம் வாரத்தில். இதனால், இரத்த சர்க்கரை நீரிழிவு என்பது ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதை தவிர்க்க கொய்யா சாப்பிடலாம்.
 • கர்ப்பிணிகளுக்கு ஹார்மோன்கள் ஏற்ற இரக்கத்தினால் மலச்சிக்கல் (அ) மூல நோய் ஏற்படலாம். கொய்யா பழத்தில் பெரிதளவில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் தீவிரத்தை குறைக்கிறது.
 • உண்ணும் ஆரோக்கியமான உணவை செரிமான மண்டலத்திற்குள் சரியான நேரத்தில் அனுப்ப கொய்யா உதவுகிறது. மேலும், நெஞ்செரிச்சல், குமட்டல் போன்ற பிரச்சனைக்கும் கொய்யா சிறந்ததாக அமைகிறது.
 • கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால், உங்களுக்கும், கருவில் இருக்கும் குழந்தைக்குமான கண் குறைபாட்டை போக்க கொய்யா உதவுகிறது.
 • கொய்யா பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி இருக்கிறது. இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது.
 • கொய்யா பழத்தில் வைட்டமின் சி, ஈ, கரோட்டினாய்ட், ஐசோ பிளேவனாய்ட், பாலிபீனால் என ஆக்சிஜனேற்ற பண்பு கொண்ட தன்மைகள் இருக்கிறது. இதனால் கிருமிகள் மற்றும் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு என்பது மிக குறைவாக அமைகிறது.
 • கொய்யாவில் இருக்கும் நார்ச்சத்து இதயத்துக்கு நல்லது. இதனால், உங்கள் இரத்த கொழுப்பு கட்டுப்பாட்டிற்குள் இருக்கக்கூடும். ஒருவேளை இரத்த கொழுப்பு கட்டுப்பாட்டில் இல்லையென்றால், இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கு வரலாம்.
 • கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம். இந்த கொய்யா பழத்தில் தேவையான அளவிற்கு இரும்பு சத்து இருப்பதால், கர்ப்பிணிகள் கொய்யா பழம் சாப்பிட்டு வரலாம்.
 • கொய்யா பழத்தில் கால்சியம் இருப்பதால், உங்கள் உணவு முறையில் கொய்யாவை சேர்த்துக்கொள்வது நல்லது.

 

இப்பழத்தை ஆரம்பநிலை கர்ப்பத்தில் உண்பதன் மூலம் காலை சுகவீனம், வாந்தி, குமட்டல் போன்றவை பெருமளவு குறையும். கர்ப்பிணிகளுக்கு வாழைப்பழமும் மலமிளக்கியாக பெரிதும் துணை புரியும்.   

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும். 

 

#babychakratamil #babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!