மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை ஆகியவற்றை சரியாக பின்பற்றுவதே, தாயும், சேயும் நலமாக இருக்க உதவுகிறது. இந்த காலகட்டத்தில் தான் புத்தகம் படிப்பது, நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்வது, சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுவது என, குழந்தையின் நலனை காப்பதற்கான முயற்சியின் அடித்தளம்.
இதில், திரவ உணவுகளான பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகள் ஆகியன அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவை பிரசவ காலத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது. மூன்றாம் மாத முடிவிலிருந்தே சிசு, உணவை தாயின் ரத்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்கிறது. ஆகவே இருவர் உணவும், ஒரே உணவாக அமைகிறது. கொழுப்பு, காரம், மற்றும் உப்பை சற்று குறைத்து, அரிசி கஞ்சியை நெய்யுடன் சேர்த்து உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் சிறிதளவு துளசியை உட்கொண்டு வந்தால் பிரசவ வலி குறையும்.
இப்பொழுதே வாங்கி 38% தள்ளுபடி பெறவும்!
ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும், எதிர்காலத்தில் மனதாலும், உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும், கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
- பதற்றத்தை குறைத்தல்: அதிக கோபத்தை தவிர்ப்பதன் மூலம் மனதிற்கும் உடலிற்கும் சாந்த உணர்வு கிடைக்கும்.
- தியானம்: மனதை லேசாக்கும் பயிற்சியான தியான பயிற்சியையும், மூச்சு பயிற்சியையும் செய்யலாம்.
- எடை மேலாண்மை: கர்ப்பகாலத்தில் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய ஒன்று. ஆசை, ஆசை என்று அளவுக்கு அதிகமாவும், நேர கட்டுபாடின்றியும் கண்டதையும் உண்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதனால் ஏற்படும் பின்விளைவுகள் ஏராளம்.
- ஊட்டச்சத்து கவனம்: உண்ணும் உணவின் அவசியத்தையும், ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு உண்ண வேண்டும். கர்ப்பகாலத்தில் நேர மேலாண்மை மிக அவசியமாகிறது. வேளா வேளைக்கு சிறு பகுதி அளவிலான உணவை உண்ணலாம். ஒரே நேரத்தில் அதிக அளவில் உண்பதை விட, 5 (அ) 7 முறையாக பிரித்து உண்ணலாம்.
- கர்ப்பகால உடற்பயிற்சி: உடற்பயிற்சிக்கு என்று தனியாக மெனக்கிடவேண்டிய அவசியம் இல்லை. வயிற்றுக்கு அதிக அழுத்தமில்லாத சிறு சிறு வீட்டு வேலைகளை செய்வதன் மூலம் உடற்பயிற்சியை உடலுக்கு அளிக்கலாம்.
- நீரேற்றத்துடன் இருத்தல்: கர்ப்பகாலத்தில் தண்ணீர் அதிகமாக அருந்தவேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 4 முதல் 6 லிட்டர் வரையிலான தண்ணீர் பருகலாம். அதுவே அவர்களை நீர் வறட்சியின்றி நீரேற்றத்துடன் தாய்யையும் சேயையும் காக்கும்.
- கர்ப்பகால நடைபயிற்சி: இது பெரும்பாலும் மருத்துவர்களால் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. காலை, மாலை இருவேளையும் நடப்பது சிறந்தது. 30 முதல் 45 நிமிடங்கள் நடப்பது போதுமானது. கடைசி 3 மாதங்களில் குழந்தை கீழிறங்கும் நிலைக்கும், தலை திரும்புவதற்கும் மிக உதவும்.
- சுறுசுறுப்பு: கர்ப்பம் தரித்தவுடன் 9 மாதமும் எப்போதும் தூங்கி ஓய்வு எடுக்கவேண்டும் என்றில்லை. மதியம் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம். பெரும்பாலும் உங்களை நீங்களே சுறு சுறுப்பாக வைத்திருப்பது உங்களுக்கும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நல்லது.
- மருத்துவர் தேர்வு: மகப்பேறுக்கான மருத்துவரை தேர்தெடுக்கும்போது அவசர நிலையில் கிடைப்பவராகவும், அவர் பெரும்பாலான சுக பிரசவம் பார்த்த அனுபசாலியாக இருத்தல் அவசியம்.
- தகவல் சேகரிப்பு: புத்தகத்தின் மூலமாகவோ (அ) இணையத்தின் மூலமாகவோ கர்ப்பம் சார்ந்த தகவல், உணவுமுறை, தடுப்பூசிகள், பிரசவம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளவது மனதளவில் உங்களை தயார்படுத்தும்.
- மன தைரியம்: மகப்பேறுக்கு சுய மனதைரியம் மிக அவசியம். மற்ற தாய்மார்களுடன் உரையாடுவதன் மூலம் டெலிவரி குறித்த சந்தேகங்களையும், அறிவுரைகளையும் பெறலாம்.
- உங்களை நம்புங்கள்: பிரசவம் என்பது அனைத்து பெண்களும் கடக்க வேண்டிய ஒன்று. தேவையற்ற பயத்தை தவிர்த்து, மன உறுதியுடன் பயணிக்க வேண்டும். எனது பாட்டி, தாய் அனைவரும் இம்முறையிலேயே பிரசவித்தனர், நானும் அவர்களை பின்பற்றுகிறேன் என்பதையும், என்னால் முடியும் என்றும் மனதில் கொள்ளுங்கள்.
- பிரசவ துணை: பிரசவத்திற்கு யார் உடனிருப்பார்கள், வீட்டிற்கு வந்தவுடன் குழந்தை குளிப்பாட்டுதல், மருத்துவமனையில் தங்களுடன் உதவிக்கு இருக்க போகிறவர்களை கடைசி மாத மருத்துவமனைக்கு செல்லும்போது உடன் அழைத்து சென்று, மருத்துவர், நர்ஸ் சொல்லும் குறிப்புகளை நினைவில் கொள்ள சொல்லுங்கள். ஏனெனில் நீங்கள் ஓய்வில் (அ) மயக்க நிலையில் இருக்கும்போது அவர் அதை உங்களுக்கு நினைவூட்டுவார்.
இப்பொழுதே வாங்கி 100% கேஷ் பேக் பெறுங்கள்!!
மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.
#babychakratamil