குழந்தைகள் ஏன் உணவு உண்ண அடம்பிடிக்கிறார்கள்? (12 மாதங்கள்+)

cover-image
குழந்தைகள் ஏன் உணவு உண்ண அடம்பிடிக்கிறார்கள்? (12 மாதங்கள்+)

பொதுவாக குழந்தைகள் ஒரு வயதுக்குப் பிறகு அடம்பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். எடை அதிகரிப்பு அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களின் முதல் பிறந்தநாளுக்குப் பிறகு மெதுவாகச் செல்லும். இது அவர்களின் பசியை நேரடியாக பாதிக்கிறது. எனவே, பெரும்பாலான குழந்தைகள் சில உணவுகளை  நிறைய சாப்பிடுகிறார்கள், மற்றவற்றை வேண்டாமென ஒதுக்குகிறார்கள். வற்புறுத்தி ஊட்டினாலும் வேண்டாம் என்று பிடிவாதத்தை தொடங்குகிறார்கள். இது மிகவும் பொதுவான அனைத்து பிள்ளைகளிடமும் உள்ள பழக்கமே

 

அவர்களின் பிடிவாதத்திற்கு சரணடைய ஆரம்பித்துவிட்டால் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு உட்கொள்ளும் பழக்கம் போய்விடும். மேலும் நொறுக்கு தீனியில் நாட்டம் செலுத்தவும் வாய்ப்பிருக்கிறது.  பின்வரும் குறிப்புகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அவர்களின் பிடிவாத குணத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

 

  • பெற்றோரே முன்னுதாரணம்:  குழந்தைகள் பெற்றோரை பார்த்து நகலெடுப்பதன் மூலம் எப்படி சாப்பிட வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள், எனவே குடும்பத்துடன் ஒன்றாக உணவுண்ணும் முறையை நடைமுறை படுத்துங்கள்.
  • பசியேற்படும் நேரம்: உணவுக்கு இடையில் 3 முதல் 4 மணி நேரம் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். இது அவர்களின் பசியை அதிகப்படுத்தும், அடம் பிடிப்பதை மறந்து கொடுக்கும் உணவை உண்பார்கள்.   
  • சுவாரசிய விரும்பிகள்: பொதுவாக குழந்தைகள் உணவுகளில் சுவாரசியத்தை எதிர்பார்ப்பார்கள், அது கண்ணைக்கவரும் வண்ணமாகவோ, வித்தியாசமான வடிவத்திலோ இருக்கும் போது உண்ண விழைவார்கள். அதனால் அடிக்கடி புதிய வகை (அ) வித்தியாசமான சுவையை அறிமுகப்படுத்தலாம். 
  • ஆரோக்கிய உரையாடல்கள்: உணவின் பெருமையையும், அதன் பலன்களையும் பிள்ளைகளுக்கு எடுத்து கூறிக்கொண்டே உணவளிக்கலாம். மேலும் இதை உண்பதால் அவர்கள் பலசாலிகளாகலாம் என்றும் அவர்களுக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு கூறலாம்.    
  • கவனத்தை திசை திருப்புதல்: அவர்களுடன் பேச்சு கொடுப்பதன் மூலமாகவோ (அ) அவர்களுக்கு பிடித்த வேளைகளில் ஈடுபட வைத்து உணவளிக்கும் முறையையும் கையாளலாம்.  
  • திரவ உணவுகள்: உணவுக்கு இடையில் பழச்சாறுகள் மற்றும் பால் கொடுப்பதைத் தவிர்க்கவும். உணவுக்கு இடையிடையே தண்ணீர் குடிப்பதையும் குறைக்கவும். ஒரு நாளில் 350-400 மில்லி பால் மட்டுமே வழங்குங்கள்.
  • பிடித்த உணவு உள்ளடக்கம்: பிள்ளைக்கு பிடித்த ஒரு பொருளையாவது உள்ளடக்கிய உணவை பரிமாறவும். இது அவர்களை உணவு உண்ண ஊக்கமளிக்கும். புதிய உணவை சிறிய அளவில் வழங்குங்கள்.
  • பொறுமை அவசியம்: பொதுவாக குழந்தைகள் ஒரு புதிய உணவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு 20 முறை வரை சுவைக்கிறார்கள், எனவே பொறுமையாக இருங்கள். ஒரு சில வருடத்தில் அவர்களின் அடம்பிடிக்கும் பழக்கம் மாறிவிடும்.

 

பிள்ளைகளுக்கு எப்பொழுதும் ஒரே வகை உணவு முறைகளை பின்பற்றாமல், அடிக்கடி வித்தியாசமாக சமைத்து கொடுக்கலாம். விரல் உணவுகள் (finger foods) - பாப்கார்ன், பொரிவகைகள், பொறித்த உணவுகள், அசைவ உணவுகள், பழத்துண்டுகள், வித்தியாசமான வடிவ இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவை. குடும்ப உணவுகளை 1 வயதிலிருந்து கட்டாயம் பழக்கப்படுத்த தொடங்க வேண்டும்.  

 

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

 

logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!