குழந்தையின் ஆரோக்கியமான எடைக்கான வழிகாட்டி

cover-image
குழந்தையின் ஆரோக்கியமான எடைக்கான வழிகாட்டி

ஆண்டு தோறும் உடல் எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள், கடுமையான குறுகியகால மற்றும் நீண்டகால உடல் உபதைகளான நீரிழிவு மற்றும் இதய நோய்களால் அவதிப்படுகிறார்கள்.

கர்ப்பிணிகள்  கர்ப காலத்தில் ஒவ்வொரு மாதமும் வஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளுதல் கருவின் உடல் இடை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போது காண்போம்.

 

முதல் மூன்று மாதங்கள்

 

மாதம் 1 & 2 

மகப்பேறு காலத்தின் மிக முக்கியமான நேரமான இம்மாதங்கள், பெண்கள் தாங்கள் கருவுற்றதை அறிந்து, ஏற்றுக்கொள்ளும் நேரம். இம்மாதங்களில் வயிறு பிரட்டல் மற்றும் குமட்டல் உணவு உட்கொள்ளுதல் மற்றும் ஊட்டச்சத்து இதற்கிடையில் குருக்கிடலாம். 

கண்டிப்பாக இக்காலத்தில் மற்றும் அதற்கு முன்னரும், ஊட்டச்சத்து மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.   Folate உட்கொள்ளுதலை அதிகப்படுத்தவேண்டும்.

 

 

 

மாதம் 3 

கரு, கருச்சவ்வு பை, நஞ்சு வளர்ந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டு ஓரு வாரத்திற்கான சத்தான உணவுகளை சாப்பிடு வது கருவிர்கக்கும் , கருவுற்றிருக்கும் பெண்ணின் உடல் எடையை ஏற்ற உதவும். தண்ணீர் உட்கொள்வது மிக முக்கியம், காலை வயிறு பிரட்டல், குமட்டல் காரணமாக, உடல் எடை குறைவதை இதனால் தவிர்க்கலாம்.

 

இரண்டாவது மூன்று மாதங்கள்

 

மாதம் 4  

இந்த மாதத்தில் குழந்தை நல்ல வளர்ச்சி அடையும். மகப்பேரின் இத்தருணத்தில் குழந்தையின் நரம்பு மண்டலம் வேலை செய்ய தொடங்கும். குழந்தையால் விரல் சூப்பவோ, கொட்டாவி, சோம்பல் முறிப்பது, ஆகியவற்றை செய்ய முடியும். ஜிங்க் மிகுந்த உணவான பீன்ஸ் ஆகியவற்றை உண்டால்  நீண்ட நேர பிரசவ வலி மற்றும் குறைந்த உடல் எடையோடு குழந்தை பிறப்பதை தவிர்க்க முடியும்.

 

மாதம் 5 

ப்ரெநடல் ஊட்டச்சத்து மாத்திரைகள் உட்கொள்வதை மறக்காதீர்கள். இதை தொடர்ந்து எடுத்து வந்தால் குழந்தை ஆரோக்கியமாக சரியான உடல் எடையோடு பிறக்கும். ஆரோக்கியமான உணவு பழக்கமும், உடற்பயிற்சி செய்து வருவது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.  குழந்தையின் தலையில் முடி வளர ஆரம்பிக்கும். மெல்லிய துளிர் முடிகள் குழந்தையின் தோள், முதுகு மற்றும் நெற்றியில் வளரும்.

 

 

 

மாதம் 6 

ஆறாவது மாதம் முடிவில் குழந்தையின் கை கால் ரேகைகள் தெரிய  தொடங்கும். கண் இமைகள் விரிந்து காணப்படும். கர்ப்பிணி பெண்கள் தங்கள் எலும்பு மற்றும் பற்கள் நலனை கருத்தில் கொண்டு பின் அளவான கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டு வர குழந்தைகள் உடல் எடை குறைவாக இருத்தலும், பிரசவ வலி சீக்கிரம் வருவதை தடுக்கலாம்.

 

கடைசி மூன்று மாதங்கள்

 

மாதம் 7 

கொழுப்பை சேமிக்கவும், உடல் உறுப்புகள் வளரவும் இம்மாதம் நிகழும். 200-500 ml பால்  உட்கொள்ளுுவது குழந்தை உடல் இடைக்்கு மிிகவும் நன்மை பயக்கும். 

சரியான புரதம் மற்றும் இரும்பு சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் வலி ஏற்படுவதை குறைய செய்யலாம்.

 

மாதம் 8 

இம்மாதம் குழந்தையின் மூளை அதீத வளர்ச்சி அடையும். முட்டை உட்கொள்ளும் பழக்கத்தால் ,அதிலிருக்கும் இரும்பு மற்றும் போலிக் சத்து பிறப்பு குறைகள் மற்றும் குழந்தை குறைந்த உடல் எடையோடு பிறப்பதை தவிர்க்கலாம்.

 

 

மாதம் 9 

பிரசவ தேதி நெருங்க நெருங்க, உடல் மிகவும் சோர்ந்தும் பதற்றத்துடனும் காணப்படும். இம்மாத இறுதியில் குழந்தையின் உடல் எடையில் பெரிதும் மாற்றம் இருக்காது. குழந்தையின் நுரையீரல் வளர்ச்சி அடைவது இம்மாதத்தின் மிக முக்கியமான விஷயம்

 

நல்ல சத்தான உணவுகளை அதிகம் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்து கொண்டால் தாய்ப்பால் கொடுக்கவும், உடலை பிரசவத்திற்கு பிறகு தேற்றவும் உதவும்.

 

சத்தான உணவுகளை சாப்பிட்டு வருதமில்லாமல், மன அழுத்தத்தை தவிர்த்து, நன்கு தூங்கி ஆரோக்கியமாக இருந்தால் கர்ப்பிணி பெண்களும், குழந்தையும் நல்ல உடல் எடையை பெறலாம். ஆரோக்கியமான தாயால் தான் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும்.

 

logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!